எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 ஜூன், 2014

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் அன்புள்ளங்களின் வருகை.

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வுக்குத் தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு ( எழுத்தாளர் கவிஞர், மபொசி அவர்களின் பேத்தி ), தோழி நாச்சிமகள் சுகந்தி ( அவள் விகடனில் பணி புரிகிறார். கவிஞர் ) , என் மாமா மகள் வள்ளிக்கண்ணு , ( எழுத்தாளர், விமர்சகர், என் மூன்று நூல்களையும் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் வாங்கியவர் ) , நண்பர்கள் பாலசுப்ரமணியன் முனுசாமி ( பாண்டிச்சேரியில் இருந்து இதற்காக வந்தார்.
ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ள பொறியாளர் இவர், கவிஞர் எழுத்தாளர், புதுவை தமிழ்ச் சங்கத்தில் செயலாளர் ) மணவாளன் ஆறுமுகம் ( அஹமதாபாத்தில் இருக்கிறார். க்ரீன் இந்தியா என்ற அமைப்பில் இருக்கிறார். என் இரண்டு நூல்களையும் வாங்கி அங்கே பள்ளி லைப்ரரிகளுக்கு வழங்கி இருக்கிறார். , நரேந்திர குமார்( விமர்சகர் ,), மெல்லினம் தினேஷ் ( மெல்லினம் பத்ரிக்கையை மாதாமாதம்  இங்கே இருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு அனுப்புவதும் இவர் பணிகளில் ஒன்று ) ,டிஸ்கவரி புத்தக நிலையம் வேடியப்பன் சகோ( எழுத்தாளர், குறும்படம் திரைப்படம் இயக்குநர் ) , மற்றும் இளங்கோ கோதண்டம், ( இவரது தந்தை கோ. மா. கோ. கோதண்டம் 100 நூல்கள் வெளியிட்டு உள்ளார். இவரது தாய் ராஜேஸ்வரி கோதண்டம் 27 நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் 3 நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். ) ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளும் அன்பும் வாழ்த்தும். :)

////ஏப்ரல் 27 , 2014  அன்று கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் "அன்ன பட்சி" கவிதைத் தொகுப்பு விமர்சன நிகழ்வு அகநாழிகையில் நடைபெற்றது.

அகநாழிகை வாசுதேவன் தோழர் புதிய கவிதை தொகுப்புகள் வெளியிடுவது, புத்தகக் கடை நடத்துவது, இலக்கிய இதழ் கொண்டுவருவது போன்ற விஷப் பரிட்சைகளில் இறங்குவார் என்று தெரியும் ஆனால் நேற்று என்னை நிகழ்வை தொகுக்கச் சொல்லும் அளவுக்கு விஷப் பரிட்சையில் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை, நல்ல வேளை அவரே தொகுத்ததால் ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது.

தொகுப்பு குறித்தும் கவிதைகள் குறித்தும் அவரவர் தங்கள் பார்வை சார்ந்தும், அனுபவம் சார்ந்தும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்; கவிதை தொகுதி பற்றிய நிகழ்வு என்றாலும் தீவிரமாக இல்லாமல் கலகலப்பாகவே சென்றது. சிறப்பு விருந்தினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஏறக்குறைய தொகுப்பில் உள்ள அத்தனை கவிதை வரிகளை பிரித்து, அலசி தன் பார்வையில் விமர்சனம் செய்தார்.

இறுதியாக பேசிய தோழி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் தன் பேச்சின் நடுவே "எதற்கு படைப்பாளிகள் அரசியல் பற்றி பேச வேண்டும்..?" என்று ஒரு கேள்வியை எழுப்பினார்....(அதையேதான் அக்கா நானும் கேட்கறேன்....) அகநாழிகை வாசுதேவன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"தாதா" வாக முடியாதவன் "தாதா" வுக்கு பக்கத்தில் கம்பீரமாக நிற்பது போல, கவிஞராக முடியாவிட்டாலும் புகைப்படங்களில் கவிஞர்கள் அருகே நின்று கொண்டேன்.

தோழர்கள் பரமேசுவரி திருநாவுக்கரசு, Vediyappan Discovery Book Palace போன்றவர்களையும் முதல் தடவையாக தோழி Natchimakal Suganthi அவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.///




நன்றி நரேந்திரன் அருமையாக எழுதியுள்ளமைக்கு. அன்பும் வாழ்த்துக்களும் வருகை தந்த மக்களுக்கு. :)


8 கருத்துகள்:

  1. மிக மிகச் சிறப்பா இருக்குங்க.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான நிகழ்வு....நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. சகோதரிக்கு, தேவகோட்டையானின் வாழ்த்துக்களும் கூடி.....
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்தியமைக்கு நன்றி ராமமூர்த்தி சார்

    மிக்க நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி இளங்கோ சிறப்படைய வைத்தமைக்கு

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி KILLERGEE

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள் தேன். அருமையாக விழா நடந்தது குறித்து சந்தோஷம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...