சாட்டர்டே போஸ்ட்.
– வீணாகும் டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் பற்றி இளங்கோவன் பி பாசிட்டிவ்.
என் முகநூல் நண்பர்
இளங்கோ பி பாசிட்டிவ் . இளங்கோ ரப்பர் பூக்கள் என்ற பெயரில் இருந்தபோதிலிருந்தே தெரியும்.
இரண்டு தேவதைகளின் தந்தை. பி.எஸ்.சி, பி.டெக், எம்.பி.ஏ முடித்தவர். 25 ஆண்டுகாலப் பணி அனுபவம். கதை, கவிதை, படிப்பதிலும் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். 25 தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமல்ல விரைவில் ( மார்ச் 31 ) வெளியாகப்
போகும் கவண் என்ற படத்திலும் வில்லனின் லீகல் அட்வைஸராக நடித்திருக்கிறார்.
அவரிடம் சாட்டர்டே
போஸ்டுக்காகக் கேட்டபோது வித்யாசமான ஒரு விஷயத்தைச் சொன்னார். வேஸ்ட் ப்ளாஸ்டிக் பைகள்
சேமிக்கப்பட்டு ரோடு போடுவதில் உபயோகப்படுகின்றன என்று முன்பு கேள்வியுற்றிருக்கிறேன்.
ஆனால் பழைய டயர்களை என்ன செய்வார்கள் என்று தோன்றியதில்லை.
சில சமயம் ரோட்டில்
நடந்து போகும்போது வெல்டிங் கடைகளுக்கு அருகில் எரிக்கப்பட்டு மூக்கு புகையும் அளவு
கரியானதுண்டு. மூச்சுக் குழாயையும் பதம் பார்த்துவிடும். அந்தப் புகையைச் சுவாசித்தால்
கான்சர் வந்துவிடும் என்று சொல்வார்கள். சுற்றுச் சூழல் சீர்கேட்டில் முக்கியப் பங்கு
வகிப்பது இந்தப் புகைதான்.
இப்படி வீணாகும்
பழைய டயர்கள் குப்பையாக மலை போல் சேர்ந்து போய்விடும். அதைக் கொண்டும் டைல்ஸ் தயாரிக்கப்பட்டு
பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுவதை அவர் படங்களோடு விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது.
நாம் வெறுக்கும் ரப்பரும் ப்ளாஸ்டிக்கும் கூட நமக்கு உபயோகமாகத்தான் இருக்கின்றன. உபயோகிப்பதைப்
பொறுத்துத்தான் பொருளின் மதிப்பு மாறுபடுகிறது என்று புரிந்தது. ரீசைக்கிள் மூலம் தேவையான
பொருளாக மாற்றப்படும் ரப்பர் டைல்ஸ் பற்றிப் படித்துப் பாருங்கள்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை உண்டாக்கும் டயர்களில் டைல்ஸா .. ஆச்சர்யமா இருக்கே. அது பற்றி சொல்லுங்க இளங்கோவன்.
/////புத்தம் புதிதாய்
பிறக்கும் எந்த உயிரையும் பொருளையும் நேசிக்கும் மக்கள், வீணாகிப் போகும் பொருட்களைக்
கண்டு அது உணவாகட்டும், நேற்றைய வரை உபயோகப் படுத்திய பொருளா இருக்கட்டும் கவலையோ
அல்லது வேதனையோ அடைந்ததில்லை…. பழையன கழிதல் என்பதும் ஏற்றுக்கொள்வதும் இன்றைய வாழ்வின்
அடுத்த கட்ட வளர்ச்சி.
உபயோகப்படுத்தப்பட்ட
சில பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வருகின்றன..
உதாரணங்களாக பேப்பர், பிளாஸ்டிக், மரப் பொருட்கள்…
இந்த வகையில் நாம்
வாகனங்களில் பயன்படுத்தப்படும் “ரப்பர் டயர்கள்” வீணாகி போனதும் எப்படி மறுசுழற்சிக்கு
உட்படுத்தப்படுகின்றது என பார்ப்போம்.
செய்முறைகள்
1.
வீணாகிப்
போன ரப்பர் டயர்களின் ஸ்டீல் பீட் வொயர்களை அகற்றுப்படுகின்றன
2.
பெரிய
அரவை மில்லில் டயர்கள் போட்டதும், அந்த டயர்கள் சின்ன சின்ன அளவுகளின் வெட்டப்படுகின்றன
3.
அடுத்தடுத்த
அரவை மில்களில் போடப்பட்டு டயர்கள் துகள்களாக வெளியே வருகின்றன
டயர் துகள்கள் வெவ்வேறு நிறங்களில்
4.
துகள்களின்
சைஸ் பார்த்து அவை பிரித்தெடுக்கப்படுகின்றன
5.
டயர்களுடன்
அரைக்கப்பட்ட ஸ்டீல் துகள்கள் / நைலான் துகள்கள் பரித்தெடுக்கப்படுகின்றன
6.
பிரித்தெடுக்கப்பட்ட
ஒவ்வொரு பொருட்களும் அதனதன் பயன்பாட்டினை பொருத்து அவை விறக்கப்படுகின்றன… டயர் கம்பெனியினரே
இத்தகைய துகள்களை வாங்கி புதிய டயரின் வினைப்பொருட்களுடன் கலந்து புத்தம் புது டயர்களை
உற்பத்தி செய்கின்றனர்.
7.
இத்தகைய
ரப்பர் துகள்கள்… டயர் தேய்ந்து போனதும் ஒட்டப்படும் ரி-டெர்ட் வகையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
8.
ரப்பர்
துகள்கள் கலந்த தார் சாலைகள், மழைக்காலங்களில் தார்சாலைகளை அரிக்கப்படாமல் பாதுக்காக்கின்றன
9.
ரப்பர்
துகள்கள் கலந்த கலவைகள் பார்க்குகளில் பல வண்ணங்களூடன் பதியப்பட்டு அழகை அதிகரிக்க
பயன்படுத்துகின்றனர்.
அவைகளில் குறிப்பாக
ஒரு பொருளை பற்றி பார்ப்போம்.
“ரப்பர் டைல்ஸ்”
வீட்டிலும் அலுவலகத்திலும்
பதியப்படும் ரப்பர் டைல்ஸ் மேல்நாடுகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும்
செய்யப்படுகின்றன. அவை அந்தந்த நாடுகளின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன.
இவை வெப்பத்தையும் கடத்தாது, குளிரையும் கடத்தாது.
இந்த ரப்பர் டைல்ஸ்
மூலப்பொருளே டயர் துகள்கள் தான். அதனுடன் பசை சேர்க்கபட்டு மோல்டிங் முறையில் ரப்பர்
டைல்ஸ் உற்பத்தி செய்யப்படுகின்றது. மோல்டிங் முறை என்பது எந்த வடிவத்தில் டைல்ஸ் வேண்டுமோ
அந்த வடிவத்தில் டயர் துகள்கள் பசையுடன் கலக்கப்பட்டு நிறப்பொருள் சேர்க்கப்பட்டு
“ குறிப்பிட்ட வெப்பனிலையில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அழுத்தத்தில் “ செய்யப்படுவதாகும்.
மோல்டிங் செய்யப்பட்ட
டைல்ஸ் வெளியெ எடுக்கப்பட்டு தரம் பார்த்து விற்பனை செய்யப்படுகின்றன…
ரப்பர் டைல்ஸ்
பயன்பாடுகள்
1.
கால்களின்
பாதங்களில் ஏற்படும் வலியை அகற்றுகின்றன.
2.
நடைபாதையில்
பதிக்கப்படும் ரப்பர் டைல்ஸ், நடப்பவர்கள் கீழே தவறி விழுகையில் அடியெதுவும் படாமல்
காக்கின்றன
3.
விளையாட்டு
மைதானங்களில் ஓடி ஓடி ஆடும்பொழுது பாதுகாத்திட
4.
வாகன
பார்க்கிங் மைதானம்
5.
அலுவலகத்தில்
ஓசையின்றி மக்கள் நடந்திட பயன்படுத்தப்படுகின்றன.
6.
ஜிம்னாஸ்டிக்
மைதானத்தில் தரைதளம் பாதுக்காத்திட, பயிற்சிபொருட்கள் தரையை சேதப்படுத்தாமல் பாதுக்காத்திடவும்
பயன்படுத்தப்படுகின்றன.
டிஸ்கி :- அஹா ! மிக மிக அருமையாக
படங்களோடு தெளிவாக விளக்கியமைக்கு நன்றி இளங்கோ. வேண்டாதது என்று நாம் வெறுக்கும் பொருளிலும்
வேண்டியதைப் பெற்றுப் பயன்படுத்த முடியும் என்று விளக்கியது வெகு சிறப்பு. இந்த மாதிரி தளங்கள் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பெரும் பயன் தரக்கூடியது. இதன் பயன்பாடு வியக்க வைக்கிறது. A PRODUCT FROM THE WASTE. A SOPHISTICATED THING BY RECYCLING IT !
சாட்டர்டே போஸ்டில் நல்ல, அரிய, இன்றைய சூழலுக்குத் தேவையான தகவலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள்
நடித்து விரைவில் வெளியாகப் போகும் கவண் உங்களுக்குப் பேர் பெற்றுத் தரவும் இன்னும்
பல சிறப்புக்களைப் பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
அன்புள்ள பதிவருக்கு, இளங்கோவனின் அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். சாட்டர்டே போஸ்டில் நிறைய பயனுள்ள தகவல்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியிட்டு வருகின்றீர்கள்... வாழ்த்துகள். இப்பதிவை படிப்பவர்களும் பயனடைய வாழ்த்துகிறேன்...
பதிலளிநீக்குஎன்றென்றும் அன்புடன்
இளங்கோவன் பி பாசிட்டிவ்
நேர்மறைமனிதரின் நேர்மறை முயற்சியைப் பற்றி நேர்மறையான பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நம்குரல்
பதிலளிநீக்குநன்றி இளங்கோவன் :)
நன்றி ஜம்பு சார் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!