எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)

Paaru Kumar

எப்படியாவது இந்த உலகத்த விட்டு போறதுக்குள்ள....கால் பங்காவது இலக்கியவாதி ஆகனுங்கற முயற்சியல்.....

யாரு புத்தகம் வெளியிடறாங்க...இல்ல அதைப்பற்றி பேசுறாங்கன்னாலும்....கலந்துக்கறேன்.

இளமதி பத்மா ...அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன்...
தேனம்மை லஷ்மணின்.....
சிவப்பு பட்டுக்கயிறு மற்றும் பெண் பூக்கள் புத்தக வெளியீடு மற்றும் மதிப்புரை.


போனவுடனேவே பிஸ்கெட்டும்...இஞ்சி டீயும் கொடுத்ததோடல்லாம.....நேரத்துக்கு நிகழ்ச்சியையும் தொடங்கிட்டாங்க.

அதிகப்படியான ஏசிக்குளிர்....இளமதிபத்மாவையும் புவனாவையும் தாக்காம நானே எல்லாத்தையும் தாங்கி தற்காத்தேன் அவர்களை.

சிறப்பு விருந்தினர்களாக....கயல்விழி மோகன்...லதாஆனந்த் சார் ...திரு இளங்கோ... திருமதி மணிமேகலை.

கயல்விழி....வாசித்த கதைகளைப்பற்றி சொன்னாங்க. அவங்களே எழுத்தாளரா மாற ஊக்கம் கொடுத்தவங்க தேனம்மைன்னு....தன் தோழிய பாராட்டி பேசினாங்க.

அடுத்து பேசிய....திரு.லதா ஆனந்த்.ஒரு கதை எப்படியிருக்கனும் சொன்னார்.
ஒரு சிறுகதையின் முதல்வரி.....அடுத்து படிக்க ஆர்வத்தத் தூண்டனும்.
க்ன்னா ச்ன்னா த்ன்னா எழுத்துப்பிழைகள கவனிக்கனும்.
கமா ...முற்றுப்புள்ளி...செமிக்கோலன் போன்ற குறியீடுகள சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிவது அவசியம்.

ஒரு வரியிலோ...ஒரு பத்தியிலோ...ஒரே மாதிரியான வார்த்தைகள திரும்பத்திரும்ப பயன்படுத்தக் கூடாது.....மேலும்
எழுத்தாளர் சுஜாதா சொன்னதாக ஒன்றைச் சொன்னார்.......அதாவது
கதையின் முடிவுகள ...நீங்க தீர்மானிக்காம வாசகர் கற்பனைக்கு விடுங்கன்னு.
நிஜமாவே எளிமையான ...போரடிக்காம பேசினார்.

தேனம்மையின் தோழி..மணிமேகலை...பேசினாங்க. எழுத்தாளராகவும் இல்லாம...வாசகியாகவும் இல்லாம ஒரு தோழி இன்னொரு தோழியிடம் பேசுவாங்களோ....அத்தனை இயல்பா...

மிகக் குறைவானவர்களே வந்திருந்தினர். எங்க தன் தோழி மானதால் சங்கடப்படுவான்னு நினைச்சிருப்பாங்கபோல.....அதற்கான நிகழ்வு ஒன்றும் சொன்னாங்க.

காமராஜர் எங்கோ பேசப்போனப்போ...
அவர் பேச்சைக் கேட்க அமர்ந்திருந்தவர்கள் ரெண்டு பேர்தானாம். காமராஜர் சின்சியரா பேசி முடிச்சதும்...பக்கத்திலிருந்தவர் கேட்டாராம்...ரெண்டே பேர் இருக்காங்க....இந்த இருவருக்காகவா மூச்ச பிடிச்சி பேசுனியன்னு.
காமராஜர் சொன்னாராம்.......

இந்த இருவர்போயி வெளில நாலு பேருக்கு சொல்வான்...அந்த நாலுபேர் நானுபேருக்கு சொல்வான்....அது போதும்னு.....
சமயம் பார்த்து ஒரு நிகழ்வை பகிர்வது சிறப்புதானே....

ஏதோ.....என்றால் முடிஞ்சது...ஒரு ஐம்பது பேரையாவது இதை படிக்க வைப்பேன்.

விழாவ நேரத்தோட முடிச்சாங்க. நேரத்தோட வீடுவர வசதியாக.
இன்னொரு விஷயம்.....விழாவில் நான் நிறைய புகைப்படம் எடுத்து கொடுத்திருக்கேன்.....
எப்படியிருக்குன்னுதான் தெரியல.
நல்லாயிருந்தா என் கை வண்ணம். நல்லாயில்லன்னா....
அந்த கேமரா சரியில்லன்னு நம்புங்க மக்களே்


டிஸ்கி:- ஹாஹா மிக அருமை & நன்றி பாரு. :) இவை என் செல்ஃபோனில் எடுத்த ஃபோட்டோக்கள் & தங்கை கயல்விழி மோகனின் கணவர் மோகன் & நண்பர் சிபி தி ஸ்பார்டன் எடுத்த புகைப்படங்கள். 

காமிராவுக்கு கார்ட் கொண்டு வரல அதுனால நீங்க எடுத்த ஃபோட்டோக்களை அப்லோட் பண்ண முடில அடுத்த வாரம் அவற்றைப் போடுகிறேன் மக்காஸ்.   நன்றி பாரு & ஃப்ரெண்ட்ஸ் வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கும் மிக அழகாகப் புகைப்படம் எடுத்தமைக்கும்.


7 கருத்துகள்:

  1. //ஒரு சிறுகதையின் முதல்வரி.....அடுத்து படிக்க ஆர்வத்தத் தூண்டனும்.//

    அதே .... அதே .... தொழில் இரகசியத்தைச் சூப்பராச் சொல்லியிருக்காங்க. :)

    படங்களும் பகிர்வும் மிகப் பிரமாதமாக உள்ளன. நேரில் கலந்துகொண்டதுபோல மிகவும் திருப்தியாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சகோ!!!

    கீதா: ஆஹா! சென்னையில் என்பது அதுவும் டிஸ்கவரி பேலஸ் என்பது தெரியாமல் போய்விட்டதே...பல நாட்கள் வலைப்பக்கம் சரியாக வர முடியாத காரணத்தினால் மிஸ் ஆகி விட்டது...மின் அஞ்சல்களும் குவிந்திருந்ததில் இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்பு கண்களில் படாமல் விடுபட்டிருக்கிறது. நேரில் வரும் வாய்ப்பைத் தவறவிட்ட மனவருத்தம் தோழி தேனு.....கணேஷ் அண்ணாவும் ஃபோட்டோவில் இருப்பதைப்பார்த்ததும் அடடா என்று ரொம்பவே ஃபீலிங்க்..

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய படம் இடம்பெறவில்லை...

    கீதா அக்கா, வாத்தியாரிடம் உங்களுக்கு அன்றைக்கு புத்தக அறிமுக நிகழ்வு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாஸ்கர்

    நன்றி விஜிகே சார்

    அஹா அடுத்த முறை தொலைபேசியில் அழைக்கின்றேன். நம்பரை ஜி மெயிலில் அனுப்புங்க கீத்ஸ். ஹ்ம்ம்

    கார்த்திக் அடுத்த இடுகையில் லேசா ஓரமா தெரியிறீங்க. ஆடியன்ஸை சரியா கவர் பண்ணலை ஹ்ம்ம் :(

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...