எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 அக்டோபர், 2012

அலமாரி

குழந்தைகள் வளர வளர
உடுப்புக்கள் வளர்வதுபோல்
அலமாரிகள் வளர்வதில்லை.
 நகைகளும் சில சேர்ந்ததால்
லாக்கருடன் இன்னொரு பீரோதேடி
கணவனும் மனைவியும்
கடைகடையாய் அளந்தார்கள்.

அவன் சாக்லெட் நிறமெனில்
அவள் அது செங்கல் நிறமென்றாள்
அவள் சில்வர் க்ரே எனில்
அவன் அது கல்லறைச்சாம்பலென்றான்.
கறுப்புநிற அலமாரி பார்த்து
அது சாத்தானின் நிறமென்று
தள்ளிப் போகிறார்கள்.


இருவருக்கும் பிடிக்காததான
ஒரு ஆகாய நீலத்தில்
அலமாரி வீடு வந்து அடைய
துணிகளையும் நகைகளையும் அடைத்ததும்
பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.,
“ இதிலேயே மயில்தோகை நிறத்தில்
அற்புதமாய் ஒரு அலமாரி இருக்கிற”தென.

நீதான் கெடுத்தாய் என
சண்டையிடத் தொடங்கினார்கள் இருவரும்.
தான் புதிதாய் வந்த சந்தோஷம் தொலைந்து
தொங்கும் துணிகளோடு
தலைகுனிந்து வருந்தியது
வேண்டாத விருந்தாளியாய் அலமாரி.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 25,ஜூலை,2012 அதீதத்தில் வெளியானது.


3 கருத்துகள்:

  1. உண்மையில் நடக்கும் சம்பவம்... (பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றாலே இப்படித்தானே... நாம் தான்...)

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...