முகநூல் தோழர் ப்ரகாஷ் ராமஸ்வாமி. என்னுடைய படைப்புகளை இவரோட அம்மா சாஜி ராமு ( சரஸ்வதி ) & தந்தை வெங்கட்ரமணா ராமசாமி.இருவரும் விரும்பிப் படிப்பாங்கன்னு ஒரு முறை சொன்னார். என் நலம் விரும்பும் நல்ல மனிதர். என் அன்பிற்குரிய சகோதரர். முகநூல் நண்பர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர். சௌதியில் வசிக்கிறார்.
’என்னடா இந்த ஊரு ஒரே பாலைவனம் , ஏசியிலேயே இருக்க வேண்டி இருக்கு. வெளியே போனா வெய்யில் கொளுத்துது . ’ இப்பிடின்னு சிலர் வேறு வெளிநாட்டுக்கும் அதோட ’இந்தூரு ட்ரெஸ்ஸான பர்தாவை அணியாம பெண்கள் போக முடியாது கட்டுப்பாடுகள் ஜாஸ்தி ’ இப்படியேதான் சில உறவினர்களும் நண்பர்களும் அதை விட்டுட்டு துபாய், ஷார்ஜா என்று மாறி இருக்காங்க. ஆனா ப்ரகாஷோட முகநூல் பகிர்வுகளைப் பார்த்தீங்கன்னா இது எதுவுமே வராது. செம ஜாலியும் கேலியும் சுவாரசியமும் மிளிரும். அதிலும் அங்கே இருக்கும் ஷாப்புகள், உணவுகள் நடைமுறைகள் அதோடு அதாக சர்வதேச கிரிக்கெட், உலக சினிமா, உள்ளூர் சினிமா நம்மூரு சினிமா, பிடித்த நண்பர்களோட கவிதை, ஸ்டேடஸ் பகிர்வுகள் நச்சென்ற கமெண்டுகள் என்று கலக்கி இருப்பார்.
எந்த நேரத்தில் போய்ப் படித்தாலும் சந்தோஷம் துள்ளும் இடம் என்று அவரது முகநூல் பக்கத்தைச் சொல்லலாம். சிலருக்கு மட்டுமே அந்தத் திறமை வாய்த்திருக்கிறது. அவர் நிறைய எழுதுவார் நிறையப் பகிர்வார். சுயகேலி கிண்டல் கூட உண்டு. ஒர் முறை தன் மகன் நைச்சியமாகச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரா வைத்திருந்தார். கேட்டா தன்னைப் பார்த்துத் தன் மகன் சிரிப்பதாகவும் அதை எடுத்து தன் ப்ரொஃபைல் பிக்சராகப் போட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதவிட வேறென்ன சாட்சியம் வேணும் அவரது ஹாஸ்யத்தை நிரூபிக்க.
அவர்கிட்ட என்ன கேள்வி கேக்குறதுன்னு ஒரே குழப்பம். இதுவரை முகநூலில் வந்தாகவும் இருக்கக்கூடாது. வித்யாசமாகவும் இருக்கணும் எனவே இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
என் வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க 4 பாராலேருந்து 10 பாராவரைக்கும் ( எழுத முடிஞ்சவரைக்கும் ) கொடுக்கலாம். சோ இந்தக் கேள்விக்கு டைம் கிடைக்கும்போது பதில் அனுப்புங்கன்னு கேட்டேன். அவர் உடனே அனுப்பிட்டார். இத ஃபிப் 14 ஆம் தேதி போஸ்ட் பண்ணி இருக்கணும். ஆனா லேட் ஆயிந்தி. சோ மார்ச் 14 க்கு போஸ்ட் பண்றேன். ஏன்னா மார்ச் 14 வரை காதலர் தின மறு பரிசளிப்புகள் தொடருதுன்னு விக்கிபீடியா மீடியான்னு ஏதோ ஒன்னுல பார்த்தேன். :) லேட்டா வந்தாலும் அவரோட லேட்டஸ்டான தாட்ஸோட வந்திருக்கேன் மக்காஸ் படிச்சுப் பாருங்க. :)
/// உங்க மகனுக்கு நீங்க ஒரு கடிதம் எழுதினா எதைப் பத்தி எழுதுவீங்க. ////