செவ்வாய், 2 அக்டோபர், 2012

இன்னொரு ஜென்மம்.

பள்ளித் தோழனைப் போல
தோளணைத்துச் செல்ல வேண்டும்.
காக்காய் கடி கடித்து
கமர்கட் சாப்பிட வேண்டும்.
அட்டை வாளால்
விளையாட்டாய் சண்டை
போட்டுக் கொள்ளவேண்டும்.

பள்ளி வரவில்லை என்றால்
வீடு தேடி வரவேண்டும்..
கள்ளத்தனம் இல்லா
கண்களால் கோத வேண்டும்.
கைகோர்த்து கதைபேசிக்
களிக்க வேண்டும்.
இவ்வளவு வளர்ந்தபின்
சந்தித்திருக்கிறோமே..
இத்தனையும் நடக்க
நீயும் நானும் இன்னொரு
ஜென்மம் எடுக்கவேண்டும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது.


4 கருத்துகள் :

Prabu M சொன்னது…

ரொம்ம்ம்ம்ம்பப நாள் கழிச்சுப் பார்க்கிறேன் உங்க வலைதளத்தை.... (காணாமல் போனது நான் தான்!)
முன்பெல்லாம் அடிக்கடி நான் உணவு போடும் 'மின்' மீன்களைக் கடைசிக்குத் தள்ளிவிட்டன பதிப்புகளும், விருதுகளும்....
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மீண்டும் உங்க கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தது.... அழகான பாஸிடிவ் கவிதை....
உங்க எனர்ஜியும் க்ரியேட்டிவிட்டுக்கும் சல்யூட்.... வாழ்த்துக்கள் அக்கா.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைத்த அழகான கவிதை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பிரபு.. திரும்ப வந்ததுக்கும்.:)

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...