எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 டிசம்பர், 2013

கருணை :-

கருணை:-
****************
காய்கறிகளைக் கழுவும்
வீட்டுக்காரி கையிலிருந்து
விடுபட்டு செம்மண்ணில்
வீழ்கிறது பொடிக்கருணை.

ஆடிக்காற்றில்
மூடிவைத்ததுபோல்
வேர்பிடித்துக்
கிளைவிட்டு
எட்டிப் பார்க்கின்றன
சில இலைகள்.

தண்டு தடித்து
இலைகள் கைகள் போல
பெருகுகின்றன.

பூவில்லை,
காயில்லை,
கனியில்லை.
கார்த்திகைவரை
கழனித் தண்ணீரைக்
குடித்தபடி கிடந்தது.

வெற்று இலைகள் பார்த்து
வெகுண்ட வீட்டுக்காரி
மடியும் மஞ்சள் இலையோடு
கொத்தாய்ப் பிடித்து
வலுவோடு பிடுங்குகிறாள்.

கிளைகிளையாய்
கிழங்காய்ப் பல்கி
அவள் கைகொள்ளாமல்
கிடந்தது.,  கேட்காமலே
வீழ்ந்த கருணை.


6 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராமலெக்ஷ்மி :)

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சாந்தி

    நன்றி கோமதி மேடம்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...