எங்கள் வாழ்க்கை உங்களுக்கு வேடிக்கையா என்ற பாவனை இவர் முகத்தில்.
நாடோடி வாழ்க்கை சுதந்திரமானதா
A good traveller has no fixed plans and is not intent on arriving (Lao Tzu)
Home is the here and now (Buddhism)
Not all those who wander are lost (JRR Tolkien)
In a world full of people, only some want to fly. Isn’t that crazy? (Seal)
இன்னும் எத்தனை எத்தனைதான் சொன்னால் என்ன . நாடோடியாய் அலைவது சுதந்திரமா இல்லை வயிற்றுப்பாடா.
ராஜஸ்தானியர்கள், மத்தியப் ப்ரதேசம், உத்திரப் ப்ரதேசத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் கழைக்கூத்தாடிகளாக, பாம்பாட்டிகளாக, குரங்காட்டிகளாக, உல்லன் பெட்ஷீட்டுகள், போர்வைகள் விற்பது, பொம்மைகள் செய்து ப்ளாட்ஃபாரத்தில் அடுக்கி இருப்பது, கூடை சேர் சோஃபாசெட்டுகள் விற்பது, மூலிகைத் தைலம் மருந்துப் பொருட்கள் விற்பது என்றெல்லாம் பார்த்திருக்கலாம்.
சுதந்திர தினத்தை ஒட்டி மலர்க் கண்காட்சிக்கு பெங்களூரு லால்பாக் சென்றபோது நான் பார்த்த இந்த மக்கள் வெறும் 30 ரூ, 40
ரூபாய்க்காக அங்கே அணிகள் செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.
கணவன் மனைவியாக , பலர் கொண்ட குடும்பமாக எல்லாம் இருந்தார்கள். கழுத்துக்கு கைக்கு
மற்றும் கேட்ட விதத்தில் எல்லாம் கோர்த்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் எல்லாம் எங்கே
தங்குவார்கள் என்பது கேள்விக்குறி. பொம்மை, நாற்காலிகள் விற்கும் க்ரூப்பாவது ஒரு
வேன் அல்லது காரவேனில் வந்து விற்றுவிட்டு அங்கேயே டெண்ட் அடித்துத் தங்கி
சமைத்துச் சாப்பிட்டு பொழுதைக்கழித்து விட்டு 3 மாதம் கழித்து வேறூர் போவார்கள்.
கும்பகோணத்தில் உப்பிலி அப்பன் கோயில் போகும் வழியில் இப்படியான குழுமத்தை
அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
ஆனால் இவர்களைப் போன்றவர்கள் எங்கே தங்குவார்கள். எங்கே சமைத்து உண்பார்கள். காலைக்கடன்கள் கழித்து குளித்து
உடுப்பார்கள் என்பதெல்லாம் தெய்வத்துக்கே வெளிச்சம். எங்கள் வாழ்க்கை உங்களுக்கு வேடிக்கையா என்ற பாவனை இவர் முகத்தில்.
நிலையற்று நகரும் இவர்களைப் போன்றவர்களை எந்தப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆதிவாசி, தாழ்த்தப்பட்ட பட்டியலில்தான் வைத்திருப்பார்கள். இப்படி இவர்கள் ஊர் ஊராய் அலைய இவர்கள் பேர்
சொல்லி இவர்களுக்கு
வழங்கப்படும் சலுகைகள் எங்கே செல்கின்றன.
உஜ்ஜயினியில் ஒரு பாம்பாட்டியும் , நாகேஷ்வரில் ஒரு
குரங்காட்டியும் பார்த்தேன். அன்றாடத் தேவைகளுக்கே இவர்கள் அல்லாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
நாடோடி வாழ்க்கை வாழவேண்டும் என்று இவர்கள் செல்வதாகத் தெரியவில்லை. உணவுக்காகவும், துணிக்காகவும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களையும் பண்பாட்டுக் கலாச்சாரக் கிராமங்களில் தேர்ந்தெடுத்து
இடம் கொடுத்து வேலை அளிக்கலாம்
கல்விச்சலுகைகள் இவர்களின் வாரிசுகளுக்குக் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். அரசு சார் நிறுவனங்களில் கைவினைப்பொருள்
செய்யும் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படவேண்டும்.
எத்தனை எத்தனை மனிதர்கள் இப்படி - தங்களது சொந்த ஊர்களை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காய் ஊர் ஊராக திரிகிறார்கள். தில்லியிலும் இப்படி பலரை காண்பதுண்டு.....
பதிலளிநீக்குஅரசு இவர்களுக்கு உதவ வேண்டும் என்று நல்ல கருத்தை சொன்னீர்கள்.
பதிலளிநீக்குஇவர்களை போல நாடோடி வாழ்க்கை வாழும் மக்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
எல்லோரும் கவனிக்கப்படவேண்டியவர்கள்தான்.
ஆம் வெங்கட் வருத்தம் தரும் நிகழ்வு.
பதிலளிநீக்குஆம் கோமதி மேம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
வெளியில் பார்க்க வண்ணமயம் . உள்ளே எத்தனை குமுறலோ. ஜிப்சி வாழ்க்கை அவர்களாகத் தேர்ந்தெடுத்ததா. திணிக்கப் பட்டதா. தண்ணீர் இல்லாத ஊரிலிருந்து புறப்பட்டு விட்டார்கள். தீண்டாமை கூடத் தாக்கி இருக்கலாம்.
பதிலளிநீக்குஇப்போது இவர்களைப் பல இடங்களில் காண முடிகின்றாது. தங்கள் ஊரை விட்டு அரைச் சாண் வயிறு படுத்தும் பாட்டிற்காகவௌம், இன்ன பிற பல காரணங்களுக்காகவும், ஊரூராகச் சுற்றி...அவர்கள் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும்!
பதிலளிநீக்குஆம். பெங்களூரிலும் இவர்களை அதிகம் பார்க்கலாம். நிரந்தரமாக நடைபாதைகளில் கடை போட்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். படங்களும் பகிர்வும் நன்று.
பதிலளிநீக்குநன்றி ரத்னவேல் ஐயா
பதிலளிநீக்குநன்றி துளசிதரன்சார்
நன்றி ராமலெக்ஷ்மி