திங்கள், 29 அக்டோபர், 2012

மேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.

குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் இருந்து மேக்கப் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறிய கருத்துக்கள் :-

“பொதுவா கேட்டா தேவையில்லைன்னுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்முடைய நிறமிகளை வெண்க்ரீம்கள் மறைத்து வெண்மையாக்கி காண்பிக்கின்றன. இயற்கைப் பொருட்களான தயிர்., எலுமிச்சை., தக்காளிச்சாறு., முல்தானி மிட்டி., தேன் பழக்கூழ்., பாலாடை, கசகசா., கடலை மாவு, பயத்த மாவு போன்றவை கலந்து குளித்தாலே கலர் கொடுக்கும்.


நல்ல உழைப்பும்., ஓய்வும்., உறக்கமும்., சரிவிகித உணவும் முகம் பொலிவாய் வைக்கும். இயற்கையிலேயே நமக்கு என்று ஒரு அழகு உண்டு. இது யோகா தியானம் செய்வதாலும்., பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் மூலமும் கிடைக்கும். மிக அதிகமாக மேக்கப் போடுபவர்கள் முகத்தை நெருக்கத்தில் பார்த்தால் சுருக்கமாக இருக்கும். அடிக்கடி பேஷியல் செய்து சிலர் முகம் கருத்தும் போய் இருக்கும்.

ரிஷப்ஷனிஸ்ட்., ஏர்ஹோஸ்டஸ் போன்ற உத்யோகங்களில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் தேவை ஏற்படின் ( திருமண விழா., பார்ட்டிகள்.,) மிக மெல்லிய மேக்கப் போடலாம். ஆனால் தினப்படி அல்ல, உங்களை உங்களுக்காக., உங்கள் திறமைகளுக்காக., உங்கள் ஆளுமைத் தன்மைக்காக மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும். சில மணி நேரங்களில் கலையக்கூடிய அலங்காரத்துக்காக அல்ல.”

டிஸ்கி:- இந்தக் கருத்து டிசம்பர் 16 - 30, 2011  குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் வெளிவந்தது.

9 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நீங்கள் சொல்லிய விதம் மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

துளசி கோபால் சொன்னது…

உண்மையை உடைச்சுச் சொன்னதுக்கு இனிய பாராட்டுகள் தேனே!

அமைதிச்சாரல் சொன்னது…

//உங்களை உங்களுக்காக., உங்கள் திறமைகளுக்காக., உங்கள் ஆளுமைத் தன்மைக்காக மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும். சில மணி நேரங்களில் கலையக்கூடிய அலங்காரத்துக்காக அல்ல.”//

அப்படிப்போடுங்க :-))

Jayajothy Jayajothy சொன்னது…

ஆம் உண்மை அதுதான். உணர்ந்து உரைத்த பாங்கு அழகு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நல்ல உழைப்பும்., ஓய்வும்., உறக்கமும்., சரிவிகித உணவும் முகம் பொலிவாய் வைக்கும். இயற்கையிலேயே நமக்கு என்று ஒரு அழகு உண்டு

அருமையான அலங்காரமான பகிர்வுகள். பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை கருத்துக்கள்... நன்றி...

Priya சொன்னது…

//உங்களை உங்களுக்காக., உங்கள் திறமைகளுக்காக., உங்கள் ஆளுமைத் தன்மைக்காக மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும்//... மிக அழகா சொல்லியிருக்கீங்க மேடம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மலர்

நன்றி துளசி

நன்றி சாரல்

நன்றி ஜெயஜோதி

நன்றி ராஜி

நன்றி தனபால்

நன்றி பிரியா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...