எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 நவம்பர், 2012

காதலும் சாதலும்

இன்னிக்கு முளைச்ச 20 வயதுப் பிள்ளைகள்   நேத்திக்கு முளைச்ச 40 களில் இருக்கும் அப்பா அம்மாவையும் மதிப்பதில்லை.  முந்தாநாள் முளைச்ச 60 களில் இருக்கும் தாத்தா பாட்டி சொல்பேச்சும் கேப்பதில்லை.

ஒரு பெண் அப்பா அம்மாவை மதித்திருந்தால் அவர்களின் சம்மதத்தோடு மணப்பதுதான் காதலுக்கு மரியாதை. அதை விட்டு என்னவோ நடக்கட்டும் நாம் பாடு போவோம் எனப் போனதால் இன்று எத்தனை உயிர்கள் பலி. என்ன ஒரு சுயநலம். 20 வயது வரை வளர்த்த தகப்பன் முக்கியமில்லை, தாய் முக்கியமில்லை. சமூகத்தில் அவர்களின் மதிப்பு முக்கியமில்லை தன்னுடைய காதலும் காமமுமே முக்கியம் என்றால் அந்தப் பையனை அழைத்து வந்து  அவனுடைய நல்ல நடத்தைகளையும் குணநலன்களையும் புலப்படுத்தி சம்மதம் வாங்கித்தான் மணந்து கொண்டிருக்க வேண்டும்.


அந்தத் தந்தையாகட்டும். என் மகள் என்றைக்கும் நல்ல முடிவுதான் எடுப்பாள். அவள் செய்தால் தவறாயிருக்காது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவில்லை. சமூகம் என்ன சொல்லும். எப்படி நம்மைப் பிரித்து வைக்கும். அதன் பின் நம் நிலைமை என்ன.. என்ற சிந்தனையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தான் பெற்ற பெண்ணே தன் சாவுக்குக் காரணமாவாள் என அவர் நினைத்திருப்பாளா.

சமூகத்தின் அங்கீகாரம் முக்கியம்தான். ஆனால் அதுவே முழுமையானது அல்ல. எல்லா இடங்களிலும் கலப்புத்திருமணங்கள் இருவீட்டாரின் சம்மதத்தோடு நடக்கின்றன. இன்றைய தேவை நம் கிராமங்களில் இன்னும் விழிப்புணர்வுதான். மனிதரின் ரத்தம், கண்ணீர் , உணர்வு, பாசம், பிறப்பு, இறப்பு எல்லாம் ஒன்றேதான். இதை கறுப்பு சிவப்பென்றோ, உயர்வு தாழ்வென்றோ  எப்படிப் பிரிப்பது.

காதலர் இருவர்  கருத்தொருமித்த வாழ்வில் பலர் புகுந்து இன்னும் பலரின் வாழ்வைச் சிதைப்பது என்ன நியாயம். இந்த அதிகாரத்தை எப்படி அவர்கள் கைக்கொண்டார்கள். உணர்வுக் கூச்சலில் செய்துவிட்டு பின் அதற்குப் பரிகாரம் தேட முடியுமா. மனித உயிர்கள் மதிப்பானவை.ஒவ்வொன்றின் உள்ளும் என்னென்ன ஆசைகள் , எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் உறைந்திருந்ததோ..

ஒரு காதல் படம் வந்தது. அது படமாகவே போய் விட்டதா.. அம்மா காதல் தேவதை ., உன் குழந்தையும் ஒருவரை விரும்பலாம்.அப்போது நீயும் பெருந்தன்மை உள்ளவளாய் இரு.

மதங்களையும் மாசுகளையும் நீக்கி மனங்களைக் கொஞ்சம் விசாலமாக்குங்கள்.நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். மனிதர்களை வாழ விடுங்கள்.


8 கருத்துகள்:

  1. இந்தக் கட்டுரைக்கு பின்புலம் ஏதாவது இருக்கிறதா?
    பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதே தவறான எதிர்பார்ப்பில்லையா?

    பதிலளிநீக்கு
  2. Nadagathil Kaviyathil Kaathal entral Nattil Ullor Ellam Viyanthu Nantram enbar, Vedagatthe, Kinathoratthe Kaathal entraal paaviyellam urumukintrar, Paadai katti athai kolla vazhi seikintrar.

    Kaathal, kaathal, kaathal
    Kaathal intrel Saathal, Saathal, Sathal entra Mahakavi Bharathi in varigal ninaivirku varukirathu.

    Kaathalikkum mun ethir kaalathai unarnthu kaathalippathu mikavum nallathu. Entha nilaiyilum eruvarum inai piriyakkodathu.

    பதிலளிநீக்கு
  3. தர்மபுரி ஒன்றும் அந்த வகையில்லை
    தாழ்ந்த சாதிவெறியால் தலைகுனிவு

    பதிலளிநீக்கு
  4. பெற்றவர்களை மதிப்பது முக்கியம் தான், ஆனால் பெற்றவர்களின் முட்டாள் தனங்களை மதிக்க வேண்டியதில்லை ... !

    சாதி கவுரவம் தான் பெற்றோரின் சமூக மதிப்பு என்றால், அப்படி பட்ட கவுரவத்தை மதிக்க வேண்டியதில்லை.. வயது வந்த பெண் மனம் விரும்பி மணம் செய்வது தடை இல்லையே, சொல்லப் போனால் பெற்றோர் அப்பெண்ணை பாராட்டி மணம் முடித்து வைத்திருக்க வேண்டும் ... !!!

    கிராமங்களில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் கூட பிற சமூகத்தில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது ஆள் நல்லவனா, சம்பாதிக்கின்றானா, ஒழுக்கமானவனா என்பதை பார்ப்பதை விடவும். தம் சாதியா, மதமா, நிறமா, இனமா எனத் தான் பார்க்கின்றார்கள். என்ன தான் புரிய வைக்க முயன்றாலும் பெற்றோர் பலர் புரிந்துக் கொள்வதே இல்லை...

    கனடாவில் மாற்று சமூகத்தில் மணக்க நினைத்த பல பெண்களை கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள் நம் தெற்காசிய பெற்றோர்கள் .. !

    உடன் போக்கு என்பது புதிதான ஒன்றல்லவே, பழம் இந்திய சமூகத்தில் இருந்து வந்தது தானே.. இதற்கு போய் தந்தை தற்கொலை செய்ததும், பழிவாங்குவேன் என ஊராரை அடித்து கலவரம் பண்ணியதும், அந்த காதலர்களின் பிழை இல்லையே ... !

    மற்றப்படி பதிவின் இறுதி சாரங்களை ஏற்றுக் கொண்டு வழிமொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  5. நிதர்சனமான உண்மை... நன்றாக முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரை இந்தக் கட்டுரைக்கு பின்புலம் எதுவுமில்லை. ஒரு ஆதங்கம்தான். பெற்றவர் சொல் கேட்டால் பாதி பிரச்சனை இல்லையே.

    நன்றி மணவாளன்

    நன்றி வேல் முருகன். ஆனால் இதை மணமகன் மணமகள் இருவரும் தவிர்த்து இருக்கலாமே..

    நன்றி இக்பால் செல்வன். ஒருவரின் அதுவும் பெற்று வளர்த்தவர்களின் நம்பிக்கையையும், ஆசைகளையும் சிதைத்து அவர்களின் பிணத்தின் மேல் திருமணம் புரிந்து கொள்வது சரியா.பெற்றவர்களின் காலம் வேறு, நம்முடைய காலம் வேறுதான். ஆனால் நாம் ஒரு கட்டுக் கோப்பான சமூகத்தில் வாழ விழைந்தால் இதெல்லாம் ( அந்தத் தந்தை ) பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக அப்பாவிகளைப் போட்டு வதைத்தது என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. அது தவிர்க்க வேண்டிய மிருகத்தனம்.

    நன்றி தனபால்

    நன்றி அவர்கள் உண்மைகள்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...