எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 10 ஜனவரி, 2022

காவிரி மைந்தனுக்கு வாழ்த்து

 காவிரியின் மைந்தன்
கவிதைகளின் நேசன்

கண்ணதாசனுக்குத் தாசன்
கார்த்திகேயன் தகப்பன்

அமீரகத்தில் தமிழ்த்தேர்
உலாவவிட்ட பக்தன்

அன்புமனை சாந்திக்குக்
காதல் பரிசளித்த சந்திரன்

ஆனந்தமாய் விவேகனைப்
புதுஉலகுக்களித்த சூரியன்

சூரியனும் சந்திரனும்
சேர்ந்து வந்த விநோதன்

தமிழ் மகிழத் தாய்மகிழத்
தாயுமானவன் ஆனாய்

கண்ணதாசனுக்கும் தாசனாகிக்
ககனம் பரவச் செய்தாய்

அலைகள் தாண்டி உள்ளங்கள்தோறும்
ஆர்ப்பரிக்கும் உன் தமிழே

அன்பு தோய்ந்து பண்பு விளைவிக்கும்
உன் கவிதையெல்லாம் ஜெயமே

திவ்யமான, திறமையான ( லேகா)
(மரு) மகள்கள் பெற்று விட்டீர்

அறுபதிலே அருமையான
தமிழ்ப்பணிகள் படைத்தீர்

அகவை நூறு வாழ்ந்து இங்கே 
இன்னும் செப்பம் செய்வீர்.

உம் பேருரைத்துத் தமிழ் பரப்பும்
பேரன்கள் பெற்று வாழி நீடு வாழி.

-- தேனம்மைலெக்ஷ்மணன்

2 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. அன்பு தேனம்மா. நலமா.
  காவிரி மைந்தனுக்குப் பிறந்த நாள் விழவா. மிக மிக மகிழ்ச்சி.
  பல நூற்றாண்டு இன்பம் பெறட்டும். உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கீறேன்.
  உங்கள் அன்புக் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...