செவ்வாய், 7 ஜூன், 2011

வேலிக் கொடிகள்..வேலிக் கொடிகள்
************************
வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..


கூடாரத்துணியுள்
பிடித்து வீச முடியாத
வர வெய்யிலாய்..
கடத்தி வெளியேற்ற
முடியாத வாடைக்காற்றாய்..

குட்டைக்குள்
ஆமையாயோ
மழை நேர
மரக்கதவிடுக்கில்
நத்தைப் பூச்சியாயோ

பாசம்பிடித்து
ஊறிக்கிடக்கும்
கிணற்றடிக் கல்லின்
வெறுப்பு மண்டிய
அழுக்குகளாய்..

நினைவின் நுனிகளில்
எப்போது வேர் பிடித்தது
என்பது தெரியாததாய்
எப்போது கசந்தது
வேலியோரப் பாகலாய்

துளைகள் கூடவிடாது
கிளையேறும் வரை
காலம் கடந்ததால்
கழட்டி வீச முடியாது
சுற்றிய கொடியாய்.


டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 30. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது.

10 கருத்துகள் :

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சிறப்பாக கவிதை..
வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வந்த கவிதைக்கும் நாளையோ, நாளை மறுநாளோ குமுதம், விகடனில் வரப்போகும் கவிதைக்கும் வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Beautiful kavithai

தமிழ் உதயம் சொன்னது…

வேலிக் கொடிகள் - எத்தனை சொல்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வேலிக்கொடிகள் பழைய திண்ணையில் படர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.

மாதேவி சொன்னது…

வேலிக் கொடிகளுக்கு வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

வித்தியாசமான கருப்பொருள்! அழகான கவிதை!!

நிரூபன் சொன்னது…

எம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் சொந்தம் எனும் கொடிகளைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான பார்வை நிறைந்த கவிதை அருமை சகோ.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சௌந்தர்

நன்றி சிபி. ஆசீர்வாதமா.. சரி..:0

நன்றி ராஜா

நன்றி ரமேஷ்

நன்றி கோபால் சார்

நன்றி மாதேவி

நன்றி மனோ


நன்றி நிரூபன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...