எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவியரசர் கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவியரசர் கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2024

காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்

காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்


சிறுகூடல்பட்டி தந்த முத்து, செட்டிநாட்டின் சொத்து. முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்தவர் முத்தையா என்கிற கண்ணதாசன். கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் அவர் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை . திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்.. அவரது பேனா முனையில் வார்த்தைகள் தவம் இருந்தன சாபவிமோசனம் பெற.

நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், காப்பியங்கள், உரைநடைகள், சுய சரிதைகள், புதினங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், நாடகங்கள் இவற்றோடு பதிப்பகப் பணி, பத்திரிக்கைப் பணி, கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா, கட்டுரையாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.

திரைப் பாடல்களிலும் ஆன்மீகம், தத்துவம், காதல், சோகம், சுகம் எனப் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர், சேரமான் காதலிக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். மனவாசம் வனவாசம் அவரது சுயத்தை மட்டுமல்ல சினிமாவிலும் அரசியலிலும் அவர் சந்தித்த மனிதர்களின் சுய ரூபத்தையும் பிரதிபலித்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...