எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
P.SINGARAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P.SINGARAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.



கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.

கடலுக்கு அப்பால்

"மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரை  நாம் எதையும் இழப்பதில்லை". இதுதான் சிங்காரம் சொல்லும் செய்தி என்கிறார் முருகேச பாண்டியன். அது உண்மைதான் ஆனால் எதையும் தோற்றுவிடுவோமோ அதிலும் காதலில் என்ற ஈகோதான் இக்கதையைச் செலுத்துகிறது.  புயலிலே ஒரு தோணியின் நாயகன் பாண்டியன் கவர்ந்ததைவிட இதின் நாயகன்  செல்லையா நம்மை மிகவும் கவர்கிறார்.

ஆரம்பத்திலும் நடுவிலும் புலம்பெயர் வாழ்வின் துயரங்களும் உலகப்போரின் கொடுமைகளும் வந்தாலும் இதில் செல்லையா மரகதத்தின் பால் கொண்ட மென்மையான காதல் சித்தரிக்கப்படுகிறது. எங்குமே எல்லை மீறாத காவியக் காதல்.

திங்கள், 20 மார்ச், 2017

புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.



புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.

உண்மையாகப் பார்த்தால் எல்லாரும் தனிமையில்தான் இருக்கோம்.” என்று என்னை நச்சென்று அறைந்த வரிகள். . முருகேச பாண்டியனுக்கு அளித்த நேர்காணலில் கடலுக்கு அப்பால் & புயலிலே ஒரு தோணி என்ற அற்புதமான இரு நாவல்களின் ஆசிரியர் . சிங்காரம் அவர்களின் கூற்று அது. வெகுஜன மக்களால் இனம் காணப்படாமல் மறைந்த நூற்றாண்டுக்கான எழுத்தாளரில் சிங்காரம் அவர்களின் பெயர் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.