எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2020

பவர் ஸ்டேஷனும் பருத்திக் காடும்.

ரெய்ச்சூர் தெர்மல் பவர் ஸ்டேஷன். மந்திராலயம் செல்லும் வழியில் இந்த ரெய்ச்சூர் தெர்மல் பவர் ஸ்டேஷனைக் கடக்க நேர்ந்தது.ஊர் ஆரம்பிக்குமுன்னே ஊர் பூராவும் புகை. ! 





ஒரு வழியாக அங்கே பரவி இருந்த புகையினூடே ஊரைக் கடந்தோம். 

பாவம் மக்கள்.! தொழிற்சாலைகளின் அருகே குடியிருப்பவர்களுக்கெல்லாம் சிரமம்தான். ஏதோ சிமிண்ட் ஃபாக்டரி போல என முதலில் நினைத்திருந்தேன்.  பின்னர்தான் தெரிந்தது அது தெர்மல் பவர் ஸ்டேஷன் என்பது. 


பேஸன் பிரிட்ஜ் போல ஃபர்னேஸுகள்.

ஆவி பொங்கும் உலைக்களங்களைக் கடந்தவுடனே வந்தது பஞ்சமுகை ஆஞ்சநேயர் ஆலயம். 

மந்திராலயத்திற்கு நேரத்துக்குச் செல்லவேண்டும். அதுவும் போக மதிய நேரமானதால் கோயில் திறந்திருக்குமோ என்னவோ என்ற நினைப்பில் பஞ்சமுகி ஆஞ்சநேயரை மனதால் வணங்கியபடி கடந்தோம். 

இதோ கம்பீரமாக ஆர்ச்சின் மேல் காட்சி அளிக்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். கோயில் ஒரு சிறு குன்றின் மேல் அழகுற அமைந்துள்ளது.


அதைக் கடந்ததும் பருத்திக் காடு. வெண்பூக்களுடன் பச்சைக் கடல் போல் பரவி இருந்தது பருத்திக் காடு.

புள்ளி புள்ளியாய் வெண்மையாய்த்தெரிவதுதான் பருத்தி. இதை ஒரு பை கொண்டு சேகரித்து மூட்டையில் கட்டி சைக்கிளில் வைத்து எடுத்துப் போகின்றவர்கள் அநேகம்பேர். பெண்கள் பைகளில் இவற்றைச் சேகரிக்கின்றனர்.

ஏதேனும் பஞ்சுத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு சென்று மொத்தமாய் விற்பார்கள் என நினைக்கிறேன். 

ஊரே கரிசல் மண்ணாக இருந்தது. அதனால்தான் பருத்தியும் அமோகமாக விளைந்திருந்தது. 


பருத்தி எடுக்கையிலே என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் என்ற ஆட்டுக்கார அலமேலு படப் பாடல் ஞாபகம் வந்ததால் இந்தப் பருத்திக் காட்டைப் ஃபோட்டோ எடுத்தேன். 


மேலும் வித்யாசமாக வேறு இருந்தது. மரபணு மாற்றப் பயிர்களையும் பருத்தியையும் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் பற்றியே கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே பருத்தி பயிரிட்டு இருப்பது பார்த்ததும் அதுவே ஞாபகம் வந்தது. இதுவாவது இவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கிறதா ?

இன்னும் பருத்தி வெடிக்காத காடு. இனிமேல்தான் பூப்பூக்க வேண்டும் போல. 



தெர்மல் பவர் ஸ்டேஷன்களும் பருத்தியும் மக்களான நம் அனைவருக்கும் தேவைதான் என்னும் போதிலும் இதனால் அவதியுறும் மக்களைப் பார்த்து மனம் கனக்கத்தான் செய்கிறது. 

4 கருத்துகள்:

  1. தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம். இது கர்நாடகா ஆந்திரா பார்டர் டிடி சகோ

    எல்லா இடத்திலும் இப்படித்தான் நடக்குது. :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...