எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஜகனாரா பேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜகனாரா பேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 பிப்ரவரி, 2026

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜகனாராபேகம்

 

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜஹனாரா பேகம்

ளவரசிகளில் சக்கரவர்த்தினி, நிழல் இளவரசி, காலத்தின் எஜமானி, சிம்மாசனத்தின் எஜமானி, பாதுஷா பேகம்( பெண் பேரரசி ) , பேஹம் சாஹிப் ( இளவரசிகளின் இளவரசி)  என்றெல்லாம் புகழப்பட்ட முகலாய இளவரசி ஜகனாரா பேகம் நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற தகுதி பெற்றதாலேயே குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தனித்து வாழ்ந்தவர். சொல்லப்போனால் தன் தந்தையைப் பேணிக் காக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

முகலாய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் எண்ணற்ற ராணிகளின் வாழ்வும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் முதன்மையானவர் ஜகனாரா. பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்களுடன் அவர்களின் மருத்துவ சேவைக்காக முகலாய சாம்ராஜ்யத்துடன் முதன் முதலாக இணைப்பு ஏற்படுத்தியவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...