புதன், 15 ஜூன், 2011

மாயை....

மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பதுபெண் என்பது
அந்தரங்கம் மறைக்கும்
உள்ளாடையாகவும்

ஆண் என்பது
கௌரவத்துக்குரிய
பொன்னாடையாகவும்..

கால்மிதியாகவும்
கொடிக் கம்பமாகவும்
கற்பிதப் பெருமையாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)

7 கருத்துகள் :

சசிகுமார் சொன்னது…

கவிதை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

காலம் மாறிவிட்டது.
மாயை மறைந்து விட்டது. மாதராய்ப்பிறக்க
மா தவம்
செய்ய வேண்டும்!

மணமகள் தேவை என்ற
விளம்பரங்களே அதிகம் வருகிறது!

மணமகன் தேவை என்ற
விளம்பரங்கள் மிகமிகக்குறைவே!

இன்று பெண்களின் காலம் பொற்காலம். எல்லாத்துறைகளிலும் கொடிகட்டிப்பறப்பது அவர்களே!

மிகவும் பெருமையாய் உள்ளது.

இந்தக்கவிதை தற்காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த கவிதையை நீங்க கோபமா இருக்கறப்ப எழுதி இருக்கனும்,அல்லது ப்ளஸ் டூ படிக்கறப்ப எழுதி இருக்கனும்.. ஹா ஹா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Simple but powerful kavithai

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சசி

may be true Gopal sir.

நன்றி சிபி

நன்றி ராஜா

நன்றி ரத்னவேல் சார்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...