தர்மபுரி என்றழைக்கப்படும் ஊரின் அந்நாளைய பெயர் தகடூர். நான் பாடப்புத்தகங்களில் படித்த கடையெழு வள்ளல்களில் முதல் வள்ளலான அதியமான் நெடுமான் அஞ்சிக்குக் கட்டப்பட்ட கோட்டத்தைக் கண்டோம் ஹோசூர் செல்லும் வழியில்.அந்த வள்ளல் கோட்டை கட்டி ஆண்ட ஊர்தான் தகடூர் என்னும் தர்மபுரி.
தனக்குக் கிடைத்த நீண்ட நாள் வாழ்வழிக்கும் நெல்லிக்கனியை தமிழின் பால் கொண்ட காதலால் ஔவைக்கு அளித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி . பொதுவாக வள்ளல்கள் எல்லாரும் குறிஞ்சியை - செழிப்பமான மலைப்பகுதியைச் சேர்ந்த அரசர்களாகவே இருக்கிறார்கள். ( ஆய் - பொதிய மலை , ஓரி - கொல்லி மலை, காரி - மலையன் ( கோவலூர் ), நள்ளி - நளிமலை, பாரி - பறம்பு மலை, பேகன் - பொதினி மலை. இன்னும் ஆதன் ( மருதநில அரசன் ) , எழினி, கிழான், கிள்ளி, குமணன் , நன்னன், மாறன் ஆகியோரும் இன்னும் பலரும் உண்டு. புறநானூற்றில் இவர்களது வீரமும் புகழப்படுகிறது.
என்றைக்கு இருந்தாலும் இந்த வள்ளல்கள் பற்றிப் படிக்கும் போது ஏற்படும் பிரமிப்பு சொல்லில் சொல்லி மாளாது. அவர்களை ஓவியங்களாகவும் உருவங்களாகவும் சமைத்திருப்பதைக் கண்டபோது மகிழ்ச்சி பன்மடங்காகப் பெருகிற்று. அங்கே எடுத்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.
அஹா எப்பேர்ப்பட்ட தமிழ்க்காதல் . தன்னினும் தமிழின்மேல் கொண்ட பிரியத்தால் வாழ்நாள் நீட்டிக்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு அதிகன் வழங்கும் அழகுக் காட்சி. மாபெரும் மனம் கொண்ட மன்னன் வாழ்க.
கோட்டத்தின் நுழைவு வாயில்