எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 நவம்பர், 2013

புஜ்ஜியும் பொம்மைகளும். :-

1. அட்டைப்பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்..
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை..


2. அட்டைப் பெட்டியில்
மண் அள்ளி விளையாடுகிறாய்
பிட்டுக்காய் அல்ல..

3. பால் டின் என
உனை அழைக்கும்போதெல்லாம்
கையாட்டிச் சிரிக்கிறது
பால்பாட்டில் பிடித்த பார்பி.

4. நான் அரிசி மாவில் கோலமிட
நீ அரிசியள்ளிக் கோலமிட
வேடிக்கையாய்  காத்தபடி
எறும்பும் காக்கையும்.


5. எல்லா பொம்மைகளுக்கும்
தினமும் இரவில் போட்டி..
அம்முவின் அணைப்பில் உறங்க..

சூப்பிய விரலோடு
அவள் கை நெகிழும்போது
மல்லாக்க உறங்குகிறது யானை.

மார்பில் கிடக்கிறது மான்குட்டி
கழுத்தை முகர்கிறது முயல்.

கால் மேல் கால் போட்டபடி கரடி..
விரல்களைப் பற்றியபடி பார்பி.

காரும் ஏரோப்ளேனும் இடம்கிடைக்காமல்
தரையில் விழுந்து தாறுமாறாய் அடம்.

டிஸ்கி:- இந்தக் கவிதை அக்டோபர் 31, 2013 வல்லமை மின்னிதழ் தீபாவளி ஸ்பெஷல் இஷ்யூவில் இடம் பெற்றது.  

என் “ங்கா” நாயகி ஆராதனாவுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். :)


6 கருத்துகள்:

  1. அருமையான பதிவு இனிய மொட்டுக்களுடன் !!!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    இன்றைய நாளுக்கு அமைவாக கவிதை அமைந்துள்ளது.. அத்தோடு மின்இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
    சிறுவர் தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. anbin theenammai - arumaiyaana kavithai - padangkazhum Super - I enjoyed

    Chella Aradhana ullitta anaiththuk kuzanthaikaLukkum iniya kuzawthaikaL thina nal vaazhthugal - Regards - Cheena - Sorry No Tamil Font

    பதிலளிநீக்கு
  4. நன்றி சங்கர் ஜி

    நன்றி ரூபன்

    நன்றி சீனா சார் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...