எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 7 ஜனவரி, 2016

மீட்டெடுப்பு.

காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பது சுவாரசியமானது.
பள்ளிவிட்டதும் எச்சியூற கமர்கட்டைக்
காக்காய்க்கடி கடித்துத்தந்த ஒருத்தியை
அலையாடும் கடலில் அசையாது கிடந்த
அலங்காரச் சங்கைத் தொட்டுவிட்டு
விட்டுக் கொடுத்த இன்னொருத்தியை
தோளின்மேல் கைபோட்டு தாவணிக்காரிகளாய்
கனவுகள் பிடித்து அலைந்த வேறொருத்தியை
பள்ளிமுடிக்குமுன்னே திருமணம்முடித்துக்
குழந்தைமுகம் சுமந்து குழந்தைமுகத்தோடு
வந்த தாய்த்தோழியை

கறை நல்லது என்னும் விளம்பரப் பெண்ணோ
கடலோர மண்ணில் பட்டம் இழுக்கும் பையனின் தாயோ
துப்பட்டாமுனைபிடித்துத் துள்ளிச்செல்லும் தோழிகளோ
வலிக்கும் நெற்றி வருடி முத்தமிடும் மகளாகவோ
கண்டுபிடிக்கும் தருணம் சுவாரசியமானது

அன்று தொலைத்த நம்மை
இன்று மீட்டெடுப்பதுவும்..4 கருத்துகள்:

 1. //பள்ளிவிட்டதும் எச்சியூற கமர்கட்டைக்
  காக்காய்க்கடி கடித்துத்தந்த ஒருத்தியை//

  நீங்காத நினைவுகளின் மீட்டெடுப்பு கமர்கட் போல ருசியாக உள்ளன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி கோபால் சார்

  நன்றி வெங்கட்சகோ :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...