எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

தாய் மரமும் இரு புது வலைப்பூக்களும்.

 2841. என் இருபத்திஒன்பதாவது மின்னூல் “தாய்மரம்”,அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 


விலை ரூ. 50/- மட்டுமே

https://www.amazon.in/dp/B08RS5BFP1 

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

தாய்மையும் பெண்மையும் சுயம் உரைக்கும் கவிதைகள்

2842. ஏகப்பட்ட தம்பிங்க இருக்காங்க.. பொங்கல் சீர் இன்னும் வரலையே.

2843. பரந்த மனப்பான்மையுள்ளவர்கள் குற்றம் பார்க்க மாட்டார்கள்.

2844. கம்பு தோசையும் மிளகாய் சட்னியும் சாப்பிட்டேன். இதப்  பார்த்ததும் திரும்பப் பசிக்குது 



2845. வேஃபில்ஸ். ❤ ப்ரஸ்ஸல்ஸில்


2846. செட்டிநாட்டு இலக்கியப் பட்டகசாலையில் கண்ணதாசனின் "ஆச்சி" தான் பெரியாச்சி என நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆத்தாடி அவுகளுக்கு ஆச்சி, பெரியத்தா மக(ள்) இருக்காகளாம்ல

அவுக பேரு "சோகி சிவா" வாம்.

-- வெளிவரப்போகும் என் நாவல் பற்றி மூத்த பதிப்பாளர் ஒருவரின் கருத்து. 

2847. பூப்பூத்த நந்தவனமே, நலம்சேர்க்கும் மூலிகைவனமே, பித்தாக அடிக்கும் பிச்சிப்பூ சிரிப்புக்காரியே வருக வருக .( சிலப்போ மெசேஜ் க்ளியர் செய்யும்போது எக்ஸிட் க்ரூப் குறுக்கால வந்துரும். பொட்டுன்னு அமுக்கிட்டமோ போயிருவோம். ) என்னை வரவேத்துட்டு நீ காணாம போனோன்னவுடனே கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டேன். வருக கண்மணி 😍 - ஒரு தங்கையை முகநூல் & வாட்ஸப்பில் வரவேற்றபோது :)  

2848.தைத்திங்கள் முகூர்த்தத்தில்
கொப்புடையாள் அருள்பொழிய
ஆறாவயல் அபிராமி
சேவுகனின் இதயம் கொண்டாள்
காரைக்குடி மணமகளாய்
செந்தில்நாதன் கைப்பற்றி
சொர்ணமயில் களித்திருந்து
இன்பமாய் இரு மழலை பெற
இளையோர்கள் வாழ்த்திடுவோம்
இறையருளை வேண்டிடுவோம்.

- ஒரு திருமணத்துக்கு எழுதிக் கொடுத்த குட்டி வாழ்த்து. 

2849. ராயல் கசப்பாக இருக்கும் காஃபி சர்க்கரை சேர்த்ததும் அசட்டுக் கசப்பாக ஆகிவிடுகிறது

2850 பணத்தின் மொழி புரிபவருக்கு மனத்தின் மொழி புரிவதில்லை.

2851. ஒரு மனிதனுக்குத் தாங்கொணாத் துயரம் தருவது தோழியின் கோபமே

2852. என்ன ஆனாலும் பூமிதான் எவ்வளவு பொறுமையோடும் கருணையோடும் நம்மைக் காக்கிறது. 

2853. கருத்துகளில் ஏற்பும் மறுப்பும் உண்டு என்னளவில் .அது பெரிய விடயமல்ல. 

அனுபவங்களிலிருந்தும் பல தகவல்கள்.பேச்சில் வெளிப்படும் ஆழமானவாசிப்பு அனுபவம். சோம்பல் இல்லா உழைப்பின் வெளிப்பாடு அது. 

மலர்ந்த முகத்தோடு தாங்கள் செய்திகளைப் பகிரும் பாங்கு. தங்கு தடை இல்லை. மிக மிக மகிழ்ந்தேன். அருமை.அருமை.

-- பொங்கலும் நாங்களும் என்ற தலைப்பில் நுழைபுலம் குழுமத்தில் நான் பேசியதை யூ ட்யூபில் கேட்ட இன்னொரு குழுமத்து அட்மினின் கருத்து. நன்றி ! 

2854. நல்லாப் பேசியிருக்கீங்க அண்ணி; I made those rice balls this year with pongal saadham! Thought of you, since you’re the one who showed me those, when I was in B.Sc!

-- நாத்தனாரும் வாழ்த்தி இருக்காங்க. 

2855. நமக்கு உயிர்கொடுக்கும் பூமியை சாமியாய் வணங்குதல், நன்றி தெரிவிக்கும் திருவிழா, அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், பானைகளின் கழுத்தில் மங்கல மஞ்சள் திருப்பூட்டும் நாளாம் நாளாம் திருநாளாம். 


2956. எத்தனை வகை பொங்கல் என்று பாருங்கள். மணவறைப் பொங்கல், பெண்ணழைத்த பொங்கல், திருமணம் ஆனதும் முனியையா கோவிலில் முதல் பொங்கல், அதன்பின் குலதெய்வக் கோவிலில் பொங்கல், சித்திரைப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கணுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், ஆடிமாதம் அம்மன் கோவில்களில் ( முத்தாத்தா, முத்துமாரி ) பொங்கல், ஏன் மார்கழியில் கூட 30 நாளும் கோவில்களில் பொங்கல் பிரசாதம், பூசையின்போது பொங்கல், வருடாவருடம் பிள்ளையார் கோவிலில் பொங்கல் (மஞ்சட்டி, அகப்பை, சிராட்டைத்தூள், அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் கூடையில் எடுத்துச் சென்று ஊருணியில் நீர் எடுத்துப் பொங்கலிட்டுப் படைத்தல்,)  , பொங்கலன்று சாமிவீட்டில்/ படைப்பு வீட்டில் பொங்கல், அதன்பின் வீட்டில் பொங்கல், பொங்கல் சீர், பொங்கப்பானை கொடுத்தல், பால் பொங்கிருச்சா எனத் தாய்வீட்டாரிடம் கேட்டல், பொங்கல் காசு கிடைத்தல், மாட்டுப்பொங்கலன்று பெண் குழந்தைகள் கொப்பி கொட்டுதல் என எத்தனை பொங்கல் நினைவுகள்.

2857. கொரோனா காலத்தில் எங்க பிள்ளைகளைக் காத்தது ஸொமோட்டாவாம், ஸ்விக்கியாம். :)



2858. டைம் எக்ஸ்பயரி ஆகி கெட்டுப்போனவுடனேதான் இது ஃப்ரிட்ஜில் இருப்பதே தெரியுது. :(



 2859. கூகுளில் 15 ஜிபிக்கு மேல் ஃபோட்டோக்கள் இருந்தால் ஜூன் 2021 இல் இருந்து அவை டெலிட் ஆகிவிடும் என்றொரு மெயில் வந்ததால் என் honeylaksh.blogspot.com- சும்மா என்ற வலைத்தளத்தில் இருந்து ஆன்மீக போஸ்டுகளை எல்லாம் இதற்கு மாற்றி இருக்கிறேன். இனி ஆன்மீகத்தகவல்கள் , பயணங்கள், எல்லாம் ”தெய்வங்களும் திருத்தலங்களும்” என்ற இந்தப் புது வலைப்பதிவில் இடம்பெறும். 

தெய்வங்களும் திருத்தலங்களும்
https://thenulakshman.blogspot.com/

2860. கூகுளில் 15 ஜிபிக்கு மேல் ஃபோட்டோக்கள் இருந்தால் ஜூன் 2021 இல் இருந்து அவை டெலிட் ஆகிவிடும் என்றொரு மெயில் வந்ததால் என் honeylaksh.blogspot.com- சும்மா என்ற வலைத்தளத்தில் இருந்து  சில போஸ்டுகளை எல்லாம் இதற்கு மாற்றி இருக்கிறேன். இனி உலக/ உள்ளூர்ப் பயணங்கள், தங்குமிடங்கள், உணவுகள், ஃபோட்டோகிராஃபி -மை க்ளிக்ஸ் எல்லாம்  ”சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும்” என்ற இந்தப் புது வலைப்பதிவில் இடம்பெறும். நன்றி மக்காஸ்.

சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும்
https://thenukannan.blogspot.com/


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...