எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்.:- ( சொல்வனம் )

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்:-
******************************************
மொட்டைமாடிகள்
நடப்பதற்கானவை.
அமரும்போது அமரும்
நிற்கும்போது நிற்கும்
நிழல்களை வரையும்
நிலாவை உடையவை.
முன்னெடுத்து விடப்பட்ட
முடியைப் போலச்
சிலும்பும் மரங்கள்
சிணுங்க நிற்பவை.
அமாவாசையில்
கண்கட்டித்தழுவும்
இரவுப் பறவைகளின்
சத்தத்தில் குலவுபவை.
வரத்துணியாய் வெய்யிலிலும்
நனைதுண்டாய் பனியிலும்
பாசப்பச்சை வெல்வெட்டாய்
சாரலிலும் நனைபவை.
மழையில் பாதத்தூசுகளையும்
பறவை எச்சங்களையும்
கழுவிக் கொள்பவை.
ஆண்டெனா பதித்து
வேற்று கிரகவாசிகளாய்
விழித்துப் பார்ப்பவை.
நாம் கீழே எட்டிப்பார்க்கும்போது
கூடவே எட்டிப் பார்த்துக்
கிறுகிறுத்து அங்கேயே கிடப்பவை.

டிஸ்கி :- இந்தக் கவிதை 20.1. 2015 சொல்வனத்தில் வெளியானது. 


4 கருத்துகள்:

 1. //பாசப்பச்சை வெல்வெட்டாய் சாரலிலும் நனைபவை//

  //ஆண்டெனா பதித்து வேற்று கிரகவாசிகளாய் விழித்துப் பார்ப்பவை.//

  சூப்பரான கற்பனை. அழகான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...