எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவுகள்.

ஆத்தா நான் பாஸாயிட்டேன். :) ஹாஹா நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் இந்த வருடமும் என் கவிதைக்கு மூன்றாம் இடம் பரிசு கொடுத்தமைக்கு !

உங்கள் இடையறாத வேலையிலும் பல்வேறு பட்ட பணிகளிலும் நேரம் ஒதுக்கி இலக்கிய சேவை செய்து வருவதற்கு பாராட்டுகளும் பரிசுக்கு அன்பும் நன்றியும். !!!!

இரு வருடங்கள் முன்பு ( ஃபக்ருதீன் சகோ இந்தியா வந்திருந்த போது ) எனது ”புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா” என்ற கவிதைக்கான பரிசுத்தொகையையும் விருதையும் அனுப்பி கௌரவம் அளித்ததை இந்த நேரத்தில் இன்பமாக நினைவுகூர்கிறேன்.


/////*ரியாத் தமிழ்ச் சங்கம்*
*கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி - 2016* 🌺🌺🌺
முடிவுகள்:

முதலிடம் : உரூ.பத்தாயிரம்


*காட்டின் பிள்ளைகள்*
கவிஞர்: *கார்த்திகேயன்*

இரண்டாமிடங்கள்
இரண்டாமிடத்துக்கு நடுவர்கள் பரிந்துரைக்கும் மதிப்பெண்கள் இரண்டு கவிதைகளுக்குச் சமமாக இருப்பதால் இரண்டு கவிதைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பரிசுப் பணம் தலா உரூ. இரண்டாயிரத்து ஐந்நூறு

1). *வேற்று கிரக அன்பு*- கவிஞர்: *கணேசகுமாரன்*
2). *சதுரங்க ராணி* -
கவிஞர்: *கீதா சங்கர்*

மூன்றாம் இடங்கள்

பரிசுப்பணம் தலா ரூ. இரண்டாயிரம்
1). *இரு வேறுமனம்* கவிஞர் : *தேனம்மை லக்ஷ்மணன்*
2). *என் பிரபஞ்சமானவனுக்கு...*
- கவிஞர் : *சக்திகிரி*

சிறப்புத் தேர்வுகள்:

பரிசுப் பணம் தலா ஆயிரம் உரூபாய்
1). *காத்திருக்கும் கருணை மனுக்கள்*
கவிஞர்: *லதா அருணாசலம்*
2). *சிறார் கலைஞன்*
கவிஞர்: *ஜெயலதா*

இப்போட்டியில் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். எங்கள் மின்மடல்முகவரி கூட கடத்தப்பட்டிருந்தது. சில தாமதங்களும் ஏற்பட்டன. எனினும் நைஜிரீயாவிலிருந்து நங்கநல்லூர் வரை, கனடாவிலிருந்து கானாடுகாத்தான் வரை, மெல்பொர்னிலிருந்து மேடவாக்கம் வரை எங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அலாதியானது. ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நற்பெயர் இங்கெல்லாம் பட்டொளி வீசியது என்றால் மிகையில்லை.

இப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும், இம்முறை வென்றவர்களுக்கும், இனி வெல்ல இருப்பவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்து மகிழ்கிறோம்.

தேர்வு பெற்ற கவிஞர்கள் தம் அஞ்சல் முகவரியை எனக்கோ சகோ. ஷேக் முஹம்மதுவுக்கோ விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.🌾🌾🌾🌾🌻🌻🌻🌻🌺🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

-- பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

11 கருத்துகள்:

 1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது.....பாஸானதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.
  பரிசு பெற்ற கவிதைகளைப் படிப்பதற்கு வெளியிட்டால் தானே அருமை தெரியும்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி செல்வா

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றி கருமலை தமிழ். அடுத்து வெளியாகும்

  நன்றி டிடி சகோ

  பதிலளிநீக்கு
 5. வாவ்!!! மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள் சகோ/தோழி..எழுதுங்க!! வெல்லுங்க!! பரிசை அள்ளுங்க எப்போதும்!!! அதற்கும் சேர்த்து வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 6. நன்றி துளசி சகோ

  நன்றி நன்றி ராமலெக்ஷ்மி :0

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...