எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2016

கொலாஜ்5.3.2004.

*ஊர் ஊராய்க்
கூடாரம் தூக்கி
உடைந்து போன தோள்கள்.
கூடுவிட்டுக் கூடுபாயும்
ஆத்மாபோல்.

*கொலாஜால் செய்த
ஓவியம் போல
வாழ்க்கை.

*ஆசைக்கும் அபிலாசைக்கும்
கடமைக்கும் நடுவில்
பற்றியெரியும் தீக்குச்சியாய்
மனசு.

*எதையோ எதிர்பார்த்து
வரங்கேட்டுத் தவமிருக்கும்
முழுமையடையாத் தேவதைகள்.

*நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்
பூக்கள் மலர்வது போல
அவஸ்தை.

*இறக்கை இருக்கிறது
வானம் இருக்கிறது
வயதான பட்டாம்பூச்சி.

*வேர்களை மண்ணில்
ஊன்றவிட்டு
விண்ணில் பறக்க 
நினைக்கும் தாவரங்கள்.
*ஏமாற்றங்களுடனும்
எதிர்பார்ப்புகளுடனும்
வயதைத் தொலைத்த பேரிளமை.

*தன்னுடைய கனவுகளை
இன்னொரு கண்கள் மூலம் கண்டு
தன்னுடைய ஆசைகளைத்
தன்னுடையதான
இன்னொரு உருவத்தில் உருவேற்றிக்
களிக்கும் தாய்மை.

*உரிமையுள்ள எவையுமே
கடமைகளைப் போல.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...