எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பரிவை சே. குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிவை சே. குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

என்னைப் பற்றி நான்.



2017 -ம் ஆண்டில் என் வலைத்தளத்தில் நட்புக்களைப் பற்றி பகிரும் விதமாக 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வாரத்தில் ஒரு நாள் (புதன் அல்லது ஞாயிறு) ஒதுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்



உங்களுடன் சேர்ந்து சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.  யார் முதலில் அனுப்புகிறார்களோ அதன் அடிப்படையில் வெளியிட எண்ணம்.



தாங்கள் செய்ய வேண்டியது உங்களைப் பற்றி நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம்... முக்கியமாக வலைப்பதிவுகுறித்தும் பணியில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம், புனைப்பெயர் வைத்து எழுதினால் அது குறித்து சொல்ல முடியும் என்றால் சொல்லலாம், தங்களின் நிறைவேறிய / நிறைவேறாத ஆசை, தங்களின் சாதனையாக நினைப்பது, எதிர்கால திட்டம் என எல்லாவற்றையும் குறித்துச் சொல்லலாம்.

மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :) 
ை இங்கேயும் பிக்காம். 
 
http://vayalaan.blogspot.com/2017/04/12.html


என்னைப் பற்றி நான் :-

முதலில் என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப் பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம் உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின் சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.

சனி, 13 செப்டம்பர், 2014

சாட்டர்டே ஜாலிகார்னர். பரிவை சே குமாரின் பத்ரிக்கைப் பயணம்.




வலைத்தளம் மூலம் அறிமுகமான என் அருமைத் தம்பிகளில் ஒருவர் சகோதரர் குமார். நாட்கள் எவ்வளவு ஆனாலும் என் இடுகைகளை வந்ததும் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர் சகோ குமார். இவரின் வலைத்தளத்தில் முன்பு கவிதைகளும், பின் கதைகளும் இப்போது கிராமத்து நினைவுகளும் படித்து மகிழ்வது உண்டு. தொடர்ந்து வலைத்தள சகோதரர்களின் ஊக்குவிப்பால் நாம் எழுதிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.அந்த வகையில் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய என்னுடைய உயர்வில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது குமார்.

எனக்கு மிகப் பிடித்தது பரிவை சே குமாரின் கதைகள். முகநூலிலும் பல்வேறு இடங்களில் இவரின் கவிதைகளும் கதைகளும் பகிரப்பட்டிருக்கும். நிறைய பேர் குமாரின் கதைகளைப் பகிர்ந்து படித்திருக்கிறேன்.  மிக அருமையான சரளமான மொழிக்குச் சொந்தக்காரர் குமார். தனக்கென பத்ரிக்கையிலும் வலையுலகிலும் தனி இடம் பிடித்திருக்கும் குமாரிடம் அவருக்கும் பத்ரிக்கைகளுக்கும் உள்ள பந்தம் பற்றி ஒரு கேள்வி. 

///பரிவை சே குமார் என்ற பெயரில் உங்கள் சிறுகதைகளும் கவிதைகளும் அநேக பத்ரிக்கைகளில் வந்துள்ளன. நீங்கள் எழுதுவதில் உங்களுக்குப் பிடித்தமானது எது. எது எதுல வெளிவந்துருக்குங்குற   முழு விவரமும் கொடுங்க..///

அன்பின் அக்கா...

வணக்கம்...

நலம் நலமே ஆகுக.

தாங்கள் கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் ஊருக்கு வந்திருந்த காரணத்தால் கேட்ட நேரத்தில் அனுப்ப முடியாமல் போனதற்கு முதலில் மன்னியுங்கள்.

உங்கள் கேள்விக்கான பதிலை என் எழுத்தில் சொல்கிறேன்.

நான் எழுத ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் போதுதான்... அதுவும் எனது பேராசான் மு.பழனி அவர்களும் எனது நண்பன் முருகனும் (பாருங்க எங்க எல்லாருடைய பேரும் தமிழ்கடவுள் பேராய் அமைந்திருப்பதை) கொடுத்த தூண்டுதலே காரணம்.

முதலில் எழுத ஆரம்பித்தது கதைதான்... எப்படியிருந்ததோ படித்த ஐயா அருமை என்று சொல்லி வைத்தார்... நான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கவிதைகளில் மனம் பாய, 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே' அப்படின்னு ஒரு கவிதை அம்மா ஜெ... யோட கட்-அவுட் கலாச்சாரத்தை வைத்து எழுதினேன். அது ஐயாவை ரொம்பக் கவர, அவரது முயற்சியில் திரு.பொன்னீலன் ஐயா அவர்களால் தாமரையில் பிரசுரிக்கப்பட்டது. இதுதான் முதல் பத்திரிக்கைப் பயணம்.

Related Posts Plugin for WordPress, Blogger...