செவ்வாய், 28 மார்ச், 2017

வள்ளல் அதியமான் கோட்டையும் கோட்டமும்

தர்மபுரி என்றழைக்கப்படும் ஊரின் அந்நாளைய பெயர் தகடூர். நான் பாடப்புத்தகங்களில் படித்த கடையெழு வள்ளல்களில் முதல் வள்ளலான அதியமான் நெடுமான் அஞ்சிக்குக் கட்டப்பட்ட கோட்டத்தைக் கண்டோம் ஹோசூர் செல்லும் வழியில்.அந்த வள்ளல் கோட்டை கட்டி ஆண்ட ஊர்தான் தகடூர் என்னும் தர்மபுரி.

தனக்குக் கிடைத்த நீண்ட நாள் வாழ்வழிக்கும் நெல்லிக்கனியை  தமிழின் பால் கொண்ட காதலால் ஔவைக்கு  அளித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி . பொதுவாக வள்ளல்கள் எல்லாரும் குறிஞ்சியை - செழிப்பமான மலைப்பகுதியைச் சேர்ந்த அரசர்களாகவே இருக்கிறார்கள். ( ஆய் - பொதிய மலை , ஓரி  - கொல்லி மலை, காரி - மலையன் ( கோவலூர் ),  நள்ளி - நளிமலை, பாரி - பறம்பு மலை, பேகன் - பொதினி மலை. இன்னும் ஆதன் ( மருதநில அரசன் )  , எழினி, கிழான், கிள்ளி, குமணன் , நன்னன், மாறன் ஆகியோரும் இன்னும் பலரும் உண்டு. புறநானூற்றில் இவர்களது வீரமும் புகழப்படுகிறது.

என்றைக்கு இருந்தாலும் இந்த வள்ளல்கள் பற்றிப் படிக்கும் போது ஏற்படும் பிரமிப்பு சொல்லில் சொல்லி மாளாது. அவர்களை ஓவியங்களாகவும் உருவங்களாகவும் சமைத்திருப்பதைக் கண்டபோது மகிழ்ச்சி பன்மடங்காகப் பெருகிற்று. அங்கே எடுத்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.


அஹா எப்பேர்ப்பட்ட தமிழ்க்காதல் . தன்னினும் தமிழின்மேல் கொண்ட பிரியத்தால் வாழ்நாள் நீட்டிக்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு அதிகன் வழங்கும் அழகுக் காட்சி. மாபெரும் மனம் கொண்ட மன்னன் வாழ்க.
கோட்டத்தின் நுழைவு வாயில்

ராஜ சபை. சிங்க ஆசனம் - சிங்காசனம் , சாமரப் பெண்கள். உப்பரிகையில் அரச மகளிர்.
சரியாசனத்தில் ஔவையும் அமைச்சரும். 
உப்பரிகையில் அரச மகளிர். வாயிற்காவலர். திரை செலுத்தும் மக்கள் ?!
ஔவையின் பெருமிதம்.
மாலை வெய்யிலில் மின்னும் கோட்டம்.
வள்ளலின் கோட்டத்தில் ரங்க்ஸ் :)
நெல்லிக்கனி தெரியுதா. இந்தச் சிலையை மிக மிக ரசித்து பத்துப் பதினைந்து ஃபோட்டோ சுற்றிச் சுற்றி எடுத்திருக்கிறேன் :)
அப்புறம் ஒரு முக்கிய விஷயம். அதியமான் கோட்டை என்றவுடன் மாபெரும் கோட்டையைக் கற்பனை செய்திவிடாதீர்கள். இது வள்ளுவர் கோட்டம் போன்றதொரு கோட்டம் அவ்வளவே. :)

3 கருத்துகள் :

Chellappa Yagyaswamy சொன்னது…

சபாஷ்! அதியமான் கோட்டையில் தங்களுக்கு நெல்லிக்கனி கிடைத்திருக்கவேண்டுமே! யாருக்குக்கொடுத்தீர்கள்?

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அதியமான் கோட்டை
படங்களுடன்
அருமையான தகவல்

Thenammai Lakshmanan சொன்னது…

கிடைத்த நெல்லிக்கனியை ( ஜூஸ் ) என் கணவருக்குக் கொடுத்திட்டேன் செல்லப்பா சார். அவர்தானே நான் எழுதத் தூண்டுகோல் :)

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...