எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 7 நவம்பர், 2015

ஏழாண்டுச் சலிப்பு.

நட்பில் இணைந்தார்கள்
செல்லப்பேர் வைக்கும்
மோகத்தில் முகிழ்ந்தார்கள்
தினமொரு பூவாயும்
கணமொரு அணைப்பாயும்
பரிசளித்துக் கொண்டார்கள்
சுற்றிய ஊர் உண்ட உணவு
சுற்றத்தினர் புகைப்படங்களில்
கல்வெட்டாய் செதுக்கிக்கொண்டார்கள் பெயரை

நன்கறிந்த மனிதர்கள்
நட்பில் நாலுவருஷம்
இழுத்துச் சலித்து
இன்னும் மூணு வருஷம்
ஒவ்வொரு கணத்தையும்
உற்றுணர்ந்தவர்க்கு ஏழாண்டுச் சலிப்பு
இன்று இணைப்பில் இல்லை
வாரிசுகளாய்ப் புகைப்படங்கள்
மேலெழும்பி அறிவிக்கின்றன
அவர்கள் நட்பில் வாழ்ந்த காலங்களை.

 

8 கருத்துகள்:

 1. படித்த காலத்து நட்புகளா, எழுதிய கால நட்புகளா!

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜெயக்குமார் சகோ

  ஆம் பாலன் சார்

  எழுதிய காலம்தான் ஸ்ரீராம். :)

  நன்றி நாகேந்திர பாரதி

  ஆம் ஜம்பு சார்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...