எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு. நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும். சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர் ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா.. சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..