எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2016

செம்பளிங்குப் புள்ளிகள்.



செம்பொட்டாய் மின்னுகின்றன
வெள்ளைப் பந்தின் கண்கள்.
காது பிடித்துத் தூக்கி அலையும்போதும்
காரட் பிடித்துக் கடிக்கின்றன.
கூண்டுக்குள் ஒன்றை ஒன்று
ஒவ்வொரு இரவிலும்
உறுதி செய்து கொள்கின்றன.
விடியும் பொழுதுகள்தான்
வினாச காலம் கூந்தல் தைலத்துக்கும்
கொழுத்த மாம்சத்துக்கும்.
புகைப்படச் செங்கண்கள்
அவற்றை ஞாபகமூட்டும்போது
ஏனோ ஒரு மசாலாவாடையும்
குழப்படியாய் வந்து போகிறது.
குருவி வாலாயோ தேவாங்குத் தோலாயோ
ஆடும் கூந்தல் பார்க்கும்போது
வளருமென்று கொன்ற செம்பளிங்குப் புள்ளிகள்
எண்ணெயோடு மின்னும் ரத்தப்பிசுபிசுப்பாய்.
குதிரைவாலையும் கழுத்தையும்
சுற்றிக்கிடக்குமதன் வெண்தோல் பனியாடையாய்

5 கருத்துகள்:

  1. செம்பளிங்குப் புள்ளிகள்: சிறப்பான ஆக்கம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...