எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 மார்ச், 2017

சரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புகழ் அமுதம்.

சென்ற மாதம் ஒருநாள் மதுரை கருப்பாயி ஊரணியில் இருக்கும் சரண்யா முதியோர் இல்லத்துக்குத் திருப்புகழ் பாராயணக்குழுவினருடன்  சென்றிருந்தேன்.

முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களாலும் ரோட்டரியாலும் மிக அருமையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த முதிய பெண்கள் இல்லம். அனைவரும் சீருடை போல மஞ்சள் புடவையும் சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தனர். அங்கே பல மதத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்புரை ஆற்ற வருவார்கள் என்றும் ஃபாதர், போன்றவர்களும் உரையாடுவார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவரும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.  இரண்டு பெண்கள் இங்கே பணி புரிகிறார்கள். இதனை நிர்வகிப்பவர் வீடு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறார். 

முதுமை, உடல் நலக்கோளாறுகள், மூட்டுவலிகள் போன்றவை இருந்தும் அந்தக் காலை நேரத்தில் குளித்துவிட்டு அழகாக அனைவரும் காத்திருந்த காட்சி மறக்க இயலாதது.
வாசலில் விதம் விதமாக வண்ணக் கோலங்கள்.

வியாழன், 30 மார்ச், 2017

தொலைந்த அசலும் துரத்தும் வட்டியும்.

நீராதாரங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினோம். நீரை விலைக்கு வாங்குகிறோம். கேனிலிருந்து குடிக்கும் ஒவ்வொரு டம்ளர் தண்ணீரும் அடுத்தவருக்குச் சொந்தமானதைத் திருடுகிறோமோ என்ற கழிவிரக்கத்தை உண்டாக்குகிறது.

வெள்ளமாய் மழை பெய்தும் தகுந்த சேமிப்பின்றி வரண்டு கிடக்கிறது நீராதாரங்கள். நீரின்றி விவசாயம் பொய்க்க வாங்கிய கடன் எல்லாம் சாவியானது.

செவ்வாய், 28 மார்ச், 2017

முயலும் மானும் மயிலும் பூக்களும் .

1341. எதைச் செய்யவேண்டும் என குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்பிக்கிறார்கள். எதைச் செய்யக்கூடாது எனப் பெற்றோருக்குக் குழந்தைகள் கற்பிக்கிறார்கள்.

1342. எலக்கணம் தலக்கணம் ரெண்டும் ஒண்ணா

1343. "I'll be back" - Terminator. Arnold.

"I'll find you and kill you"- Taken. Liam Neeson.

"The world is your oyster. Its up to you to find the pearls. - Pursuit of happiness. Will Smith.

“The only thing standing between you and your goal is the bullshit story you keep telling yourself as to why you cant achieve it. - The Wolf Of Wallstreet. Decaprio.

-- The dialogues which i remember the most.

1344. நான் ஒரு மேடைப்பாடகன். ஆயினும் இன்னும் மாணவன்.

1345. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பதை நிரூபிக்க அதன் ஒரு காலை உடைத்தலே போதுமானது. இலட்சம் சாத்யக்கூறுகளையும் முயன்றுபார்த்தால் முயலின் கதி அதோகதிதான்.

1346. வரட்டுப் பிடிவாதமும் வெட்டுப் பேச்சும் நட்பைப் பட்டுப் போகச் செய்யும்.

வள்ளல் அதியமான் கோட்டையும் கோட்டமும்

தர்மபுரி என்றழைக்கப்படும் ஊரின் அந்நாளைய பெயர் தகடூர். நான் பாடப்புத்தகங்களில் படித்த கடையெழு வள்ளல்களில் முதல் வள்ளலான அதியமான் நெடுமான் அஞ்சிக்குக் கட்டப்பட்ட கோட்டத்தைக் கண்டோம் ஹோசூர் செல்லும் வழியில்.அந்த வள்ளல் கோட்டை கட்டி ஆண்ட ஊர்தான் தகடூர் என்னும் தர்மபுரி.

தனக்குக் கிடைத்த நீண்ட நாள் வாழ்வழிக்கும் நெல்லிக்கனியை  தமிழின் பால் கொண்ட காதலால் ஔவைக்கு  அளித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி . பொதுவாக வள்ளல்கள் எல்லாரும் குறிஞ்சியை - செழிப்பமான மலைப்பகுதியைச் சேர்ந்த அரசர்களாகவே இருக்கிறார்கள். ( ஆய் - பொதிய மலை , ஓரி  - கொல்லி மலை, காரி - மலையன் ( கோவலூர் ),  நள்ளி - நளிமலை, பாரி - பறம்பு மலை, பேகன் - பொதினி மலை. இன்னும் ஆதன் ( மருதநில அரசன் )  , எழினி, கிழான், கிள்ளி, குமணன் , நன்னன், மாறன் ஆகியோரும் இன்னும் பலரும் உண்டு. புறநானூற்றில் இவர்களது வீரமும் புகழப்படுகிறது.

என்றைக்கு இருந்தாலும் இந்த வள்ளல்கள் பற்றிப் படிக்கும் போது ஏற்படும் பிரமிப்பு சொல்லில் சொல்லி மாளாது. அவர்களை ஓவியங்களாகவும் உருவங்களாகவும் சமைத்திருப்பதைக் கண்டபோது மகிழ்ச்சி பன்மடங்காகப் பெருகிற்று. அங்கே எடுத்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.


அஹா எப்பேர்ப்பட்ட தமிழ்க்காதல் . தன்னினும் தமிழின்மேல் கொண்ட பிரியத்தால் வாழ்நாள் நீட்டிக்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு அதிகன் வழங்கும் அழகுக் காட்சி. மாபெரும் மனம் கொண்ட மன்னன் வாழ்க.
கோட்டத்தின் நுழைவு வாயில்

ஞாயிறு, 26 மார்ச், 2017

புகை நம்விழிகளுக்கும் பகை

எனது மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு அ போ இருங்கோவேள் அவர்கள் கண்கள் பராமரிப்புப் பற்றி எழுதி இருக்கும் விழிப்புணர்வுக் கட்டுரைகளை அவ்வப்போது என் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சுற்றுச்சூழல் மாசுபாட்டில் மட்டுமல்ல நம் விழிகளுக்கும் பகையாகும் புகை பற்றி விரிவாக அவர் எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள். நன்றி இருங்கோவேள் சார்.

*********************

புகை நம்விழிகளுக்கும் பகை


கட்டுரை ஆசிரியர் :  
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை


ங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஒரு கொடிய நோய் புகைபிடித்தல் -  மற்றும் புகையிலை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது.

”புகைபிடித்தல் புற்று நோயை உருவாக்கும் என்பது ஒரு அப்பட்டமான பொய், புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் வருகிறது” -  என்று விவாதம் செய்பவர்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.



அது மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பது தெரிந்தும், அந்த குற்றத்தினை எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி செய்யும் மெத்த படித்த மேதாவிகளும் , உயர்ந்த பதவிகளில் இருக்கும்  மேல் தட்டு மக்களும் -  வேலை நேரத்தில் ரிலாக்சேஷனுக்காக கூட்டமாக வெளியே வந்து புகைபிடிப்பதும், படிப்பறிவே இல்லாத பாமர ஜனங்களும் புகைபிடிப்பதை தொடர்வதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் - புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் - புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று  எச்சரிக்கை வாசகங்களை ஒளிபரப்பி தனது சமுதாய பொறுப்பினை தட்டிக்கழிப்பதும்  தான் உச்சகட்ட வேதனை.

சனி, 25 மார்ச், 2017

சாட்டர்டே போஸ்ட். – டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் தயாரிப்புப் பற்றி இளங்கோவன் பி பாசிட்டிவ்.

சாட்டர்டே போஸ்ட். – வீணாகும் டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் பற்றி இளங்கோவன் பி பாசிட்டிவ். 

என் முகநூல் நண்பர் இளங்கோ பி பாசிட்டிவ் . இளங்கோ ரப்பர் பூக்கள் என்ற பெயரில் இருந்தபோதிலிருந்தே தெரியும். இரண்டு தேவதைகளின் தந்தை. பி.எஸ்.சி, பி.டெக், எம்.பி.ஏ முடித்தவர்.  25 ஆண்டுகாலப் பணி அனுபவம். கதை, கவிதை, படிப்பதிலும் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். 25 தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமல்ல விரைவில் ( மார்ச் 31 )  வெளியாகப் போகும் கவண் என்ற படத்திலும் வில்லனின் லீகல் அட்வைஸராக நடித்திருக்கிறார். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது வித்யாசமான ஒரு விஷயத்தைச் சொன்னார். வேஸ்ட் ப்ளாஸ்டிக் பைகள் சேமிக்கப்பட்டு ரோடு போடுவதில் உபயோகப்படுகின்றன என்று முன்பு கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் பழைய டயர்களை என்ன செய்வார்கள் என்று தோன்றியதில்லை. 

வெள்ளி, 24 மார்ச், 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்பு

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் திருவிழாவில் கலந்து கொண்டு கம்பரசம் பருகி இன்புற வாருங்கள்.

///அன்புடையீர்
வணக்கம்
இதனுடன் காரைக்குடி கம்பன் கழகம்  கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 7,8,9,10 ஆகிய நாட்களில்  நடத்த உள்ள கம்பன் திருவிழா அழைப்பினை  இணைத்துள்ளோம். அனைவரும் முன்னதாக வந்திருந்து கம்பன் தமிழ் பருகி இன்புற வேண்டுகிறோம்.  

செட்டிநாடும் செந்தமிழும், உலகத்தமிழ்க் கருத்தரங்க அழைப்பு.

செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் உலகத்தமிழ்க் கருத்தரங்க அழைப்பைப் பகிர்ந்திருக்கிறேன்.

////அன்புடையீர்

வணக்கம்
 
 காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா  ஏப் 7.8.9.10 ஆகிய நாட்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நிகழ உள்ளது. அதில் 9.4.2017 அன்று செட்டிநாடும் செந்தமிழும் என் ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது . அனைவரும் வருக. 
 

வியாழன், 23 மார்ச், 2017

அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.

கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையான காரைக்குடி வீடுகள் சில சிதைந்து வருகின்றன. இடித்து ஃப்ளாட்ஸ் ஆகிவரும் அவற்றை ஆவணப்படுத்த இவற்றை எடுத்தேன்.
அதே வீடுதான்
லாங்க் ஷாட்டில்

புதன், 22 மார்ச், 2017

சின்னவள் – ஒரு பார்வை.



சின்னவள் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 20 மார்ச், 2017

புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.



புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.

ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான்.  அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும்  “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.

ஞாயிறு, 19 மார்ச், 2017

காகிதம் பதிப்பகம்

நன்றி ராம் :)

////திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக, மாற்றுத்திறனாளிகள் நடத்துகிற காகிதம் பதிப்பகம் வழிகாட்டுகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 52 நூல்களை அச்சிடலாம். 


சனி, 18 மார்ச், 2017

சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.

சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.


 !



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

லேடீஸ் ஸ்பெஷல் கோலமயில் போட்டியில் வென்ற கோலங்கள்

மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலின் மகளிர் தின ஸ்பெஷலில் கோலமயில்போட்டியில் வென்ற கோலங்கள்.



பெண் விடுதலை.



திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் கேட்டிருந்த கேள்வி. 

பெண் விடுதலை பற்றி உங்கள் கருத்தை சுருக்கமாக எழுதி அனுப்ப முடியுமா?

நன்றி முருகதாசன் சார் !
 

Kanthaiah Murugadasan 

////உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பலரிடம் பெண் விடுதலை பற்றிய அவரவரின் பார்வையை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன். 26 எழுத்தாளர்களில் ஒருவராக எம்மோடு இணைந்து 'விழுதல் என்பது எழுகையே' என்ற கதை எழுதியவரும், கவிதைத் தொடரில் பங்குபற்றியவரும் எனது முகநூல்: வட்டத்தில் இருப்பவருமாகிய திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமும் இவ்வேண்டுகோளை வைத்தபோது இந்தியா கைதராபாத்திலிருக்கும் அவர் நேரமின்மைக்கு மத்தியிலும் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவர் எழுதி அனுப்பிய அவரது பார்வையைப் பதிவு செய்கிறேன்.////

------------------------------------------------------------
பெண் விடுதலை, பெண் சமத்துவம், பெண் உரிமை போன்றவை இக்கால கட்டங்களில் அடைந்து வரும் மாறுபாடு சிந்தனைக்குரியது. 

சென்ற நூற்றாண்டில் இருந்த அடக்குமுறையும் அடிமைத்தளையும் இப்போது அவ்வளவாக இல்லை. பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தாங்கள் எண்ணியதை எய்துகிறார்கள். ஆனால் இது நகர்ப்புற மெட்ரோபாலிடன் நகரப் பெண்களுக்கும் வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

வியாழன், 16 மார்ச், 2017

ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.

1321.ஜியோ வரும்முன்னாடி

நான்..:- ஐயோ ரோமிங்ல யார் பேசினாலும் எனக்கு பாலன்ஸ் டகால் டகால்னு போயிடுதேடா..

பையன் :- 24 மணி நேரமும் பேசணும், 365 நாளும் பேசணும்னா நீங்க நேர்ல போயித்தாம்மா பேசணும். ( ஒரு படத்துல சந்தானம் ஆர்யாகிட்ட சொல்வாராம்..)

நான்.. :- ஹிஹி..


1322. தற்கொலை என்பது முடிவல்ல.. மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் துன்பத்தின் ஆரம்பம்.

பிடித்தவர்களை விட்டு செல்வது என்பது கோழைத்தனம் என்பதை விட நம்மை விட்டு அவர்கள் தவிக்கட்டும் என்ற சுயநலமே ஆகும்.

1323. oru mokkai joke..

person 1:- physically, mentally healthy aa iruntha disease varathu..

person 2:- ennathu physical aa mentala iruntha health disease varatha..

hahaha munnadiyee soliten ithu mokkai joke nu.. so dont have kolaiveri makkas.

1324. முக்கியமான வேலை செய்துகிட்டு இருக்கும்போது டவுட் வந்தா அது அறிவுக்கோளாறா இல்ல ஆர்வக் கோளாறா.

1325. PSYCHOS..
,

Bus aa oturanga. Pakathu bus, container, truck, lorry, petrol tank ethulayavathu namala kondey adichuruvanga pola. Highways , byepass riders kku speed limit iliya

1326. WHITE KNIGHTS WITH WHITE LIES. :)

புதன், 15 மார்ச், 2017

பட்டாம்பூச்சியின் மென்சோகமும் வன்சோகமும்.

பீட்டில்ஸின் மனம் கரைக்கும் பாடல்களில் ஒன்று.

YESTERDAY ALL MY TROUBLES

https://www.youtube.com/watch?v=2uneYz201p0


இந்த ஹல்லேலூயாவைக் கேட்கும்போதெல்லாம் மனம் கசியும்.

Rufus Wainwright - Hallelujah (shrek)

https://www.youtube.com/watch?v=kB67HO8tkQs



செவ்வாய், 14 மார்ச், 2017

ஆறு வித்யாசம்.

இந்த ஆறு வித்யாசம் , எட்டு வித்யாசம் எல்லாம் குமுதம், தினமலர் பார்த்து வந்ததுதான்னு ஒப்புக்குறேன். அத கண்டுபிடிக்கிறதுல ஒரு குறுக்கெழுத்துப் புதிரையோ, சுடோகுவையோ போட்ட திருப்தி கிடைக்குது. :)

பொதுவா பயணப் பொழுதுகள் சுகமா இருக்கணும்னு நினைப்போம். அதுவும் இரவுப் பயணத்தில் ஏசி ட்ரெயின் என்றால் ரொம்பவே கன்வீனியண்ட். ஏசி பஸ்ஸும் கன்வீனியண்ட்தான். ஆனால் கொஞ்சம் குடலைப் புரட்டும் குலுக்கல் இருக்கும். ட்ரயின் எப்பவுமே தாலாட்டும். :) ரெண்டுலயும் போர்வை, தலையணை எடுத்துப் போக வேண்டாம்.

சாப்பிடக் கொள்ள, புக் படிக்க, பாத்ரூம் இன்னபிற வசதிகள் ட்ரெயினில் ( ஏசி ) ஆஹா ஓஹோதான். ப்ரைவசியும் கூட . சைட் லோயர் பர்த் கிடைத்தால் கொண்டாட்டம்தான். நம்ம ராஜாங்கம். திரையை மூடிக் கனவில் ஆழலாம். திரையை விலக்கி உலகைக் கண்டும் களிக்கலாம். 

ஏசி பஸ்ஸுக்கும் ஏசி ட்ரெயினுக்கும் ( செகண்ட் ஏசி, தேர்ட் ஏசி ) எடுத்த புகைப்படத்தில் உள்ள வித்யாசத்தைப் பார்த்தேன். ஹிஹி ஒரு இடுகை தேறிடுச்சு. :)

அப்புறம் ரெட் பஸ்ஸுல புக் பண்ணேன்பாங்க. ஆனா பஸ் ப்ளூ கலர்ல இருக்கும். ப்ளூ மவுண்டன்ல புக் பண்ணேன்பாங்க. உள்ள பூரா டிசைன் ரெட்டா இருக்கும் :)

பஸ்ஸுலயும் ட்ரெயின்லயும் உள்ள ஒரு ஒத்துமை அப்பர் பர்த் &  லோயர் பர்த். அதுக்கு ஏறப் படி இருக்கு ! . ஆனா பஸ்ஸுல ஏறி இறங்கினா கொஞ்சம் குடிகாரன் மாதிரி தடுமாற வேண்டி இருக்கும். ஏன்னா திடீர்னு ஒரு வளைவுல வளைப்பாங்க. கம்பியைப் பிடிச்சிட்டே போகணும் வரணும்.

ட்ரெயின் எல்லாம் சிங்கிள் பர்த் & பெட்தான். பஸ்ஸில் ஒரு சைட் சிங்கிள், இன்னொரு சைட் டபுள். இதுல வேறு வேறு ஆளுங்களுக்கு அலாட் ஆனா கஷ்டம். ஒரே ஃபேமிலின்னானும் வேறு வேறு ஆட்களுக்குக் கிடைச்சா கஷ்டம்தான். ஹஸ்பெண்ட் வைஃப்னா பரவாயில்லை. 

சனி, 11 மார்ச், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். தேனு சந்தித்த அழகு நிலைய அட்ராசிட்டீஸ்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். மன்னை சதிரா அவங்களோட பொண்ணு தேனுவோட எழுத்தும் கூட நகைச்சுவைல பட்டயக் கிளப்புது. 

தேனு என்னோட பள்ளித்தோழி. முகநூல்ல என் தோழி அவங்க அம்மா சரஸ்வதி ராஜேந்திரன் அவங்க . ஃப்ரெண்டானதோட மட்டுமிலாம நான் அவளோட செட் அப்பிடீங்கிறதையும் கண்டும் பிடிச்சிட்டாங்க. அவங்க பெரிய எழுத்தாளரா இருந்தும் நம்ம ப்லாக் & எழுத்தைப் படிச்சி நம்மையும் அவ்வப்போது ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுப்பாங்க. 

அவங்ககிட்ட சாட்டர்டே போஸ்ட் எழுதி வாங்கியாச்சு. அடுத்து யார்கிட்ட வாங்கலாம்னு இன்பாக்ஸ்ல தொடர்ந்து சாட்டர்டே போஸ்ட் அனுப்பவும்னு கெஞ்சிக் கேட்டு ( ஹிஹி )  காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்துட்டு மறந்துட்டேன். அதுல சிலர் பல நாள் கழிச்சுப் பார்த்துட்டு ரிப்ளை பண்ணாங்க. அதிர்ச்சி & ஆனந்த வைத்தியம் மாதிரி என் தோழி தேனுகிட்டேருந்து போனு வேற.

’டீ நீ யாரோன்னு நினைச்சு என்கிட்ட கேட்டியான்னு. இல்லடி நீதான்னு தெரிஞ்சே உன்கிட்ட கேட்டேன். ஏதாவது எழுதி அனுப்புன்னு ஒரே கெஞ்சா கெஞ்ச அவ எனக்கென்னடி தெரியும்னு மிஞ்ச. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக என் ப்லாகுக்காகன்னு ஐஸப் போட்டு யம்மாடி. ஒரு வழியா வந்தாச்சு ‘

அவகிட்டேருந்து ரிப்ளை வந்ததும் செம சுறுசுறுப்பாயிட்டேன். அவ அனுப்புனத பலமுறை படிச்சு ரசிச்சி சிரிச்சிட்டே இருக்கேன். அந்த இன்பத்தை நீங்களும் அடைய போஸ்ட் பண்ணிருக்கேன். 

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “. இதப் போயி நல்லால்லைன்னு சொன்னீங்களாமே சரஸ் மா. போங்க உங்களுக்கு வயசாயிட்டு. :) ஹாஹா. 

சரி இனி தேனு வெர்ஸஸ் தேனுவுக்காக எழுதியது.


////நான் பாட்டுக்கும் ஒரு மூலையிலே ஊர் பேர் தெரியாம
நானுண்டு என் வேலையுண்டுனு
இருந்தா...

வெள்ளி, 10 மார்ச், 2017

சாஸ்த்ரி பவனில் மகளிர்தினக் கொண்டாட்டம்.



சாஸ்த்ரி பவனில் இந்த வருடமும் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது செண்டரல் கவர்ன்மெண்ட் விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் & சாஸ்த்ரி பவன் எஸ் சி/எஸ் டி விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் சார்பில் கலந்து கொள்ளும்படி அழைப்புவிடுத்திருந்தார்கள். 

வியாழன், 9 மார்ச், 2017

கயல்விழியின் பார்வையில் சிவப்புப் பட்டுக்கயிறு நூல் விமர்சனம் யூ ட்யூபில்.


https://www.youtube.com/watch?v=8QcyYRRQxvw
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 2/3



https://www.youtube.com/watch?v=_0l6UyE-VsQ
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 1/3



https://www.youtube.com/watch?v=GK5v4twOcG8
Thenammai Lakshmanan Book Review By Kayalvizhi - Segment 3/3



அன்பும் நன்றியும் அணைப்புகளும்டா கயல். யூட்யூபில் பதிவேற்ற நாளாகிவிட்டது. மிக அருமையான உரை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டாய் கயல். எப்போதும் எனக்கு ஊக்கமளித்து வரும் தங்கை கயலுக்கும்,  மணிமேகலை மேம், லதானந்த் சார் & இளங்கோ சார் , வேடியப்பன் ஆகியோருக்கும் ( பத்மா இளங்கோ மேமுக்கும்  ) மனம் நிறைந்த அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன்.

புதன், 8 மார்ச், 2017

உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

மகளிர் தின நல்வாழ்த்துகள் மங்கைஸ், தங்கைஸ் , அம்மாஸ் & பாட்டீஸ் :)
'''இம்மகளிர் தினத்தில் எம் மூதாய் கிழவிகளுக்கு எம்மாலான சமர்ப்பணம்'''
-வரிகளுக்கு நன்றி -அக்கா Thozhar Jeevasundari Balan & மங்கை குழுவினருக்கும் கீதாமதிக்கும் அன்பும் நன்றியும்.

ஆயா அப்பத்தா பாட்டியாயா பேர் முதற்கொண்டு கேட்டுப் பதிவு செய்து வாழ்த்தி இருக்கும் மங்கை குழுவினருக்கு அன்பும் நன்றியும் அணைப்பும்.

நீரை சேமியுங்கள், பூமியைக் காப்பாற்றுங்கள். என்று மகளிர் புகைப்படங்களைக் கொண்டே மனதைத் தொடும் அழகிய நீலவண்ணத்தில் கொண்டு வந்திருப்பதும் சிறப்பு.

மாபெரும் காரியங்களை ஆற்றிவரும் அன்பின் மங்கையருக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிறக்க அன்பின் பிரார்த்தனைகள்.

அப்பத்தாக்கள் - தேனம்மை, மெய்யம்மை என்ற கோதை.

ஆயாக்கள் -  முத்துக்கருப்பாயி, அலமேலு

சின்னாயாக்கள் - கமலம், லெட்சுமி , ராசு , மீனி

பாட்டி ஆயாக்கள் :- விசாலாட்சி, சீதாலெக்ஷ்மி, மீனாட்சி ஆகியோருக்கும் மற்றுமுள்ள அன்பின் ஆத்தாக்களுக்கும் மனம் நிறை வணக்கங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

திங்கள், 6 மார்ச், 2017

வீரம் மிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. கோகுலம்


ராணி அப்பக்காதேவி சௌதா:-

பதினாறாம் நூற்றாண்டிலேயே போர்த்துகிசியர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர், கர்நாடகாவின் உல்லால் ராஜ்ஜியத்தின் சௌதா குடும்பத்தைச் சேர்ந்த வீரதீரமிக்க ராணி அப்பக்காதேவி சௌதா






ிஸ்கி :- விடைவந்தர்குக்கானாசர் கித்ுக்கு நன்றி. 


Related Posts Plugin for WordPress, Blogger...