சனி, 28 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச் பதில்கள்.


முக நூல் நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் ரவி நாக். நாகராஜ ரவி என்ற பெயரை முக நூலில் சுருக்கி வைத்திருக்கிறார். சயின்சிலிருந்து சாப்பாடு வரை விலாவாரியாகவும் விலா நோகவும் சிரிக்கவைக்குமளவு எழுதுபவர். 


முகநூலில் கண்ணியமாகத் தோற்றம் தரும் மதிக்கத் தகுந்த அக்காக்கள் வரிசையில் என்னையும் ஒருத்தியாகக்  குறிப்பிட்டவர். என் சமையல் குறிப்புக்களையும் புகைப்படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் சமையல் ராணி என்றால் நான் சாப்பாட்டு ராமன் என்று சொல்வார். 

இவரின் ஆன்லைன் கல்வி சேவை பற்றி முன்பே என் வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

இவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக  4 கேள்விகள் கேட்டு 4 பதில் வாங்க 4 மாசம் ஆயிடுச்சு. :) ( இரண்டு மாதம்தான் ஆச்சு. ரிதமிக்கா இருக்கட்டுமேன்னு 4 மாசமா ஆக்கிட்டேன் ).

////1. காதல் என்பது எதுவரை?

2.  சயின்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி எழுதுற உங்களுக்கு சமையல் பத்தி ஏதும் தெரியுமா. 

3. காதல் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ் எது பெஸ்ட்ன்னு நினைக்கிறீங்க.

4. உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார். பிடிக்காத அரசியல்வாதி யாரு.////

1. காதல் என்பது எதுவரை?

 தனக்கு கல்யானம் ஆயிடுச்சினு மறந்த வரை.


2. சயின்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி எழுதுற உங்களுக்கு சமையல் பத்தி ஏதும் தெரியுமா. 

சமையல் பத்தி தெரியுமாவா, சமையலும் சயின்ஸும் ஒன்னுதான் - எல்லாம் கரெக்டா போடலைனா விபரீதமா போயிரும். நான் மற்ற பெண்களை போன்று சுடு தண்ணீர் மட்டும் சமைக்க தெரியாது, நல்லா சவுத் இந்தியன்ல இருந்து சவூத் அமெரிக்கன் ஃபுட் வரை சமைக்க தெரியும்.


3. காதல் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ் எது பெஸ்ட்ன்னு நினைக்கிறீங்க.

யாருக்குங்கிறது முக்கியம். நல்ல நண்பனுக்கு காதல் திருமணமும், நமக்குனா அரேஞ்சுடு திருமணமும் தான் செய்து கொள்வேன்.

4. உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார். பிடிக்காத அரசியல்வாதி யாரு.

என்னை கவர்ந்த அரசியல் வாதி அப்துல்கலாம் இந்தியாவிலும், யாசின் அரஃபாத் என்னும் பாலஸ்டைனை சேர்ந்தவரும் தான் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் வாதிகள். இவர்கள் இருவரும் என்னை கவர்ந்த உண்மையான ஹீரோக்கள். பிடிக்காத உள்ளூர் அரசியல் வாதி - திக் விஜய் சிங்கும் / உலக வரிசையில் ஜார்ஜ் புஷ்ஷூம் தான்.

-- நன்றி ரவி. என்னுடைய ப்லாகுக்காக ,நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் விழித்திருந்து உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் கொடுத்தமைக்கு.

////என்னது பெண்களுக்கு சுடுதண்ணீ மட்டும்தான் வைக்கத் தெரியுமா.. நான் சொல்லலப்பா ரவி சொல்றாரு.. ///

/// அமெரிக்காவுல இருந்துகிட்டு ஜார்ஜ் புஷ்ஷைப் பிடிக்காதுன்னு சொல்லீட்டீங்க. ஒபாமா காப்பாத்திடுவாருன்னா :) ///

சிண்டு முடிறதும்பாங்கள்ல அப்பிடின்னா எனக்கு என்னன்னே தெரியாது ரவி. பதில்களுக்கு நன்றி நன்றி நன்றி.. !!!

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பர்...!!!

Geneva Yuva Aagaaya Manithan சொன்னது…

அக்கா, இத ரவி படிச்சாரா ?ங்கறது தான் மில்லி(யம்) டாலர் கேள்வி ;)

சே. குமார் சொன்னது…

அருமை... அருமை...

Nag Ravi சொன்னது…

Yes i READ very nice thanks

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ஆகாயா மனிதன்.. படிச்சிட்டாரு :) !

நன்றி குமார்

நன்றி ரவி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...