எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவிதை உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மறுபடி இணைபுகு நீ.



ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும் நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும் நீ

வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ  தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.


சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ


ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.