2941. Today released a children book by Udaishankar at Karaikudi M A M Mahal Book Fair.
2942. My book was released by Kalaivani , headmistress of Sirugappatti govt school and received by Jeeva Sinthan Sir, சிவகங்கைக் கிளைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம். உடன இருப்பவர் என்னை உதயசங்கரின் நூலை வெளியிட அழைத்த காரைக்குடி பாரதி புத்தகாலயத்தின் ஜீவாநந்தன் சார்
2943. ஆத்திச்சூடிக் கதைகள் என்னும் நூலை எஸ் எம் எஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் வெளியிட சிறுவன் ஹரீஷ் நாகநாதன் பெற்றுக் கொண்டார் . உடன் இருப்பர்கள் காரைக்குடி பாரதி புத்தகாலயத்தின் ஜீவாநந்தன் சார் & ராமசாமி தமிழ்க்கல்லூரியின் நாகநாதன் சார்
2944. காரைக்குடி எம் ஏ எம் மஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் அரங்கத்தில் எனது நூல்கள் கிடைக்கும்.
2945. Smule ல ஒரு ரிலேடிவ் பாடி அனுப்பினாங்க. கேட்டா சூப்பரா இருந்துச்சு.
போய்ப் பார்த்தா அங்கே நண்பர் Prabu Palanivelu 4000 சொச்சம் பாட்டுப் பாடி வச்சிருந்தாரு. அதுல ஒன்னைக் கடைசியாக் கேட்டேன்.
ஏழு பாட்டை அநாயாசமா அப்லோட் பண்ணிட்டு ஹெட்ஃபோனிலேயே கேட்டுட்டு இருந்தேன்.
வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிட்டு இருந்த பையன் ஹாலுக்கு வந்தான். பூனை வந்துச்சாம்மான்னு கேட்டான்
அப்புராணியா இல்லையேடான்னேன். யாரோ பூனையை சாக்குப் பையில போட்டு சாத்துற மாதிரி சத்தம் வந்துச்சேங்கிறான்.
இனிப் பாடுவேனா நான் 😉 . என் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வந்த எல்லாரும் நனையாம ஓடுங்க
2946. எப்புடி இப்பிடி ? தார் ரோட்ல குளம் வெட்டிருக்கீங்க
2947.இதுவரை ஏதும் செய்ததில்லை. இனியும் செய்ய ஏதுமில்லை. இந்த இரங்கலைத் தெரிவிப்பதைத் தவிர.
மல்லிகைக் கிழமைகள், சின்னச் சின்ன வார்த்தைகளில் அழகான மனம் நெகிழ்த்தும் கவிதைகள் இவற்றின் மூலமே பரிச்சயம்.
சென்ற வருடங்களில் உங்களுக்குத் தோள் கொடுத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அஞ்சலிகள் ஃப்ரான்சிஸ் கிருபா.
2948. Mohammad Nor Azli
காரைக்குடியில் வாழ்ந்த அனுபவத்தை தரும் நூல். அவ்வூரின் மனிதர்களை நமக்கு அரியத் தரும் சிறப்பான நூல். இவ்வெளியேனும் விரிவான நூலனுபவமளிக்க முயல்கிறேன். வேறு சில பணிகளால் நேரமமைத்துக் கொள்ள இயலவில்லை.
#நன்றி மொஹம்மது நூர் அஸ்லி. (சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் நூலைப் புத்தகக் கண்காட்சியில் இரு ஆண்டுகளுக்கு முன் வாங்கிப் படித்த நண்பரின் கருத்து இது.)
2949. ஒரு பத்துப் பேர் மட்டும் நட்பு வட்டத்தில் போதும்னு நினைக்கிறேன். அதுக்கு மேலே போஸ்ட்ஸ் ம் பார்க்க முடியல.
நானும் யார் பக்கமும் போவதில்லை. எனவே தினம் பத்துப் பேரை நட்பு நீக்கம் செய்யலாம் என நினைக்கிறேன். நீங்களும் அப்படியே செய்யலாம்.
2950. ஒரு பத்துப் பேரைத்தான் நட்புல வைக்கலாம்னு நினைச்சேன். 35 பேர் தேறிடுவாங்க போலேருக்கே
2951. திடீர் திடீரென நிறையப் பேர் பிரமாதமாக எழுதி கொஞ்சம் ஆயாசத்தோடு கூடிய வியப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள் !!!
2952. காருக்கு(ம்) (ஏர்) பிரஷர் கரெக்டா இருக்கணுமாம்
2953. புத்தகங்களின் வாசனைதான் நம்மை எப்படிக் குதூகலம் கொள்ளச் செய்கிறது ❤
#காரைக்குடி_புக்ஃபேர்
Bookfair at Karaikudi M A M Mahal.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காரைக்குடி பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 4 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி.
2954.காதோரம்
வந்து
ஒரு கீதமிசைக்கிறாய்..
ஒவ்வொரு
பாடலுக்கும்
இடைவெளி
விடுகிறாய்..
விளம்பர
இடைவேளை
என
ஏமாற்றுகிறேன்
செவிகளை..
யார் சொல்லி
பாடுகிறாய்
பைங்குயிலே!!
நான்
காகத்தின்
கூடு...
முட்டையோடு
தினம்
நீயும்
மெட்டு போடு...
வீணையின்
தினத்தில்
வீடு வந்தது
பாட்டு.
ஆயுதங்கள்
அலங்கரித்தேன்..
புத்தகங்கள்
பூஜையிட்டேன்..
காதுகளை
மட்டுமிங்கே
பாதியிலே
எடுத்துவிட்டேன்..
கானமென்னும்
ஆயுதத்தால்
கருணையின்றி
போர் செய்தாய்...
கேட்டவரம்
வேண்டி
நின்றேன்...
பாடி
என்று
நேர் செய்வாய்?
#மாணிக்க வீணையேந்தும் பாடலை சரஸ்வதி பூஜையின் போது பாடி அனுப்பி இருந்தேன். அதற்கு நண்பர் ஒருவரின் எதிர்வினை. நான் இப்போ ஸ்ம்யூலிலும் பாடி ( படுத்தி :p ) வருகிறேன் என்பதை நமது ப்லாகர் சமூகத்துக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :)
https://www.smule.com/ThenammaiLakshma
2955. ஃபோனைக் கையில் இறுக்கப் பிடித்திருப்பவர்களுக்கெல்லாம் இன்னொரு ராஜாங்கம் இருக்கிறது.
கையில் ஃபோன் இல்லாதவர்கள் இயல் உலகிலேயே ராஜா ராணிகளாய் இருக்கிறார்கள்.
#கன்ஃபர்ம்ட்..
2956. என்னுடைய சாம்ராஜ்யம் மூன்று குழந்தைகளால் ஆனது.
2957.நாம் செல்ஃபோனைக் கையில் எடுத்ததும் சும்மா கிடந்த வீட்டிற்குக் கண்ணும் காதும் ஏன் வாயும் கூட முளைத்து விடுகிறது
2958. சில வீடுகளில் பெரியவர்கள் தம் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதில்லை.
ஏற்கனவே ஒற்றுமையாயிருக்கும் தம் பிள்ளைகளுக்கு ஒற்றுமையின் சிறப்பைப் போதிப்பது வேடிக்கை.
2959.இன்னும் சில வீடுகளில் சில பெரியவர்கள் தங்கள் உடன்பிறந்தோரிடம் ஒற்றுமையாக இருந்துகொண்டு தன் பிள்ளைகளைப் பிரித்தாள்கிறார்கள்.
டிவைட் & ரூல் என்று ஆங்கிலேயன் சொன்னது இவர்களுக்குத்தானோ
2960. பார்த்ததும் பேருவகை ஏற்படுகிறது. திறமை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஆர்வம் பலருக்கு இருப்பதில்லை. இரண்டும் இருந்தாலும் பல சமயம் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. மூன்றும் பெற்றுள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்
**மெல்லிய நகைச்சுவை கூடிய நடை. சுவாரஸ்யமாக இருக்கிறது. படித்து முடித்தபின் என் பற்களை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
#என்னுடைய யூ ட்யூப் முயற்சிகள் & ப்லாக் போஸ்ட் சிர்க்கோனியம் பல்லே பற்றி நண்பர் ஒருவரின் கருத்து :) நன்றி நண்பரே.
டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)