எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 நவம்பர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2



வள் புதியவளுக்காக விஐபியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அதைப் பற்றிய விவரத்தை அனுப்பினால் புடவை பரிசு  என்று அறிவித்திருந்தார் மை பாரதிராஜா. உடனே எங்கள் முகநூல் நண்பர்( இயக்குநர் & நடிகர்  சேரன் பாண்டியன் ) சேரன் அவர்களை  நாங்கள் எங்கள் அன்பு ராஜிக்கா சிங்கப்பூரிலிருந்து வந்தபோது பார்க்கச் சென்றோம். அப்போது எடுத்த புகைப்படத்தைக் குறிப்போடு எழுதி அனுப்பினேன். உடன் புடவைப் பார்சல் வந்துவிட்டது.
 


இவள் புதியவளில் வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் அறிமுகத்துக்குப் பின் கவிதைகள் கட்டுரைகள் வெளிவரத் துவங்கின. கோதை, ஆண்டாள், வெங்கட் சபா, தேனு, தேனம்மைலெக்ஷ்மணன் என்று புனை பெயரிலும் சொந்தப் பெயரிலும் எழுதத் துவங்கினேன். சில சமயம் என்னுடைய கட்டுரைகளும் வாங்கிக்கொடுத்த கட்டுரைகளுமாக 6, 7 கூட இடம்பெறத் துவங்கின காலம் அது.அந்த கால கட்டத்தில் இரு கவிதைகளை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். !


குண்டூஸ் பார் எவர் என்ற கட்டுரைக்கும் நான் ட்ரெட்மில்லில் நடக்கும் புகைப்படத்துடன் வேண்டும் என்று கேட்டு வெளியிட்டிருந்தார்கள்.


அவள் விகடனில் வலைப்பூவரசியாக அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர்களே தேர்ந்தெடுத்து வெளியிட்ட புகைப்படம்.  அப்போது ஒன்றரை லெட்சம் பார்வையாளர்களைக் கடந்திருந்த என் வலைப்பூ இப்போது மூன்றரை லெட்சம் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அவள் விகடன் பொங்கல் சிறப்பிதழுக்காக செட்டிநாட்டுப் பொங்கல் முறைகள் பற்றிக் கேட்டிருந்தார்கள். பல பக்கங்கள் எழுதி அனுப்பினேன். இரு பக்கங்களில் என் துணைவரோடு சென்னையில் பொங்கல் வைத்த படமும் வெளியாகி இருந்தது


குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு கேட்டிருந்தார்கள் அது என் புகைப்படத்தோடு வெளியாகி இருந்தது


குமுதம் பக்தி ஸ்பெஷலில் தீபாவளி இஷ்யூவுக்காக  அதில் எழுதி வந்த அனைவரின் புகைப்படமும் வெளியாகி இருந்தது. அப்போது அதில் கோலங்கள் வரைந்து அனுப்பிக் கொண்டிருந்த என் புகைப்படமும் வெளியாகும் அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. (இப்போது நைவேத்தியக் குறிப்புகளும் அனுப்புகிறேன். )


குமுதம் ஹெல்த் ப்ளஸ்ஸில் மேக்கப்புக்கு பேக்கப் என்ற தலைப்பில் அனைவரிடமும் கருத்துக் கணிப்பு நிகழ்த்தப்பட்டது. அப்போது வலைப்பதிவர் கருத்தாக என்னிடமும் கேட்கப்பட்டது. அது புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது.

முதன் முதலில் குங்குமத்தில் என்னிடம் இணையத்தில் எழுதுவது பற்றிக் கேட்டு வெளியிட்டிருந்தார்கள். அப்போது அது என் புகைப்படத்துடன் வெளியாக சென்னையில் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் நான் ஒரு எழுத்தாளர் வலைப்பதிவர் என்று அறிந்து ஆச்சர்யப்பட்டார்கள்


குங்குமத்தில் சின்மயிக்கு ட்விட்டரின் மூலம் ஏற்பட்ட ப்ரச்சனையின் அடிப்படையில் பெண்கள் முகநூல் ட்விட்டர்  உபயோகிப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு அது புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது


-- நன்றி இவள் புதியவள், அவள் விகடன், குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், குங்குமம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க

1.
பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

2. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2 

3. பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.

4. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4. 

5. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5
 

4 கருத்துகள்:

  1. ஆஹா... எத்தனை பத்திரிக்கைகள்...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அக்கா.
    சேரனுடைய படங்கள் எனக்கு பிடிக்கும்.அவருடன் சந்திப்பு வாவ்.அவள் பொங்கல் சிறப்பிதழ் ல் உங்கள் செட்டிநாட்டு பொங்கல் முறைகள் நானும் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி குமார் :)

    மிக்க நன்றி ப்ரிய சகி :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...