வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பொழுதும் மனசும்.9.4.86.

8. சுருண்டு கிடக்கிறது
பொழுதும் மனசும்

கவிழும் ஓடாய்
இருள்.

உரலும் உலக்கையுமாய்
காற்றும் மரங்களும்.


நிலவின் ஒளி
நிசப்தத்தின் மேல்.
இரைச்சலுடன்.

அங்கங்கே
உதிரும் கூடுகள்
இறக்கையடித்தலில்.

துணித்தட்டியாய்
அசையும் குளம்.

இருள் முட்டை
வெளிச்சக்குஞ்சு பொறிக்கும்.

மனமுட்டையில்
உணர்வுக் குஞ்சுகள்
அலகு தீட்டும்.


7 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

வாசிப்பின் சுகம் தொடங்குமுன்.. முப்பது வருடங்களாக இதைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்ற வியப்பு அடங்கவில்லை.

பரிவை சே.குமார் சொன்னது…

அருமை அக்கா...
படிக்கும் காலத்திலும் எழுத்தின் ஆதிக்கம்...
அருமையோ அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அப்பாதுரை சார். இது கல்லூரிப் பருவத்தில் என்பதால் பழைய ட்ரெங்குப் பெட்டியில் இருந்தது. ( ஹாஸ்டலில் உபயோகப்படுத்தியது )

நன்றி குமார் தம்பி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை சகோதரி! உங்கள் கல்லூரிக் காலத்திலேயே இப்படி அசத்தி இருக்கின்றீர்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பாராட்டுகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...