எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கல்யாண கலாட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாண கலாட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 நவம்பர், 2011

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..



தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.

பத்மா இளங்கோ..:-

எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க..

வியாழன், 17 நவம்பர், 2011

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.

செவ்வாய், 15 நவம்பர், 2011

எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.



திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...