எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 டிசம்பர், 2012

அசூயை.

பின்னெப்போதும்
இருந்திருக்கவில்லை
அந்த உணர்வு.

புரவி பிடறி சிலிர்க்க
ஓடியபோதும்
வியர்த்திருந்தது.

காணாத ஒன்றைக்
கண்டதாய்
பொய்ப்பித்தது கண்.


நினைவுகள் தப்பிய
நேரத்தில் வேர்
பிடித்திருந்தது பயம்.

கண்ணேறு., காத்து
கருப்பு., மோஹினி
எல்லாம் சுத்தினபடி.

ஒரு ஆழப்பாயும்
வெறுப்பு கத்தியில்லாமல்
குத்தினபடி..

ஒன்றுமற்று கலக்கும்
காழ்ப்பின்முன்
கவிழ்ந்திருந்தது தன்மை.

பின்னெப்போதும்
சந்திக்க முடியவில்லை
அசூயை படிந்த கண்களை.

**************************************

இடறி விழவைத்தும்
போதாமல் இருப்பற்றுத்
திரிந்து கொண்டிருக்கிறது..

சாவேற்படுத்துவதற்கில்லை.
வெறுப்பேற்படுத்துவதற்கே
வெறித்துப் பார்க்கிறது.

குழம்பிக் கிடக்கும்
மென்மையை மிதித்து
சவாரி செய்கிறது.

இன்னும் காயங்கள் படாத
இடங்களைக் குறிவைத்து
கோரைப் பற்கள் பதிக்கிறது.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 14, நவம்பர் , 2011 திண்ணையில் வெளிவந்தது.


5 கருத்துகள்:

  1. சாவேற்படுத்துவதற்கில்லை.
    வெறுப்பேற்படுத்துவதற்கே
    வெறித்துப் பார்க்கிறது.--அசூயை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சீனி

    நன்றி மாற்றுப் பார்வை

    நன்றி ராஜி

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...