எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். கல்யாணி சங்கர் - ஐம்பெரும் பதிவர்களும் ஆதிபதிவர் நா(ன் அ)னானியும் .!


கல்யாணி மேம் வலையுலக ப்ரபலம். நானானி என்ற பெயரில் கமெண்டுகள் அட்டகாசமா இருக்கும் . ஜாலி கேலி கிண்டல் எல்லாம் கலந்த இவர் நம் ஜாலி கார்னருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று ஜூலை 7 , 2014 அன்னிக்கு இவங்ககிட்ட இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டேன் மக்காஸ். ஆனா பாருங்க நெம்ப சீக்கிரமா டிசம்பர்லேருந்து பார்ட் பார்ட்டா அனுப்பினாங்க.

நானும் ராஜபார்ட் ரங்கதுரை மாதிரி ” அம்மம்மா பதில் தருவீங்கன்னு நம்பி  இவள் உங்ககிட்ட வந்துட்டா “ என்று பாடாத குறையாகவும். (ஹிஹி ) "வூட்டாண்டே வந்து வாங்கிக்கிடவா" என்று சாம பேத தான தண்டமில்லாமல் கூவியும் ( ஹிஹி ) பதில் வாங்கிட்டேன். "வூட்டுக்கே வர்ரதுன்னாலும் சர்ர்த்தாம்மே..'வா வாத்யாரே வூட்டாண்ட' “ என்று பதில் கொடுத்த ஜாலி பட்டாசு இவர் . :)

யுரேகா என்று கூவாத குறை. -- ஹலோ சுரேகா(சுந்தர்)  உங்களைக் கூப்பிடல.. :P :P :P  இங்கேயே 5 பதிவர்கள் இருக்காங்க. ஒரு வழியா எனக்கு பதில் கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். :)

இப்பிடி ஒரு கேள்வியை நான் கேக்கவே சீனா சார்  மனைவி செல்வி சங்கர் அவங்களுக்கு  நான் கேட்டகேள்விதான் காரணம். ( அதுவும் சாட்டர்டே ஜாலிகார்னர்தான் -  செல்வி சங்கரின் எண்ணச்சிறகுகள் முளைத்த கதை.)    ஒரே வீட்டில் இருவர் பதிவரா இருப்பது பற்றிக் கேட்டிருந்தேன். அதை முகநூலில் பகிர்ந்தபோது எங்க வீட்டில் 5 பேர் பதிவரா இருக்கோம்னு கல்யாணி மேம் சொன்னாங்க. அட அப்பிடியா யார் யாரெல்லாம் அவங்க. அது பத்தியும் சொல்லுங்கன்னு கேட்டிருந்தேன்.

”எனக்காக சிரமப்பட்டு டைம் ஒதுக்கி ( ஒன்றரை ) மாசமா அனுப்பினதுக்கு தாங்க்ஸ் . உம்மா ”என்று நான்  இன்பாக்ஸில் எழுதி வைக்க அதுக்கு இவர் பதில் “இதில் எனக்கும் சந்தோஷமே! வெறும் உம்மாதானே இருக்கி அணைச்சு இல்லையா? ஹி..ஹி..” என பதிலளிக்க அட.. நமக்கு மேல ஜாலிவாலாவா இருப்பாங்க போலிருக்கேன்னு  ரசிச்சேன். சரி வாங்க இவங்க கொடுத்த சுவாரசியமான பதில படிக்கப்  போகலாம்.

/// கல்யாணி மேம் ,உங்கள் குடும்பத்தில் உள்ள 5 பதிவர்கள் பற்றியும் பதிவுலகம் உங்களுக்கு எப்படி அறிமுகமாச்சு என்பது பற்றியும் கூறுங்களேன்//



அன்பு தேன்,
கிறிஸ்துமஸ்- புத்தாண்டு வாழ்த்துக்கள் !
என்னையும் மதிச்சு பதிவு எழுத அழைத்தமைக்கு நனறி.
ஐந்து பதிவர்கள் ஒரே குடும்பத்தில்
இப்படி எங்கேயும் உண்டா அல்லது நாங்கள்தான் முதலாவதா? நீங்கதான் சொல்லவேண்டும்.
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வோம்  ஜோக் அடித்துக்கொள்வோம்.  இதற்கு எங்கள் பெரிய அண்ணச்சிதான் இன்ஸ்பிரேஷன். கேட்பவர்கள் ரசிப்பார்கள். இதில் மறைந்த என் அருமைத் தங்கை கோமாதான் முதன்முதலில் பத்திரிகைகளுக்கு நகைச்சுவை துணுக்குகளும் தகவல்களும் எழுத ஆரம்பித்தாள்.  என்னையும் எழுத தூண்டினாள். என் சோம்பேறித்தனம், செய்யவில்லை. என்னுடைய எழுத்தாற்றல்(அப்படி சொல்லலாமா?)  கிணற்றுக்குள் போட்ட கல்லாகவே கிடந்தது..எனக்கும் தெரியாமலே.

பின்னாளில் அமெரிக்காவிலிருந்த என் மகள் லஷ்மிக்கு பிரசவம் பார்க்க அங்கே சென்றேன். அப்போது அங்கு குழந்தையின் வேலைகள்-மகளுக்கு பத்தியம் எல்லாம் முடித்து மீதி நேரம் நிறைய இருந்தது. மருமகன் சிவா அவரது மடிக்கணினியை கொடுத்து தமிழ்மணம் வெப்சைட்டை அறிமுகப்படுத்தி இதில் உள்ள பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தால் பொழுது போய்விடும் என்றார்.  வாசிக்க வாசிக்க படு சுவாரஸ்யமாயிருந்தது. அதில் பின்னூட்டங்கள் பார்த்து நானும் கற்றுக் கொண்டு அனானி கமென்டுகள் போடப் போட...எங்கே வந்த வேலையை மறந்துவிடுவோமோ என்னும் அளவுக்கு அதில் மூழ்கிப்போனேன்.  அப்போது சிவாவும் ஒரு பதிவர்.

மற்ற பதிவுகளுக்கு அனானி ஆப்ஷனில் பின்னூட்டங்கள் போட்டுவிட்டு
சிவாவின் பதிவுகளுக்கு மட்டும் கமென்டுகள் போட்டு கடைசியில் 'நான்' என்று பேர் போடாமல் பதிவு செய்வேன்.  அவரும் என் பின்னூட்டங்களுக்கு தவறாமல் பதில் தருவார். படங்களுக்கு கவிதை நடையில் விமர்சிப்பேன். இப்படி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது.  லஷ்மியிடம் நான் முதலிலேயே சொல்லியிருந்தேன் 'நான்' தான் நான் என்று சொல்லக் கூடாது என்று. அவரும் என் பதில்களைப் பற்றி அவளிடம் யாரென்று தெரியவில்லை , நல்லாருக்கு என்று சிலாகிப்பார்.  நான் சொல்லியிருந்ததால் அவளும் கப்சிப்.

யாரென்று தெரியவில்லையே அவராயிருக்குமோ இவளாயிருக்குமோ என்று அவரும் தலையை பிச்சுக் கொண்டிருந்தார்.  காரணம் என் பின்னூட்டங்கள் ஒரு மாமியார்(அவரென்னை அம்மா என்றே அழைப்பார்) போடும் கமென்டுகள் போலிருக்காது. சக மனுஷியுடையது போலிருக்கும்.  ஒரு பதிவில் 'நீங்கள் யாரென்று தெரியவில்லை..நான் நான் என்று அனானி கமென்டுகள் போடுவதால் நீங்கள் நானானியா?  (நான்+அனானி=நானானி) என்று கேட்டிருந்தார். அந்தப் பெயர் மிகவும் பிடித்துப் போயிற்று.

இப்படி அனானி பின்னூட்டங்கள் மட்டுமே போட்டுக்கொண்டிருந்த எனக்கு, நீங்களும் எழுதலாம் என்று எனக்கும் ஒரு பதிவு ஆரம்பித்துத் தந்தார் (மரு)மகன் சிவா. என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் அடி எடுத்துக் கொடுத்தார். என்ன பேரு வெக்கலாம் எப்படி அழைக்கலாம் என்றதற்கு அமெரிக்காவில் 9-west என்று ஒரு ஷூ கடை பார்த்து அட! எங்க பொறந்த வீட்டு விலாசமாச்சே என்று மகிழ்ந்து அந்த கடை வாசலில் நின்று படமெடுத்துக் கொண்டேன். அது ஞாபகம் வந்து அதையே பேராக வைக்கலாம் என்று முடிவு செய்தோம்.


முதன்முதலாக வெளியுலகில் கால் பதிக்கப் போவதால் சொந்தப் பேர் வேண்டாமென்று அவர் வைத்த 'நானானி' என்ற பேரையே என் பதிவுக்கான பேராக தேரிவு செய்து கொண்டேன். 

எங்கள் குடும்பம் ஷன்னு சிவாப்பாவுடன் மற்றும் கணவர் சங்கர், மகள் லஷ்மி, மகன் ஆனந்த்
 
பதிவுலகில் நானானி என்ற பெயர் பிரபலமாகி பேர் காரணம் என்ன என்று நிறைய பேர் கேட்கவாரம்பித்தார்கள். அத்தனை பேருக்கும் சளைக்காமல் பேர் காரணமும் 9-west க்கான காரணமும் சொல்லி சொல்லி மாய்ந்து போனேன்...சந்தோஷமாக.

எழுத எழுத தூர் வாரிய கிணறு போல் உள்ளே அடைந்து கிடந்தவைகள் எல்லாம் மடமட வென்று கிளம்பின.  ஆரம்பத்தில் ரொம்ப பதவிசாக எழுதிக் கொண்டிருந்தவள்...மெல்ல மெல்ல உள்ளேயே ஊறிப்போன நக்கல், நய்யாண்டி,கிண்டல், கேலி எல்லா சுவைகளும் கலந்து எழுதலானேன். இதற்கு முக்கிய காரணம் பதிவுலக டீச்சரும் என் அன்புக்குரிய தோழியுமான துள்சி கோபால்தான். அவரது நடையெழுத்தழகு என்னை மிகவும் கவர்ந்தது. 
எனக்கு முதல் பதிவுலக தோழியாக கிடைத்தவர் அன்பு வல்லியம்மா.
அன்பு வழியும் இவரது பதிவுகள் ரொம்பப் பிடிக்கும்.   இப்படி எண்ணிலடங்கா தோழர்களும் தோழிகளும் கிடைத்ததும் அந்த அருமைகளில் திக்குமுக்காடிப் போனேன்.

ஆரம்பித்த சில நாட்களிலேயே 2007 ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் இந்தியா திரும்புவதற்குள் நிறைய பதிவுகள் வந்துவிட்டன. பதிவு எழுதுவதை விட பின்னூட்டங்கள் வாசிப்பது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
இது பற்றி என் குடும்பத்தில் முக்கியமாக மறைந்த அன்புத் தங்கை கோமா, ராமலஷ்மி இவர்களிடம் மூச்சு விடவில்லை. அவர்களாகப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று காத்திருந்தேன்.

கோமா படித்துவிட்டு ராமலஷ்மியிடம் போனில் 'கல்யாணியா? எவ்வளவு எழுதியிருக்கிறாள்! என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாள். அவள்தான் ஆரம்பத்தில் என்னை எழுதத் தூண்டியவள். என் சோம்பேறித்தனத்தில் பேசாமலிருந்துவிட்டேன். ராமலஷ்மியும் கோமாவும் ஏற்கனவே திண்ணையில் எழுதிக்கொண்டிருந்தவர்கள்..எனக்குப் பின்னே அவர்களும் பதிவுலகில் காலடி எடித்து வைத்தார்கள். கோமா தன் நகைச்சுவை எழுத்துக்களாலும் சிந்தனையை தூண்டும் கவிதை,கட்டுரைகளால் எல்லோரையும் கவர்ந்தாள். ராமலஷ்மியோ கேட்கவே வேண்டாம்....எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டாள். எனக்கு அதில் மிகவும் பெருமை!

 
நான்,மகள்லஷ்மி,பேரன் ஷன்னு ராமலஷ்மி

நானும் கோமாவும்

After a lo...ng lo..ng commercial break. காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். எங்கே முடித்தேன்? ஆங்!

நாங்களும் சிவாவும்
 
கடைசியில் சிவா என்னை அதாவது 'நான்' என்ற என்னை எப்படி கண்டுபிடித்தார்? யாராயிருக்கும்...இந்த ஃப்ரன்ட் மனைவியா..அவர் இப்படி எழுத மாட்டாரே என்றெல்லாம் குழம்பி, லஷ்மியிடம் உனக்குத் தெரியுமா?
அவள் கப்சிப் , தாய் சொல்லை தட்டாத தனயள்.
கம்ப்யூட்டர் கில்லாடிகளுக்குத்தான் எங்கெங்கோ குடைந்து எப்படியோ துளாவி கண்டுபிடிக்கத்தெரியுமே அப்படி கண்டுபிடித்ததும் ,'ஹே! லஷ்மி! இது நம்ம வீட்டிலிருந்துதான் போகிறது. அப்ப அம்மாவா? என்றதும் அந்த கள்ளி ஆமாம் என்றிருக்கிறாள். ஏன் ஷொல்லவேயில்லை என்றதுக்கு அன்னையின் ஆணை என்றாளாம்.
அதன் பிறகு எனக்கான பதில்களெல்லாம் , தமிழ்நாட்டில் 'அம்மா' என்றால் எப்படி பணிவார்களோ அதுபோல் மிகவும் மரியாதையாகவே வந்தது.
சூப்பர் அம்மா!, நல்லாருக்கு, என்ற ரேஞ்ஜில். இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் கல்யாணி!  நொந்துட்டேன்.

 http://vinmathi.blogspot.in/  நெல்லை சிவா என்ற பேரில் சிவாவின் லிங் .  இதில் camerapaervai.blogspot.com என்ற துணைப் பதிவில் போய் பார்க்கலாம்.

மாலா@ராமலஷ்மி பத்தி சொல்லவே வேண்டாம். அவளது பிறந்தநாள் வாழ்த்து பதிவில்தான் எங்க குடும்பம் மொத்தமும் வெளிச்சத்துக்கு வந்தது

ராமலஷ்மியோடு
 


வடிவேல் முருகனும் நானும்

 
வடிவேல்முருகன் ஐந்து அண்ணன்களில் ஐந்தாவது அண்ணன்.
எங்கள் ப்ளாக்கெல்லாம் பார்த்து தானும் ஆரம்பிக்க ஆசைப்பட்டு,
சென்னை வந்தபோது அவருக்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்தார். ஐந்தாவதானதால் 'சகாதேவன்' என்ற பேரிலும், அவரது பள்ளி வாத்தியார் தன்னை செல்லமாக அழைக்கும் பெயரான 'வெடிவால்' என்ற பேரில்
என்று எழுதத் துவங்கினார். பல அரிய தகவல்களை தேடித்தேடி தம் பதிவுகளில் வழங்கினார். அதோடு திருநெல்வேலி ரோட்டரிசங்கம், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் குவிஸ் ப்ரோக்ராம்கள் நடத்தி குவிஸ் மாஸ்டர் என்றும் அறியப்பட்டார். ஆனால் இன்றும் ஏன் தன் பதிவுகள் எல்லாம் தமிழ்மணத்துக்கு போக மாட்டேங்குது என்ற குறை உண்டு. வீட்டிலுள்ள தில்லாங்கடிகள் முயறசி செய்தும் முடியவில்லை. யாராவது அவருக்கு உதவினால் நன்றியுடையவளாயிருப்பேன்.
அன்பு கோமா...தன் நகைச்சுவை பேச்சாலும் எழுத்தாலும் குடும்பத்திலும் வெளியிலும் அனைவராலும் கவரப்பட்டார். கோமா இருக்கும் இடம் காமா சோமா என்றிருக்காது...கலகல என்றிருக்கும்.
பதிவு ஆரம்பிக்கு முன் 'நுனிவால்' என்ற பெயரில் பின்னூட்டங்கள் தருவார்.  
 கோமாவும் நானும் (கடைசியாக அவளோடு  எடுத்தது)

இந்த லிங்கில் கோமாவின் ஹாஸ்ய ரசத்தை ரசித்துப் பருகலாம்.

கோமாவின் இன்ஸ்டென்ட் நகைச்சுவைக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒரு முறை குடும்ப விழா ஒன்றில் உறவினர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொல்வார்... வீடு பெருக்கி துடைப்பதை, 'நாங்கதான் வீட்டில் மாப் போடுவோம்' என்றார் உடனே கோமா, ஓ! அதனால்தான் உங்களை 'மாப்பிள்ளை' என்றழைக்கிறார்களோ?' என்றதும் எழுந்தது குபீர் சிரிப்பு! 

நாங்கள் மூவரும் எங்கள் பெரியக்காவோடு.
இதுதான் எங்களோடு கடைசியாக எடுத்த படம்.
மனசு வலிக்குது.
இந்த பதிவு அன்பு கோமாவுக்கு  எங்கள் காணிக்கை.(dedicate)

 
டிஸ்கி:- ஐந்து பதிவர்களையும் கண்டு பிரமித்தேன் நானானிமேம். தொடர்ந்து நால்வரும் எழுதலாமே.

கோமதி மேம் இல்லாதது பெரும் வருத்தம்தான். எனக்கு இரண்டு பிள்ளையார் படம் அனுப்பி இருக்காங்க. ( நான் மஹா கணபதிம் என்ற தலைப்பில் முகநூலில் விநாயகர் படங்களைப் பகிர்ந்த போது அதை இன்பாக்ஸில் அனுப்பி வைத்தார். அதையே என் வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளேன். அவர் ஞாபகமாக என்னிடமும் இரு பிள்ளையார்கள் இருக்கிறார்கள். ) .

ஐம்பெரும் பதிவர்களின் சார்பாகவும் நம் வலையுலகம் சார்பாகவும் கோமதி மேமுக்கு நமது அஞ்சலியை என்னுடைய வலைத்தளம் சும்மாவின் மூலம் சமர்ப்பிக்கிறேன்.

ஜாலியா ஆரம்பிச்சு மனசு கனத்துப் போச்சு. உங்க குடும்பத்தில் இருக்கும் பதிவர்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நானானிம்மா.

20 கருத்துகள்:

  1. நானானி அவர்களின் பேட்டி அருமை.
    ஜாலியாக சென்று பின் கோமா அவர்களின் நினைவால் மனம் கனத்து போனது.
    என்னை எழுத தூண்டியவரும் கோமா அவர்கள் தான். எழுத ஆரம்பித்தவுடன் முதல் ஆளாக வந்து பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவார்கள்.

    மூன்று படங்கள் தெரிகிறது மற்ற படங்கள் தெரியவில்லையே!
    அனைத்து குடும்ப பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //நான்,மகள்லஷ்மி,பேரன் ஷன்னு ராமலஷ்மி//

    இந்தப் புகைப்படம் எடுத்து விட்டீர்கள் போல! Gone என்கிறது. படம் தெரியவில்லை. கேமிரா பார்வை ப்ளாக்ஸ்பாட் திறக்கவில்லை. அடுத்தடுத்த படங்களும் காணோம்! இரண்டு படங்கள் மட்டுமே திறக்கின்றன. கோமா அவர்களின் தளத்துக்கு நான் சென்றதுண்டு. பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.

    சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அது என்ன மாயமோ தெரியல.

    எல்லாரும் சாட்டர்டே ஜாலிகார்னருக்கு அனுப்புற ஃபோட்டோஸை போடுறேன். அது இங்கே வரமாட்டேங்குது.

    ஷேர் வித் நு கம்ப்யூட்டர்ல இருக்கத சரி பண்ணனும்னு நினைக்கிறேன். என் கம்ப்யூட்டர்ல டவுன்லோட்ஸ்ல நானானிம்மா ந்னு 6, 7 படம் சேவ் பண்ணி வைச்சிருக்கேன். அவங்க அனுப்பினது. அதத்தான் போட்டேன்.

    ஹ்ம்ம்ம் இதுக்கு யாராவது தீர்வு சொல்லணும். என்ன செய்யலாம்னு.

    பதிலளிநீக்கு
  4. அன்பு தேன்!
    ரொம்ப நல்லாருக்கு. இத..இத..இத நான் எதிர்பாக்கலை. படங்கள் தெரியவில்லைக்கு என்ன செய்யலாம் என்று எங்கூட்டு தில்லலங்கடியை கேட்டு சொல்கிறேன். இந்த மகிழ்ச்சியை எப்படி கொண்டாடுவது ?

    பதிலளிநீக்கு
  5. ஆதிபதிவர் நானில்லை. நெல்லை சிவாதான் ஆதிபதிவர்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையாக சுவாரஸ்யமான பதில்கள் கொடுத்திருக்கிறார் நானானி மேம். அவரின் முகபுத்தகத்திலும் வாசித்திருக்கேன். அவர்க்கு என் வாழ்த்துக்கள்.
    தேனக்காவிற்கு என் நன்றிகள். சில படங்கள் ஓபன் ஆகல அக்கா.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் நானானி aka கல்யாணி மேடம் ..உங்களை வல்லிம்மா பக்கம் பார்த்திருக்கேன் ..அருமையான பேட்டி .
    தேனக்கா சில படங்கள் தெரியவில்லை


    பதிலளிநீக்கு
  8. அருமையான பேட்டி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. அருமையான பேட்டி. இருவருக்கும் வாழ்த்துகள். அத்தை கோமா அவர்களுக்கு அஞ்சலியாக அமைந்திருப்பது நெகிழ வைக்கிறது.

    ---

    படங்கள் Jpg format_ல்தானே உள்ளன? எதற்கும் ஃபைல் பெயர் மாற்றி மறுபடி முயன்று பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. கலக்கல் பேட்டி. கோமாக்காவோடு சாட் பண்ணிருக்கேன். இன்ஸ்டண்ட் காமெடியின் சாட்டை முடிக்கவே மனசு வராது.

    ஆனா ஒரு டவுட்டு. உங்களுக்கும் கோமாக்காவும் opposite-ஆகத்தானே ராமலக்ஷ்மிக்கா இருக்காங்க. ரொம்ப அமைதியா, சாந்தமா ..... அவங்ககூட பேசும்போது எனக்கே ஒரு பயம் - பணிவு வந்துடுது. உங்ககிட்ட, கோமாக்கா பதிவுகளில் பின்னூட்டும்போது எனக்கு வராத பணிவு-பயம், அவங்க பதிவில் எனக்கு தன்னால வந்துடுது. :-)

    பதிலளிநீக்கு
  11. கருத்துக்கு நன்றி கோமதி மேம். எனக்கும் கோமதி மேம் ஞாபகம் வந்தது . அதான் முடிவில் வேறேதும் எழுத தோணல.

    நன்றி ஸ்ரீராம். எனக்கும் காமிரா பார்வை ப்லாக் ஓபன் ஆகலை. புகைப்படங்களை நான் மட்டும் பார்க்கிறேன். என்ன செய்ய் ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  12. நானானி மேம் 2007 என்பதால் ஆதிபதிவர் என்று ஒரு ரிதமுக்காக எழுதினேன். ( ஐம்பெரும் என்பதற்கு எதுகை மோனையா )

    சரி திருநெல்வேலி அல்வா கால் கிலோ வாங்கி அனுப்புங்க. அவ்ளதையும் நானே சாப்பிடுவேன் :) ஹிஹி.

    பதிலளிநீக்கு
  13. நன்றி அம்மு. அண்ட் நன்றி ஏஞ்சல். புகைப்படம் எனக்குதெரியுது. யாராச்சும் வழி சொன்னா பார்க்கலாம்.ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  14. நன்றி தனபாலன் சகோ

    ராமலெக்ஷ்மி பசங்க யாருக்கும் நேரமில்லை. நேரில் உங்களை அடுத்து பார்க்கும்போதுதான் கேட்டுக்கணும்

    ஹுசைனம்மா என் உடன்பிறப்பே. நாம ஒரே ரத்தத்தின் ரத்தம். ஹாஹாஹா. அப்பிடித்தான்.

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  16. சில படங்கள் தெரியவில்லை. முக்கியமாய்க் கோமா இருக்கும் படங்கள். நானானி எனக்கும் 2007 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் ஆனார். ஆனால் மிகப் பழைய பதிவர் என்றே எண்ணி இருந்தேன். கோமாவின் பதிவுகளுக்கும் போயிருக்கேன். அவர் மறைவு உண்மையில் அதிர்ச்சி தான் என்றாலும் மனோதிடத்தோடு போராடினார். :( நெல்லை சிவா உங்கள் உறவினர் என்பது தெரியாது. பதிவுகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நானானி மேடம், சிவா அவர்களின் பதிவின் லிங்க் கொடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  18. சில படங்கள் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை வேறு பெயரில் சேமித்து தரவேற்றம் செய்து பாருங்களேன்....

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. அன்புச் சகோதரி திருமதி தேனம்மைலட்சுமணன் அவர்களுக்கு,வாரப்பத்திரிகை ஒன்றில் தங்கள் பதிவை பற்றி அறிந்து அதுமுதல் தங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் தங்களின் கருத்துகள் இருக்கின்றன! நானானி பற்றி எழுதியது மிகவும் அருமை! புதிய வலைப்பதிவாளர்களுக்கு தாங்கள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  20. அன்புத்தோழியின் பேட்டி வந்ததே எனக்குத் தெரியாமப் போச்சேப்பா:( ஆனால் கண்ணில் படணுமுன்னு இருந்தால் பட்டே தீரும் என்பது உண்மை. இன்று பட்டுருச்சுப் பாருங்க. வலைச்சரத்தில் தமிழ் இளங்கோ சொல்லி நான் அங்கெ போய்ப் பார்த்தால் நம்ம ஆளு! நானானியின் ரங்குஸ் & துள்சியின் ரங்க்ஸ் ரெண்டுபேரும் உறவுக்காரர்கள். ஒரே குருகுல வாசம்!

    முதல்முறை கோமாவை மிஸ் செஞ்சுட்டேன். கல்யாணி வீட்டுக்கு நவராத்ரி கொலு பார்க்கப்போய், வெளியே வரும் சமயம் உள்ளே நுழைந்த இன்னொரு விஸிட்டர் கோமான்னு அப்போ தெரியாமல் போச்சு. அப்புறம் சிலவருசம் கழிச்சு அவுங்களை அதே வீட்டில் சந்தித்தேன். ஆனால் அது கடைசி சந்திப்புன்னு அப்போ தெரியலை:( அந்த பஞ்ச(பாண்டவர்) பதிவர்களையும் சந்தித்தவள் என்பதில் எனக்கு பெருமை கொஞ்சம் அதிகம்தான்:-)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...