திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் கேட்டிருந்த கேள்வி.
பெண்
விடுதலை
பற்றி
உங்கள்
கருத்தை
சுருக்கமாக
எழுதி
அனுப்ப
முடியுமா?
நன்றி முருகதாசன் சார் !
Kanthaiah Murugadasan
////உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பலரிடம் பெண் விடுதலை பற்றிய அவரவரின் பார்வையை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன். 26 எழுத்தாளர்களில் ஒருவராக எம்மோடு இணைந்து 'விழுதல் என்பது எழுகையே' என்ற கதை எழுதியவரும், கவிதைத் தொடரில் பங்குபற்றியவரும் எனது முகநூல்: வட்டத்தில் இருப்பவருமாகிய திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமும் இவ்வேண்டுகோளை வைத்தபோது இந்தியா கைதராபாத்திலிருக்கும் அவர் நேரமின்மைக்கு மத்தியிலும் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவர் எழுதி அனுப்பிய அவரது பார்வையைப் பதிவு செய்கிறேன்.////
------------------------------------------------------------

பெண் விடுதலை,
பெண் சமத்துவம், பெண் உரிமை போன்றவை இக்கால கட்டங்களில் அடைந்து வரும் மாறுபாடு சிந்தனைக்குரியது.
சென்ற நூற்றாண்டில் இருந்த அடக்குமுறையும் அடிமைத்தளையும் இப்போது அவ்வளவாக இல்லை.
பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தாங்கள் எண்ணியதை எய்துகிறார்கள். ஆனால் இது
நகர்ப்புற மெட்ரோபாலிடன் நகரப் பெண்களுக்கும் வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கும்
மட்டுமே பொருந்தும்.
சிறு நகரங்களில்
பெண்களில் நிலைமை மெதுவாகவே முன்னேற்றமடைந்து வருகிறது. இப்போது வேலைக்குச் சென்று
வரும் பெண்கள் அதிகரித்திருக்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் இருக்கிறது. இரு சக்கர
நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். பல்வேறு கடினமான பணிகளிலும்
இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறார்கள்.
வேலை என்று வரும்போது தீர்மானமாக ஜெயிப்பவர்கள்
திருமணம் என்று வரும்போது சுயமாக முடிவெடுக்கும் திறனற்று இருக்கிறார்கள். அதே போல்
எதிர்பால் நட்பு, இணைய நட்பு, பார்ட்டி கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவம்
கொடுத்துத் தங்களைச் சிக்கலில் ஆழ்த்திக் கொள்ளும் பெண்களும் பெருகி வருகிறார்கள்.
சிலர் திருமண
உறவுகளுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை. குழந்தை, குடும்பம் என்பதைத் தொல்லையாகக்
கருதுகிறார்கள். சட்டங்களைக் காட்டிக் கணவர்களைப் பகடைக்காயாகப் பயமுறுத்துகிறார்கள்.
சம்பாதிக்கும் பணம் தரும் சுதந்திரத்தை அனுபவிக்க தனித்து வாழவே விரும்புகிறார்கள்.
என்னதான் எழுத்துச்
சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் எல்லாம் கிடைத்தாலும் சிந்தனையில்
தம்மைச் சீர்படுத்திக் கொண்டு சமூகத்துடன் ஒன்றுபட்டு செயலாற்றுவதன் மூலமே உண்மையான
பெண்விடுதலையை அடையமுடியும் என்பது திண்ணம்.
உண்மை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
ஆம் மிகச்சரி
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி பாலா சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!