திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் கேட்டிருந்த கேள்வி.
பெண்
விடுதலை
பற்றி
உங்கள்
கருத்தை
சுருக்கமாக
எழுதி
அனுப்ப
முடியுமா?
நன்றி முருகதாசன் சார் !
Kanthaiah Murugadasan
////உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பலரிடம் பெண் விடுதலை பற்றிய அவரவரின் பார்வையை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன். 26 எழுத்தாளர்களில் ஒருவராக எம்மோடு இணைந்து 'விழுதல் என்பது எழுகையே' என்ற கதை எழுதியவரும், கவிதைத் தொடரில் பங்குபற்றியவரும் எனது முகநூல்: வட்டத்தில் இருப்பவருமாகிய திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமும் இவ்வேண்டுகோளை வைத்தபோது இந்தியா கைதராபாத்திலிருக்கும் அவர் நேரமின்மைக்கு மத்தியிலும் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவர் எழுதி அனுப்பிய அவரது பார்வையைப் பதிவு செய்கிறேன்.////
------------------------------------------------------------

பெண் விடுதலை,
பெண் சமத்துவம், பெண் உரிமை போன்றவை இக்கால கட்டங்களில் அடைந்து வரும் மாறுபாடு சிந்தனைக்குரியது.
சென்ற நூற்றாண்டில் இருந்த அடக்குமுறையும் அடிமைத்தளையும் இப்போது அவ்வளவாக இல்லை.
பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தாங்கள் எண்ணியதை எய்துகிறார்கள். ஆனால் இது
நகர்ப்புற மெட்ரோபாலிடன் நகரப் பெண்களுக்கும் வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கும்
மட்டுமே பொருந்தும்.