எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

சோலை



பாலைவனங்களில் ஒட்டகங்கள்
தவித்துப் புரளும்நேரம்
அம்மாவின் கடிதம் வந்தது
அவசர நீரூற்றாய்.

ஒட்டகத் திமில்கள்
நிரப்பிக் கொண்டன
ப்ரிய அறிவுரைகளை.

சோலைக்கு நன்றி கூறிவிட்டு
எழுந்தது ஒட்டகம்
சீக்கிரம் பாலையைக் கடப்போமெனத்
திமிலசைத்துக் கால்வீசி
சூறைக்காற்றுக்கு லாவகமாய்க் கண்மறைத்து
திமிலசைத்துக் கால்வீசிப் போட்டு தொடர்ந்தது
ஒட்டகத்தின் இனிய பயணம்.

-- 84 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)