பாலா சார் என்று
நான் அழைக்கும் ஜி எம் பாலசுப்ரமணியன் சார் நான் வியக்கும் ஒரு பதிவர். பூவையின் எண்ணங்கள், gmb writes ஆகிய
இரு பதிவுகளில் எழுதி வருகிறார்.
எல்லாரும் பாராட்டும்
ஒரு விஷயத்தில் அவர் கேள்விகள் எழுப்பி இருப்பார். தற்போது அவரும் தன்மையாகவே பாராட்டிச்
சென்றுவிடுகிறார். அவ்வப்போது அவரது ஆதங்கமும் கேள்விகளும் ஒளிந்துதான் இருக்கும் அவற்றுள்ளும்.
பதிவுகள் எழுதுவதிலும்
வித்யாசம்தான். ஏனெனில் அவர் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் தேடி எழுதி
இருப்பார். நான் ஆத்திகனா, நாத்திகனா, நான் ஏன் பிறந்தேன், ஆலயம் சென்றதனாலாய பயன்,
தொடரும் தேடல்கள் ஆகியன மிகவும் சிந்திக்கவைத்த இடுகைகள். இடையறாத தேடல்தானே மனித வாழ்க்கை.
அவரிடம் சாட்டர்டே
போஸ்டுக்காகக் கேட்டபோது உடன் எழுதி அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
தேனம்மை லக்ஷ்மணனுக்காகபதிவுலகில் நேரில் சந்தித்திராத ஒரு நண்பி. அட்டகாசமாக எழுதுகிறார் நான் என் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை
நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின்
உச்சிக்காகவாவது போகலாம் ( Aim at
the stars At least you will reach the tree top) பரிவை குமாரின் தளத்தில் அவரது அபிலாக்ஷைகளை
கூறி இருந்தார் . அப்போதே என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார்அவர்
என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும்
எழுதுங்கள் சாட்டர்டே போஸ்டுக்கு பதிவிடலாம் என்றார் எழுதி முடித்தபின் பார்த்தால் பதிவின் நீளம் பயமுறுத்துகிறது ஒரு
தலைப்புக்காக எழுதும்போது நீளம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. இத்தனைக்கு பதிவுலகில்
லிங்க் கொடுத்தால் படிப்பவர்குறைவு என்று
தெரிந்ததால் அவற்றை விட்டு விட்டிருக்கிறேன்
என் எழுத்தைப் பற்றி
