சனி, 22 ஆகஸ்ட், 2015

தேடிப்பாரேன்..

தேடிப்பாரேன்,
கொஞ்சம் தேடிப் பாரேன்.
நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகளில்
ஆற்றின் கண்ணாடிச் சில்லுகளில்
கொட்டிச் சிதறும்
வெளிச்ச வெள்ளங்களில்
சூரியனின் சூடான முத்தங்களில்
பரந்து ஆடும்
எண்ணப் பஞ்சுகளில்
மேகத் தலையணைகளில்
மரங்களின்
வெளிச்ச முகங்களுக்குள்
பூ மகரந்தங்களுக்குள்
பறந்து கூர்தீட்டும்
பறவைகளின் மூக்கசைப்புக்களில்
காலக்காரன் தூரிகையுள்
செவ்வான விள்ளல்களுக்குள்
இயற்கை விசித்திரங்களுக்குள்
பாலாவியாய்ப் பரந்து
புதைந்து கிடக்கும்
என்னைத் தேடிப் பாரேன்.
நம்பிக்கையுடன் முயற்சி செய்து
தேடிப் பாரேன்..

-- 83 ஆம் வருட டைரி. 

6 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! அருமை! வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை....

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ஸ்ரீராம். சொன்னது…

நான் யார்?

அப்பாதுரை சொன்னது…

இன்றைக்கு இதை எழுதியிருந்தால் எப்படி மாற்றியிருப்பீர்கள் என்று ஒரு கணம் தோன்றியது.

G.M Balasubramaniam சொன்னது…

என்னைநான் தேடிப்பார்க்கும் அனுபவங்களைப் பதிவாக்குகிறேன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி நாகேந்திர பாரதி

ஆமா ஸ்ரீராம் சொல்லுங்க. நீங்க யார் :)

நான் இதைப் பற்றி ஒரு கணம் யோசித்து வார்த்தைகளை மனதுக்குள் மாற்றிப் பார்த்து சிரித்துவிட்டேன் அப்பாதுரை சார் :)

அருமையான பதிவுகள் பாலா சார். நேரம்கிடைக்கும்போது வாசிப்பேன். நன்றி கருத்துக்கு. :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...