எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம்.

 வீட்டில் ஒரு ஜோசிய நோட்டுக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். (பஞ்சாங்கம் போல் அனைத்துமே அதில் குறிக்கப்பட்டு  இருந்தன.

திக்கயங்களாவன ( திசைகளுக்கான வாகனங்கள் என நினைக்கிறேன் ) 

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பகந்தம், சார்லபௌமம், சுப்ரதீபம். 

நாகங்களாவன

அனந்தன், வாசுகி, தக்ஷ்கன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன், கார்க்கோடகன் 

சப்த ரிஷிகளாவன

மரீஷி, அத்திரி, ஆங்கிரஸு, புலஸ்தியன், புலகன், பிருகு, வசிஷ்டர். யுக, வருஷம், அயனம், ருது, மாசம், பக்ஷம், திதி, வாரம், நக்ஷத்திரம். யோகம், கரணம், லக்கினம். 

சைத்திரம், வைகாசம், ஜ்யேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆச்வீச்சம், கார்த்திகம், மார்கசீர்ஷம், புஷ்யம், மாகம், பால்குணம். 

கிரகங்களுக்கு இராசியாவான்

மேஷம் விருச்சிகம் - செவ்வாய்
ரிஷபம் துலாம் - சுக்கிரன்
மிதுனம் கன்னி - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
தனுசு மீனம் - குரு
மகரம் கும்பம் - சனி

ஆக இராசி 12 க்கு கிரகம் 7.


பலவித வியாபாரத்தில் மறைவிடமாக விலையில் வழங்கும் பரிபாஷையின் விபரம். ! 

மிஞ்சி 0 - 0- 3. அணா
தங்க இ. அணா
திரிகா நெ. அணா
மதி க. அணா
மதி பிஞ்சி கவ. அணா
மதி தங்க கஇ. அணா
மதி திரிகா களு. அணா
தோவாண்ட உ. அணா

பூவெள்ளை ளு. ரூபா
பிஞ்சி வ
தங்கா இ
திரிகா நெ
மதி க
மதி பிஞ்சி கவ
மதி தங்கா கஇ
மதி திரிகா களு
தோவாண்டை உ
திருவாண்டை ங

சுருதி ச
சரம் ரு
கிராதி சு
திர எ
கிரி அ
மணி க்க
கிளி ய
கிளிமதி யக
கிளிதோடாண்டை யஉ
கிளிதிரிதோவண்ட யங
கிளிசுருதி யச
கிளிசரம் யரு
கிளிகிராதி யசு
கிளிதிரம் யஎ
கிளிகிரி யஅ
கிளிமணி யக்க
தோபுலிமை உய
திருவாண்டபுலிமை ஙய
சுருதிபுலிமை சய
சரபுலிமை ருய
கிராதிபுலிமை சுய
திரபுலிமை எய
கிரிபுலிமை அய
மணிபுலிமை க்கய
முடுகுசாவெள்ளை M
கெட்டிசாவெள்ளை சூ


நான்கு வேதம் 

ருக் யசுர் சாமம் அதர்வணம்

ஆறு சாஸ்திரங்கள்

வேதாந்தம், வைசேஷிகம், பாட்டம், பிரபாகரம், பூர்வமீமாம்சை,உத்ரமீமாம்சை

தானங்கள் 10

கோதானம், பூதானம், இரணியதானம், திலதானம், அர்க்கிய தானம், வஸ்திரதானம், தானியதானம், குளதானம், இரசிதானம், லவணதானம். 

வேதம் 4
சாஸ்திரம் 6.
புராணம் 18

இன்னும் உள்ளவற்றை அடுத்த இடுகைகளில் பகிர்கிறேன். இந்த அணா ரூபாய் கணக்கும் தானங்களில் சிலவும்தான் ( இரணியதானம், இரசிதானம், லவணதானம் )  புரியவில்லை. தெரிந்தவர் விளக்க வேண்டுகிறேன். 

4 கருத்துகள்:

 1. வித்தியாசமான தகவல்கள். பல வார்த்தை பிரயோகங்கள் புரியவில்லை! :)

  பதிலளிநீக்கு
 2. நுணுக்கமாக நோக்கினால் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை எழுத முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
  அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  மிக்க நன்றி ஜம்பு சார். எனக்கும் நேரம் பத்தவில்லை. யார் வலைப்பூப் பக்கமும் வர இயல்வதில்லை.அனைவரும் மன்னிக்கவும்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...