ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.
நிலவைப்போல் தேய்ந்து மறைந்து பின் புதிதாய் உருவாகி வருகிறது இன்றைய காதல். ஆனால் இளமதி பத்மாவின் காதலோ என்றும் ஒளிரும் சூரியனாய் மிளிர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டாண்டுகளே ஆயுள் கொண்ட அவரது காதலின் (காதலன் ) நினைவில் பொழிந்த கவிதைகளிலும் அக்காதல் ஆகர்ஷிக்கிறது. நம்மையே புரட்டிப் போடுகிறது. மாலை ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. இரவெனும் தனிமையில் தோயச்செய்கிறது. மறுநாளாய்ப் பூக்கிறது. மனம் கொண்டு மணம் சேர்க்கிறது.
