நீராதாரங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினோம். நீரை விலைக்கு வாங்குகிறோம். கேனிலிருந்து குடிக்கும் ஒவ்வொரு டம்ளர் தண்ணீரும் அடுத்தவருக்குச் சொந்தமானதைத் திருடுகிறோமோ என்ற கழிவிரக்கத்தை உண்டாக்குகிறது.
வெள்ளமாய் மழை பெய்தும் தகுந்த சேமிப்பின்றி வரண்டு கிடக்கிறது நீராதாரங்கள். நீரின்றி விவசாயம் பொய்க்க வாங்கிய கடன் எல்லாம் சாவியானது.
கல்விக் கடனைக் கட்டுகிறோமோ இல்லையோ மேலும் மேலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஒவ்வொரு ஊரிலும் கூடிக் கூடி செல்ஃபோனில் இணையம் பார்த்துக் களிக்கும் இளையர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. சாஃப்ட்வேர் தொழில் நசித்து கொத்துக் கொத்தாக வேறு எம்ப்ளாயீஸை வெளியேற்றுகிறார்கள்.
கடன் கொடுக்கும் வங்கி வாராக் கடன்களால் மூச்சுத் திணறுகிறது. பொதுமக்களுக்கு அவை கொடுக்க வேண்டிய குறைந்த சதவிகித வட்டியையாவது கொடுத்தே ஆக வேண்டும். வங்கிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னே எல்லாம் வங்கிகள் இன்னொரு வங்கியுடன் மெர்ஜ் ஆகும். இப்போது எல்லாம் திவாலாகிவிட்டால் என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது. வட்டி விகிதங்கள் சரிந்திருந்தாலும் முதியவர்கள் அநேகர் தொல்லையில்லா வட்டி என்று வங்கிகளில்தான் நிரந்தர வைப்பு நிதியில் போட்டிருக்கின்றார்கள்.
கோமாவுக்கு முந்தைய ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இனி அந்த ஆண்டவந்தான் நம்மைக் காப்பாத்தணும்.
...ஆம் சகோ வங்கியின் புதிய அறிவிப்புகள் பயமுறுத்துகின்றன....
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி துளசி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!