எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

கல்வி வளர்ச்சி நாளில் புதுவயல் சரஸ்வதி வித்யாலயாவில் சிறப்பு விருந்தினராக.

காமராஜர் பிறந்த தினத்தில்,  கல்வி வளர்ச்சி நாளில் புதுவயல்  சரஸ்வதி வித்யாலயாவில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு உரையாற்றும்படி அதன் தாளாளர்களில் ஒருவரான திரு முத்து பழனியப்பன் அழைப்பு விடுத்தார். அவர் துணைவியார் திருமதி விஜயலெக்ஷ்மி அங்கே செயலாளர். இலக்கிய மன்ற விழாவும் நடைபெற்றது. 


குழந்தைகளுக்குக் காமராஜரின் எளிமையையும் , மாதா,பிதா, குரு, தெய்வம் ஆகியோரின் உயர்வை நான்கு புராணக் கதைகளின் மூலமும் எடுத்துரைத்தேன். என் உரையிலிருந்து குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டு திருமதி விஜயலெக்ஷ்மி நிகழ்வைக் கலகலப்பாக்கினார். 


ஒருமுகத்தோடு கவனிக்கும் குழந்தைகள்.

ஆசிரியைகள் மற்றும் மாணாக்கியரின் அழகான வரவேற்பு. 
ஆசிரியைகள், ஊழியர்கள், செயலாளர், மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன்.
எனது உரை !
அங்கே நடனம், பாட்டு, வில்லுப் பாட்டு ஆகிய நிகழ்வுகளைக் குழந்தைகள் வழங்கினார்கள். அவர்களுக்கு என் கணவர் மூலம் பரிசு வழங்கச் செய்தார்கள். 


சரஸ்வதி உறையும் கோயிலில் பயிலும் பாக்கியம் பெற்ற மாணவர்கள்


எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.

நடுவில் ஸ்நாக்ஸ், டீ வழங்கினார்கள்.


ஆசிரியை மீனாள் அவர்களின் வரவேற்புரை.
ஃபோட்டோக்கள் முன்பின்னாக அப்லோட் ஆவதால் இது வரவேற்பில் எடுத்தது

கலை நிகழ்ச்சிகளை அளித்த குழந்தைகளோடுஒரு புகைப்படம்.

பெருந்தலைவர் காமராஜர் பற்றி நான்கு குழந்தைகள் உரையாற்றினார்கள் !


வரவேற்ற அழகுக் கண்மணிகள்.

காமராஜர் படத்துக்குப் பூக்கள் தூவியும் வாழ்த்தியும் பேசினார் ஆசிரியை மீனாள். 

பெண்கல்வி பற்றி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அளித்த குழந்தைகள் கல்வியின் சிறப்பைக் கூறியதோடு இந்தியப் பெண் தலைவர்கள் பற்றிக் கூறி முடிவில் செயலர் விஜய லெக்ஷ்மியையும் என்னையும் பற்றிக் கூறி ஆச்சர்யப்படுத்தினார்கள். 

திருமதி சிவகாமி அவர்களும் திருமதி விஜயலெக்ஷ்மி அவர்களும் பரிசு வழங்கினார்கள்.

நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடந்தேறின.


இந்தக் கல்வி ஆலயத்தில் சரஸ்வதி பரிபூரணமாகக் குடி கொண்டிருக்கிறாள். வாழ்த்துக்கள் அனைவருக்கும். நன்றியும். 

எனது உரையையும் வில்லுப்பாட்டு நிகழ்வையும் எனது சேனலில் பகிர்ந்து இருக்கிறேன். 


1863.புதுவயல் சரஸ்வதி வித்யாலயா l கல்வி வளர்ச்சி நாள் l  தேனம்மைலெக்ஷ்மணனுக்கு வரவேற்பு

https://www.youtube.com/shorts/cMiY5FEogMQ


#புதுவயல்சரஸ்வதிவித்யாலயா, #கல்விவளர்ச்சிநாள், #தேனம்மைலெக்ஷ்மணனுக்குவரவேற்பு,

#PUDUVAYALSARASWATHIVIDYALAYA, #KALVIVALARCHINAAL, #THENAMMAILAKSHMANAN, 1848.புதுவயல் சரஸ்வதி வித்யாலயா l கல்வி வளர்ச்சி நாள் l பெண்கல்வி-வில்லுப்பாட்டு l 5ஆம் வகுப்பு மாணவர்கள்

https://www.youtube.com/watch?v=zHY3_QdW_2s


#புதுவயல்சரஸ்வதிவித்யாலயா, #கல்விவளர்ச்சிநாள், #பெண்கல்வி-வில்லுப்பாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PUDUVAYALSARASWATHIVIDYAL1850.புதுவயல் சரஸ்வதி வித்யாலயா l  கல்வி வளர்ச்சி நாள் உரை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AV1hqW1xknQ


#புதுவயல்சரஸ்வதிவித்யாலயா, #கல்விவளர்ச்சிநாள்உரை,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#PUDUVAYALSARASWATHIVIDYALAYA, #KALVIVALARCHINAAL, #THENAMMAILAKSHMANAN,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...