புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். மன்னை சதிரா அவங்களோட பொண்ணு தேனுவோட எழுத்தும் கூட நகைச்சுவைல பட்டயக் கிளப்புது.
தேனு என்னோட பள்ளித்தோழி. முகநூல்ல என் தோழி அவங்க அம்மா சரஸ்வதி ராஜேந்திரன் அவங்க . ஃப்ரெண்டானதோட மட்டுமிலாம நான் அவளோட செட் அப்பிடீங்கிறதையும் கண்டும் பிடிச்சிட்டாங்க. அவங்க பெரிய எழுத்தாளரா இருந்தும் நம்ம ப்லாக் & எழுத்தைப் படிச்சி நம்மையும் அவ்வப்போது ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுப்பாங்க.
அவங்ககிட்ட சாட்டர்டே போஸ்ட் எழுதி வாங்கியாச்சு. அடுத்து யார்கிட்ட வாங்கலாம்னு இன்பாக்ஸ்ல தொடர்ந்து சாட்டர்டே போஸ்ட் அனுப்பவும்னு கெஞ்சிக் கேட்டு ( ஹிஹி ) காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்துட்டு மறந்துட்டேன். அதுல சிலர் பல நாள் கழிச்சுப் பார்த்துட்டு ரிப்ளை பண்ணாங்க. அதிர்ச்சி & ஆனந்த வைத்தியம் மாதிரி என் தோழி தேனுகிட்டேருந்து போனு வேற.
’டீ நீ யாரோன்னு நினைச்சு என்கிட்ட கேட்டியான்னு. இல்லடி நீதான்னு தெரிஞ்சே உன்கிட்ட கேட்டேன். ஏதாவது எழுதி அனுப்புன்னு ஒரே கெஞ்சா கெஞ்ச அவ எனக்கென்னடி தெரியும்னு மிஞ்ச. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக என் ப்லாகுக்காகன்னு ஐஸப் போட்டு யம்மாடி. ஒரு வழியா வந்தாச்சு ‘
அவகிட்டேருந்து ரிப்ளை வந்ததும் செம சுறுசுறுப்பாயிட்டேன். அவ அனுப்புனத பலமுறை படிச்சு ரசிச்சி சிரிச்சிட்டே இருக்கேன். அந்த இன்பத்தை நீங்களும் அடைய போஸ்ட் பண்ணிருக்கேன்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “. இதப் போயி நல்லால்லைன்னு சொன்னீங்களாமே சரஸ் மா. போங்க உங்களுக்கு வயசாயிட்டு. :) ஹாஹா.
சரி இனி தேனு வெர்ஸஸ் தேனுவுக்காக எழுதியது.
////நான் பாட்டுக்கும் ஒரு மூலையிலே ஊர் பேர் தெரியாம
நானுண்டு என் வேலையுண்டுனு
இருந்தா...
நானுண்டு என் வேலையுண்டுனு
இருந்தா...
இந்த தேனு சும்மா இல்லாம என்னை வம்பிழுக்குதே...
திடீர்னு ஒரு மெசேஜ்...சாட்டர்டே போஸ்ட்டு னு..
சரி...யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கு மாற்றி அனுப்பிட்டியா னு கேட்டேன்..
இல்லை பா...உனக்கு தான் சொல்ல...எனக்கு மயக்கம் வராத குறை தான்..
எனக்கு என்ன எழுத தெரியும்?
அதை விட வீட்டில அனுமதி வாங்கணுமே...
என் ப்ரெண்ட் என்னை எழுத சொல்றாங்க...னு மெதுவா நான்
இழுத்ததும் பாவம் அவங்களுக்கு
நேரம் சரியில்லையோ னு ஒரு குரல்...
ஆரம்பமே சரியில்லையே...
என் மகளிடம் மெதுவா பேச்சுக் கொடுத்தேன்...
அவளோ என்ன வேணும்னாலும் செய்யுங்க...ஆனா என்னை படிச்சு பார்க்க சொல்லி கொலை பண்ணக் கூடாது னா...
இது என்னடா நம்ம எழுத்துக்கு வந்த சோதனை னு
அடுத்து தம்பி கிட்டே கேட்டா அவன் நிதி ஆலோசனை எழுத சொல்லி சதியிலே மாட்டி விடப் பார்த்தான்..
அதுக்குள்ள வேலைக்காரம்மா ஓடி வந்து பலகாரம் பட்சணம் னு
ஏதாவது செஞ்சு பார்த்து எழுதுங்க னு இலவச அறிவுரை..
பாவம் அதுக்கு வாய் நமநமனு
இருந்திருக்கும் போல...
சங்கடமான சமையலை விட்டு
சங்கீதத்தை பத்தி எழுதலாம்னா
மும்மூர்த்திகளும் பாடிக் கிழிச்சதே போதும்...எழுதி வேற
செய்யணுமா னு எச்சரிக்கை செஞ்சாங்க ..
சங்கீதத்தை பத்தி எழுதலாம்னா
மும்மூர்த்திகளும் பாடிக் கிழிச்சதே போதும்...எழுதி வேற
செய்யணுமா னு எச்சரிக்கை செஞ்சாங்க ..
அப்ப என்ன செய்யலாம்...
இருக்கவே இருக்கு எவர்கிரீன் சப்ஜெக்ட்...பெண்ணுரிமை...
அவ்வளவு தான் பேஜாராயிடுவ..
மேலே விழுந்து பிறாண்டிடுவாங்கனு உள்மனசு எச்சரிக்க...
அவ்வளவு தான் பேஜாராயிடுவ..
மேலே விழுந்து பிறாண்டிடுவாங்கனு உள்மனசு எச்சரிக்க...
முகநூல் தம்பி ஒருத்தர் எண்டர் ஆகி..அழகுசாதனமும் பெண்களும் ...இந்த தலைப்பில எழுதுங்க என்றார்...
பயபுள்ள எதைப் பார்த்து மிரண்டதோ? னு நினைச்சுகிட்டேன்..இருந்தாலும் கருத்தா பேசற மனுஷன் கன்சிடர் பண்ணலாமேனு யோசிச்சா...
வசமா சிக்குனுச்சு ஒரு beauty parlour opening invitation...
ஆஹா...னு ஒரு ஷொட்டு வச்சுகிட்டு போனேன்..
பக்காவா ஹைடெக் கா இருந்தது..
உள்ளே நுழைஞ்சா......
பெரிய கண்ணிமைகள் பறவை மாதிரி அதுக்கு மேலே நீல கலர்...
தலையோ குழந்தைங்க பெயிண்டை கொட்டிக் கவிழ்த்த மாதிரி பல கலர்லே...அடிக்கிற ஆரஞ்சு கலர்ல இருக்கிற உதட்டைக் குவிச்சு விநோதமான குரலில் வணக்கம் வேற.....
ஐயோடா சாமி...வேற லோகத்துக்கு வந்திட்டேனோ....
கூட வந்திருந்த தோழி..இவங்க நேபாளி பெண்கள் னார்...
மெனுகார்டு மாதிரி ஒண்ணைக் கொடுத்து புரியாத பாஷைல ஏதேதோ சொல்ல...மூஞ்சியைக் கொடுக்க பயந்து கையையும் காலையும் நீட்டி முழுசா இரண்டாயிரம் ரூபா...
தேனு...இரு வந்து உன்னை வச்சுக்கிறேன்...
ஒருவழியா தப்பிச்சு வந்தா கீரிப்பிள்ளையை தலைல வச்சுகிட்டு ஒருத்தன்..
ஆண்களுக்கும் ஆரம்பிச்சிருக்கோம் னு நோட்டீஸ் நீட்டறான்...
பின்னாடியே ஸ்பிரிங்..ஸ்போக்...ஸ்பைக் னு ஏதேதோ சொல்லிகிட்டு சின்னப்பசங்க....
தேனு...உனக்கு இது தேவையா?
இது என்னையே கேட்டுக்கிறேன்...
அன்புடன்
தேன்மொழி ராஜகோபால்
டிஸ்கி:- ஹேய் தேனு உனக்கு ரொம்ப சூப்பரா எழுத வருதுடி. அதுலயும் நகைச்சுவைல பிச்சு வாங்குறே. டயலாக் ரைட்டரா வரலாம். பாரு வீட்ல உள்ளவங்க சொல்பேச்சு கேக்காதே. நீட்டா சென்னைக்குக் கிளம்பு. ப்ரைட்டான எதிர்காலம் காத்துக்கிட்டு இருக்கு.
அதிலும் பெண் சொன்ன என்ன படிக்க சொல்லி கொலை பண்ணக் கூடாது. தம்பி சொன்ன நிதி ஆலோசனை என்னும் சதி. அப்புறம் வேலைக்காரம்மா சொன்ன பலகாரம் பட்சணம். ஹாஹா எங்கியோ போயிட்டே.போ
இதுல ஹைலைட் மும்மூர்த்திகளும் எச்சரிச்சதுதான். ஆமா நீ பாடுவியா.. அட அத கேக்கணுமே. எப்ப தஞ்சை வர.. ?
அப்புறம் பெண்ணுரிமை , முகநூல் தம்பி பயந்த விஷயம் மட்டுமில்ல. அழகு நிலைய அட்ராசிட்டீஸ்.. ஹாஹா ஹோ ஹோ ந்னு விதம் விதமா சிரிச்சிட்டே இருக்கேன்.
என்ன மக்காஸ். படிக்கிற உங்க முகங்களிலும் சிரிப்பு வெளிச்சம் பரவுதே.
நன்றிடி தேன். தொடர்ந்து எழுது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு இப்போ தேவை இம்மாதிரி மனசை மகிழவைக்கும் எழுத்துக்களே. பெருமையா இருக்குடி. லவ் & ஹக்ஸ். வாழ்க வளமுடன்.
தேனு வெர்ஸஸ் தேனு தோழிகள் இரண்டுபேரும் கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்--சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்குsuuuuper pa.
பதிலளிநீக்குvery nice
பதிலளிநீக்குவலைத்தள நட்புகளை முகந்தெரியா அறிமுகங்கள் என்று நினைப்பேன் அதுபோல் இதுவும் அமைந்தது அழகு நிலையங்களை வைத்திருப்பவர்கள் முதலில் அழகாய் இருக்கவேண்டும் ஆனால் அப்படி இல்லைபோல் இருக்கிறது அழகு நிலையங்களில் பணம்பறிக்கிறார்களா வளர்க பதிவர் ஒற்றுமை
பதிலளிநீக்குதேனு வெர்ஸஸ் தேனு ஆஹா தோழிகள் இருவரும் கலக்கிட்டீங்க,தேனு உனக்கு சொல்லவாவேண்டும் அருமை நன்றி தேனு ===சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்குசிரிப்புடன் (!) ரசித்தேன்...
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனு..
பதிலளிநீக்குஆனா எலி பிடிக்க தெரியாத
பூனையை புலியாக்குறது எனக்கே
கொஞ்சம் ஓவரா தெரியல...
Thank you so much dear...
வணக்கம்
பதிலளிநீக்குஎழுதிய விதம் சிறப்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹாஹா... நல்ல அனுபவம் அவர்களுக்கு! ஒரு பதிவு உங்களுக்கு!
பதிலளிநீக்குஇருவருக்கும் வாழ்த்துகள்.
ரசித்துச் சிரித்தேன்...
பதிலளிநீக்குசிரித்து ரசித்தேன் அக்கா.
நன்றி சரஸ் மா
பதிலளிநீக்குநன்றி காந்தி மணி
நன்றி பாலா சார்
நன்றி டிடி சகோ
நன்றி தேனு
நன்றி ரூபன்
நன்றி வெங்கட் சகோ
நன்றி குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!