எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 மார்ச், 2010

அமுதே..! தமிழே..!!எனதுயிரே..!!!

அதென்ன கையில் பூங்கொத்து..?
வாசலில் நின்று கண்ணில் மிரண்டு
உடையைத் திருகியது போதும்.. உள்ளே வா..
என் வீடு எப்போதும் உனக்காய்...
எப்போதோ பார்த்தோம்...
எப்படியெல்லாம் பழகினோம்..
ஏதும் நினைவிலில்லை.,
நீ உன் விட்டை பூட்டிவிட்டு அல்ல..
புதைத்துவிட்டுச் சென்ற அன்று...

இடிந்த சுவராவது தட்டுப்படுகிறதா என
அம்மக்களைப் போல தேடி ஓடினேன்...
ஒவ்வொருவர் வீட்டுக்கும்
உன் சுவற்றின் மிச்சம் .,எச்சம் .,
ஏதுமிருக்கிறதாவென...
உன் புகைப்படம் கூட
வெள்ளரித்துக் கிடந்தது..
குடைக்குள் இருப்பாயோ..?
ஒவ்வொரு குடையையும் பார்த்தேன் ..
அந்த மழைத்துளியில்., சேற்றில்.,
மரத்தடியில்., நிலவில் .,பூக்களில் .,
பொம்மைகளில் ...எங்குமில்லை...
உனக்குள் நான்., எனக்குள் நீ என்றாயே..
உயிர் நீங்கிய மெய்யானேன்...
அன்பை மட்டுமே கையளிக்கத் தெரிந்தவளே..
குண்டு வைக்க எப்போது கற்றுக் கொண்டாய்..?
வெடித்துச் சிதறிய என் இதயத்தைப் பிடித்துக்
காத்திருந்தேன் நம்பிக்கையோடு...
அந்த மருதாணிச்சிவப்பில் தெரிந்த அன்பில் கூட
உன் முத்த ரேகை இருக்கலாம்...
உன் அணைப்பும்., முத்தமும்., மொத்தமும்
தேடித் தேடிப் பிச்சியானேன்...
பிரியத்தால் அடித்தவளே...
கடமைகள் உனக்கிருக்கலாம் ..
ஆனால் காணாமல் போய்விடாதே..
சொல்லிவிட்டுப்போ...
இப்போது உள்ளே வா...
உனக்குப் பிடித்த பப்பு பூவாவும் தச்சிமம்முவும்
பிக்கியும் உன் அக்காவின் கையால் உண்ண ...

டிஸ்கி:- என் அன்பு அம்முவின் அன்புச் செல்லம்
அபிநந்தனின் பிறந்த நாள் இன்று பல்லாண்டு
காலம் நீடூழி வாழ்க.. வளமுடன்.. நலமுடன் ..
எங்கள் அன்பு அபிநந்தன் செல்லம்..என் அம்முவுக்கு
அன்புப் பரிசு இந்தக் கவிதை

37 கருத்துகள்:

  1. அக்கா இடுகை எப்பவுமே அருமைதான்.. ஸ்மால் டவுட் எப்படிக்கா வாரத்துல4~5பதிவு போடுறீங்க..?? great kkaa... :)

    பதிலளிநீக்கு
  2. கவிதைக்கு உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்து அபிநந்தனுக்கும்:)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள், பிறந்த நாள் கொண்டாடும் நந்தனுக்கும், உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்!



    ------------

    உன் புகைப்படம் கூட
    வெள்ளரித்துக் கிடந்தது.

    வெள்ளரித்து - கேள்விப்பட்டதில்லை

    பதிலளிநீக்கு
  5. அபிநந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வரியும் கொள்ளை அழகு..... :)
    ஒரு தமிழ்ப்பூங்கொத்து... வாழ்த்துக் கவிதையாய்....
    நாங்களும் வாழ்த்துகிறோம்... :)

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்!

    பெயர் அழகு !
    பயலுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. இடிந்த சுவராவது தட்டுப்படுகிறதா என
    அம்மக்களைப் போல தேடி ஓடினேன்...//
    அடடடடா !! சுவிட்ச் போட்டது போல் கவிதை எப்படி இப்படி வருது.

    பதிலளிநீக்கு
  9. //என் அன்பு அம்முவின் அன்புச் செல்லம்
    அபிநந்தனின் பிறந்த நாள் இன்று பல்லாண்டு
    காலம் நீடூழி வாழ்க.. வளமுடன்.. நலமுடன் ..
    எங்கள் அன்பு அபிநந்தன் செல்லம்//


    அக்கா யாருக்கா அபிநந்தன் முடிந்தால் சொல்லுங்கள், ஆண்டு நூறு வாழ ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அபிநந்தனுக்கு எங்கள் வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  11. வழக்கம் போல் கவிதை கலக்கல்!! அபிநந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பெயர் அழகா இருக்குக்கா...

    பதிலளிநீக்கு
  12. //பப்பு பூவாவும் தச்சிமம்முவும்
    பிக்கியும் //

    sshrrp! sshrrp! :)

    பதிலளிநீக்கு
  13. //உனக்குள் நான்., எனக்குள் நீ என்றாயே..
    உயிர் நீங்கிய மெய்யானேன்...
    அன்பை மட்டுமே கையளிக்கத் தெரிந்தவளே..
    குண்டு வைக்க எப்போது கற்றுக் கொண்டாய்..?
    வெடித்துச் சிதறிய என் இதயத்தைப் பிடித்துக்
    காத்திருந்தேன் நம்பிக்கையோடு...//

    ஆஹா வரிகள்...அபிக்கும் அம்முவுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. குடைக்குள் இருப்பாயோ..?
    ஒவ்வொரு குடையையும் பார்த்தேன் ..
    அந்த மழைத்துளியில்., சேற்றில்.,
    மரத்தடியில்., நிலவில் .,பூக்களில் .,
    பொம்மைகளில் ...எங்குமில்லை...


    நல்லாயிருக்குங்க....
    நம்ம பக்கமும் வரலாமே....!!!!

    பதிலளிநீக்கு
  15. அபிநந்தனுக்கு எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  16. நன்றி சிவாஜி சங்கர்

    நன்றி பாலா சார்

    நன்றி சை கொ ப

    பதிலளிநீக்கு
  17. நன்றி சிவாஜி சங்கர்

    நன்றி நட்புடன் ஜமால்

    நன்றி பிரபு

    பதிலளிநீக்கு
  18. நன்றி நேசன்

    நன்றி நாய்க்குட்டி மனசு

    நன்றி பத்மா

    பதிலளிநீக்கு
  19. நன்றி சசிகுமார் ..

    அம்மு என் முகப் புத்தகத்தங்கை சசி

    மிக அன்பானவள்.. அவளோட பையந்தான் அபிநந்தன்..!!

    நன்றி ரிஷபன்

    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  20. நன்றி மேனகா

    நன்றி பட்டியன் என்ன பட்டியன் சிரிப்பு தாங்க முடியலயாஉங்க அன்பிற்குரிய சின்ன தங்கச்ச்சி அல்லது தம்பி இருந்தால் எப்படி அவர்களை செல்லமாக வைத்துக் கொள்வீர்கள் பிடித்ததெல்லாம் கொடுத்து ...அதுதான் இது ..:))))))))))))))))

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  21. நன்றி சீமான் கனி

    நன்றி ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
  22. நன்றி குமார் உங்கள் மனசு தளத்தை படித்தேன் மிக அருமை என்னையும் உங்களைக் கவர்ந்த வலைப் பதிவர் என்று குறிப்பிட்டதுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  23. நன்றி விடிவெள்ளி

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  25. நல்ல கவிதை தேனம்மை. அபிநந்தனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள்

    கவிதை எழுதிய அக்காவிற்கும்

    விஜய்

    பதிலளிநீக்கு
  27. //அம்மு என் முகப் புத்தகத்தங்கை சசி

    மிக அன்பானவள்.. அவளோட பையந்தான் அபிநந்தன்..!!//

    ஓ, அப்படியா. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    /உனக்குள் நான்., எனக்குள் நீ என்றாயே..
    உயிர் நீங்கிய மெய்யானேன்...
    அன்பை மட்டுமே கையளிக்கத் தெரிந்தவளே..
    குண்டு வைக்க எப்போது கற்றுக் கொண்டாய்..? //

    இந்த வரிகளைப் படித்துப் பய்ந்துவிட்டேன்!! :-))

    பதிலளிநீக்கு
  28. நன்றி கும்மாச்சி

    நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  29. ஹுசைனம்மா ஏன் பயந்து விட்டீங்க குண்டுன்னு சொன்னது சும்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததை சொன்னேன் உங்கள் தோழி சொல்லாமல் கொள்ளாமல் காணவில்லையெனில் என்ன நினைப்பீர்கள் பலதும் நினைத்து மனது கலங்காதா அதுதான் அப்படி எழுதினேன்

    பதிலளிநீக்கு
  30. என்ன அக்கா இது.. என் கண்கள்ல கண்ணீர் வடியுது உஙகள் கதையை படித்து.. நீங்கள் ஓடியதை பார்த்து நானும் பரிதவித்தேன்.. எஙளுக்கும் அதே கதி தான்.

    பதிலளிநீக்கு
  31. அவள்(அமுதா) சொல்லிவிட்டா போகிறாள்...

    பதிலளிநீக்கு
  32. அக்கா, நான் வெளியூர் போய் இருந்ததால், உங்கள் கடை பக்கம் வரவில்லை.
    ...................... அக்கா, கவிதையில் நீங்கள் அம்மு மேல் வைத்து இருக்கும் அளவிடா அன்பு தெரிகிறது. அக்காவின் அன்புக்குரிய அமுது கொடுத்து வைத்தவள். இனி அவள் அப்படி செய்தால், உங்கள் சார்பாக நானே அவளை கடிந்து கொள்வேன்......................
    அருமையான கவிதை, அக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...