எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பெண் அறம் வெளியீட்டில்..

 என்னுடைய பதினொன்றாவது நூலான பெண் அறம் நமது மண்வாசத்தின் பட்டறிவு பதிப்பகம் மூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று ( சென்ற பெண்கள் தினத்தில் )  வெளியிடப்பட்டது. இந்நூல் இவ்வளவு செறிவாக சிறப்புடன் வெளிவரப் பெரிதும் காரணமானவர் எடிட்டர் திரு ப திருமலை சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். 

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அன்று குழுமி இருக்க நிகழ்வுகளைத் திருமதி சாந்தி தொகுத்து வழங்கினார். இவர் ஒரு ஜாலி பட்டாசு. 

எனது மஞ்சளும் குங்குமமும் நூலை முழுவதும் படித்து வளர் இளம் பெண்கள் குழுமத்திற்காக நடத்தப்பட்ட கேள்விபதில் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி  நந்தினி. 
ஒவ்வொரு களஞ்சியம் பெண்களும் கொண்டு வந்த பூரண கும்பங்கள் 
உலகமெங்கும் வெற்றிக் கொடி நாட்டிப் பரவி வரும் களஞ்சியம் பெண்கள் குழுக்களின் லோகோ பூக்களில். 

முன்னே ஒரு பழக்குடம். 
இவர் அங்கே இருக்கும் களஞ்சியம் அலுவலகத்தில் பணிபுரியும் பாண்டி மீனா. 
சிறப்புவிருந்தினர்கள் பானு, மருத்துவர் நல்லினி அருள், களஞ்சியத் தலைவி சின்னப்பிள்ளை அம்மாள், தலைவி சாந்தி மதுரேசன், வாசிமலை சார், திருமலை சார், சிறப்பு விருந்தினர் பத்மாவதி மேடம் , நமது மண்வாசம் இயக்குநர் வெங்கடேசன் சார்.

நிறைவான நெகிழ்வான வெளியீடு. நல்லினி வெளியிட்டு அனைவருக்கும் ஒரு பிரதியை வழங்குகிறார்.

சின்னப் பிள்ளை அம்மாள் பெற்றுக் கொள்கிறார். 
அன்பும் நன்றியும் உமா மேடம், பானு மேடம், நல்லினி அருள், சின்னப்பிள்ளை அம்மாள், சாந்தி மேடம், வாசிமலை சார், திருமலை சார், பத்மாவதி மேடம், வெங்கடேசன் சார். எனது மூன்றாவது நூலையும் வெளியிட்ட ( பதினொன்றாவது நூல் எனது நூல்களின் வரிசையில் ) பட்டறிவு பதிப்பகம், களஞ்சியம் குழுமம் மற்றும் நமது மண்வாசம் ஆசிரியர் குழுமத்துக்கும் மனமார்ந்த நன்றி ! 

2 கருத்துகள்:

  1. படங்களும் தகவல்களும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...